டாடா எல்லாம் ஓரமா போ! மஹிந்திராவின் இந்த காரை பத்தி தான் இப்ப ஊரே பேசுது!

மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ.05 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த கார் பெங்களூருவில் உள்ள சாலையில் சோதனை செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ நமக்கு கிடைத்துள்ளது. இதன்படி மஹிந்திரா நிறுவனம் பிஇ.05 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் என்னென்ன அம்சங்களை வழங்கி உள்ளது என இந்த ஸ்பை புகைப்படங்களில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களை குறி வைத்து தங்கள் தயாரிப்பை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். புதிய முதலீடுகள் எல்லாம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதலீடு செய்கிறார்கள். அதன்படி மஹிந்திரா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன முதலீட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

Mahindra BE 05

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் பிஇ.05 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை தற்போது தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கான தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது .இந்நிலையில் இந்த காரை அந்நிறுவனம் இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. இப்படியாக இந்த கார் பெங்களூருவில் சோதனையில் செய்யப்படும் போது நமது கேமரா கண்களுக்கு சிக்கியது.

இதில் இந்த காரின் வெளிப்புற பகுதி முழுவதுமாக மூடப்பட்ட பகுதியாக இருக்கிறது இதில் புதிய தகவல்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை என்றாலும், இந்த காரின் உட்புறம் உள்ள சில அம்சங்கள் நமக்கு இந்த புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த காரின் உட்புறம் பெரிய டூயல் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காகவும் மற்றொன்று டிரைவர் டிஸ்ப்ளேக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

Mahindra BE 05

இதுபோக இந்த இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டேரிங் வீல் பொருத்தப்பட்டுள்ள காராக இருக்கிறது. இந்த ஸ்டேரிங் வீலுக்கு நடுவே பிஇ என்ற லோகோ இலுமினேட் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ எலெக்ட்ரிக் கார்களில் எல்லாம் இந்த ஸ்டெரிங் வீலை பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த காரின் டிசைன் வடிவமைப்பை பொறுத்தவரை பிஇ.05 காரின் கான்செப்ட் வெர்ஷன் எப்படி வந்ததோ கிட்டத்தட்ட அதே வடிவமைப்பில் தான் இருக்கிறது. இதன் முன் பக்க புரோபைல் சற்று ஷார்பாகவும் பானட் பகுதி பாயிண்டாகவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் ஸ்லீம்மான பம்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரின் பின்பக்கம் ஸ்பாய்லர்கள் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பாப்-அப் செய்யக்கூடிய டோர் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.

Mahindra BE 05

நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த பிஇ.05 காரில் மஹிந்திரா நிறுவனம் 60 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கை பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இந்த கார் 5 முதல் 80 சதவீத பேட்டரியை வெறும் 30 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றி விடும் என எதிர்பார்க்கலாம். மஹிந்திரா நிறுவனம் இந்த காரை எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக தனியாக உருவாக்கப்பட்ட இன்குளோ பிளாட்ஃபார்மில் உருவாக்குகிறது. மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் இந்த பிளாட்பார்மில் தான் உருவாக்க முடிவு செய்துள்ளது.

இந்த பிளாட்பார்மில் முன்பக்க வீல் டிரைவ், பின் பக்க வீல் டிரைவ், ஆல்வீல் டிரைவ் என அனைத்து விதமான ஆப்ஷன்களிலும் வாகனத்தை தயாரிக்க முடியும். இதில் பின்பக்க வீல் டிரைவ் கொண்ட கார்களில் 285 பிஎச்பி பவர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார், ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனில் 394 பிஎச்பி பவர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்த பிஇ.05 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். அப்பொழுது இந்த கார் ரூபாய் 25 லட்சம் என்ற விலையில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்த செக்மெண்டில் எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் ஹுண்டாய் கோனா இவி ஆகிய கார்கள் விற்பனையாகி வருகின்றன. விரைவில் ஹூண்டாய் கிரெக்டா இவி மற்றும் டாடா கர்வ் ஆகிய கார்களும் அறிமுகமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 27, 2024, 22:30 [IST]
English summary
Mahindra be 05 spotted in bengaluru testing know full details
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X