ரஹ்மான் மியூசிக் உடன் வெளியாகப்போகும் கார்! இளையராஜா என்ன தக்காளி தொக்கா? அவருக்கு ஒரு காரை குடுங்கயா

மஹிந்திரா நிறுவனம் விரைவில் பிஇ 05 என்ற எலெக்ட்ரிக் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கார் வடிவ எஸ்யூவி ரக காராக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் நிலையில், இந்த கார் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த காரில் உள்ள சட்டங்கள் எல்லாம் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உருவாக்கப்பட்ட சத்தமாக இருக்கப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் அடுத்த மிகப்பெரிய அறிமுகமாக தனது பிஇ என்ற சப்-பிராண்ட் மூலம் பிஇ 05 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை எல்லாம் நிறுவனம் செய்து வருகிறது. இந்த கார் ஸ்போர்ட்டுடன் கூடிய கூபே ஸ்டைல் எஸ்யூவி ரக காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Mahindra BE 05 ar rahman

இந்த காரின் கான்செப்ட் கார் போலவே இந்த காரின் வடிவமைப்பு பெரும்பாலான பகுதிகளில் இருக்கிறது. பாக்ஸியான லுக் இந்த காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த காரின் வெளியீடு இருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் இந்த காரை நிறுவனம் நான்கு மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் வடிவமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த காரின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த காரில் ஃபிளாஷ் டோர் ஹேண்டில்கள் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கான்செப்ட் காரிலேயே இந்த வடிவமைப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கார் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பொதுவாக கார் வடிவமைக்கப்படும்போது அதற்கான சவுண்ட் சிஸ்டங்களை வடிவமைக்கும் அம்சங்கள் மிக முக்கிய இடத்தை பிடிக்கிறது. சவுண்ட் சிஸ்டங்கள் என்றால் காரில் உள்ள ஸ்பீக்கர்கள் மட்டுமல்ல இண்டிகேட்டர் போடும்போது எழுப்பப்படும் சத்தம், ஹாரன் சத்தம் காருக்குள் வரும் அறிவிப்புகள் குறித்த சட்டம் காருக்குள் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் பட்டன்களை அழுத்தும் போது ஏற்படும் சத்தம், இப்படியாக எங்கெல்லாம் சத்தம் வர வேண்டுமா அதையெல்லாம் வடிவமைக்க வேண்டிய பொறுப்பு மிக முக்கிய பொறுப்பாக இருக்கிறது.

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் இந்த பிஇ 05 காருக்கான சத்தத்தை வடிவமைக்கும் பொறுப்பை பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானிடம் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இனி அவர் வடிவமைக்கப்படும் சத்தம்தான் இந்த கார்களில் இடம் வரும் என எதிர்பார்க்கலாம்.சத்தம் மட்டுமல்லாமல் சவுண்ட் சிஸ்டத்துக்கான வடிவமைப்பையும் அவரை செய்யப் போவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்காக இந்த காரில் டால்பி அட்மாஸ் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மஹிந்திரா நிறுவனம் இந்த பிஇ 05 காரை நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் இங்குளோ என்ற பிளாட்பார்மில் தான் தயாரிக்கிறது. இந்த கார் சிறப்பான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முக்கியமாக இதன் ஸ்டீரிங் வீல் தனித்துவ அம்சம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம். இதுபோக இந்த காரில் 5 பேர் பயணம் செய்ய போதுமான அனைத்து வசதிகளும் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த பிஇ 05 காரின் பவர்டெரைனை பொருத்தவரை 79 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரைந்து தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த காருக்கு போட்டியாக இந்திய மார்க்கெட்டில் டாடா நிறுவனத்தின் கார் விற்பனையாகி வருகிறது.

இது போக மாருதி நிறுவனம் இவி எக்ஸ் என்ற காரையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. மஹிந்திரா நிறுவனம் விரைவில் இந்த பிஇ 05 காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது மார்க்கெட்டில் மிகப்பெரிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம். கூபே ஸ்டைல் எஸ்யூவி கார்கள் பிரபலமாகி வருகின்றன.

மேலும் இந்த காரில் ஸ்டேரிங் பகுதியிலேயே பொருத்தப்பட்டுள்ள ரீஜென் பிரேக்கிங்கிற்கான பெடல்கள் தனித்துவ அம்சம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் ரூ20 முதல் ரூ25 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது. ஜனவரி மாதம் நடக்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சியில் இந்த கார் அறிமுகமாவதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ 05 எலக்ட்ரிக் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தும்போது ஏஆர் ரஹ்மான் உருவாக்கும் மியூசிக் வைத்து இந்த காரை வடிவமைத்து களமிறக்கிறது. இது இந்த கார் மீதான ஈர்ப்பை மக்கள் மத்தியில் அதிகமாக்கும் முக்கியமாக இந்த காரில் பயணிக்கும் போது மக்களுக்கு இனிமையான பயணம் அனுபவம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிச்சயம் இது மிக சிறந்த முயற்சி தான்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 18:45 [IST]
English summary
Mahindra be 05 to have ev sounds made by ar rahman expected launch date
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+