பேட்டரிக்கு ஆயுசு முழுக்க உத்தரவாதம்... இந்த காலத்தில் யாருங்க இப்படி கொடுப்பா? மஹிந்திரா வேற லெவல்!!

மஹிந்திரா (Mahindra), எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதில் தீவிரமாக உள்ள கார் நிறுவனங்களுள் ஒன்று. கடந்த 2022ஆம் ஆண்டில் எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார் மூலமாக மொத்த மார்க்கெட்டையும் அதிர வைத்த மஹிந்திரா தற்போது புதியதாக வேறு இரு எலக்ட்ரிக் கார்களுடன் வந்துள்ளது. பிஇ 6இ (BE 6e) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) என்பன அவை இரண்டாகும். இந்த இரு எலக்ட்ரிக் கார்களை மஹிந்திரா அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்துள்ளது. மேலும், எதிர்பார்த்ததை போன்று இந்த எலக்ட்ரிக் கார்களின் ஆரம்ப விலையை மட்டும் மஹிந்திரா அறிவித்துள்ளது. இதில், பிஇ 6இ எலக்ட்ரிக் காரை பற்றிய விபரங்களை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரை தவிர்த்து, இனி வரும் போகும் எலக்ட்ரிக் கார்களை எல்லாம் பேட்டரி கார்களாக விற்பனைக்கு கொண்டுவர உள்ளதாக மஹிந்திரா ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து, முதல் பேட்டரி எலக்ட்ரிக் கார்கள் நவம்பர் 26இல் வெளியீடு செய்ய உள்ளதாக அறிவித்தது. அதன்படி, மஹிந்திரா பிஇ 6இ மற்றும் எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் கார்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன.

mahindra be 6e electric car

இரு எலக்ட்ரிக் கார்களும் காட்சிக்கு நிறுத்தப்பட்டு, கார்களை பற்றிய அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 2025 ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த எலக்ட்ரிக் கார்கள் 'பிஇ' என்கிற பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்பட உள்ளன. அதற்கான லோகோவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார்கள் மஹிந்திராவின் இன்க்லோ பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளன.

பிஇ 6இ எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.9 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர வேரியண்ட்களின் விலைகள் 2025 ஜனவரியில் அறிவிக்கப்படும். இந்த காரில் 20-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் டாப் வேரியண்ட்டில் வழங்கப்பட உள்ளன. காரில் இருந்து தனியாக தெரியும் வகையில் ஸ்பாய்லர் காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. முரட்டுத்தனமான பெல்ட்லைன் மற்றும் பளபளப்பான கருப்பு நிறத்தில் ஃப்ளோட்டிங் க்ளாடிங் உள்ளிட்டவையும் பிஇ 6இ எலக்ட்ரிக் காரில் கவனத்தை ஈர்க்கின்றன. இவற்றை விட நம்மை அதிகம் வசீகரிப்பது என்னவென்றால், காரின் கேபின் ஆகும்.

mahindra be 6e electric car

ஜெட் விமானங்களை போன்று டிரைவரின் தலைக்கு மேலே சில கண்ட்ரோல்களும், சிறிய திரையும் வழங்கப்பட்டுள்ளன. காருக்கு வெளிப்பக்கத்தில் நகை போன்றதான டிசைனில் ஹெட்லைட்கள், பளபளக்கும் லோகோ, அகலமான ஷோல்டர் லைன்கள் மற்றும் காருக்கு பின்பக்கத்தில் மிகவும் நீளமாக பிரம்மாண்டமான டிசைனில் டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. காருக்குள் கண்ணாடி ரூஃப் மற்றும் ஸ்டார்ரி லைட்கள் உடன் அதிகப்படியான இடவசதி உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திரா பிஇ 6இ எலக்ட்ரிக் காரின் நீளம் 4,371மிமீ ஆகும். தரையில் இருந்து காரின் அடிப்பகுதி ஆனது 207மிமீ உயரத்தில் உள்ளதாகவும், காரின் பேட்டரி இன்னும் 11மிமீ உயரமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்திரா தெரிவித்துள்ளது. காருக்கு பின்பக்கத்தில் பூட் ஸ்பேஸ் ஆனது 455 லிட்டர்கள் இடவசதி உடன் உள்ளது. அதேநேரம், முன்பக்க டிரங்க் பகுதி ஆனது 45 லிட்டர்கள் கொள்ளளவில் உள்ளது.

mahindra be 6e electric car

பிஇ 6இ மற்றும் எக்ஸ்.இ.வி 9இ என இரு எலக்ட்ரிக் கார்களும் மற்ற கார்களை காட்டிலும் கேபினை 40% விரைவாக குளிர்ச்சி அடைய செய்துவிடும் என கூறும் மஹிந்திரா, இந்த எலக்ட்ரிக் கார்கள் இரண்டிலும் சூரிய ஒளியின் அல்ட்ராவொய்லெட் கதிர்கள் நுழையாத வண்ணம் கண்ணாடிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன், கேபின் ஏர் ஃபில்டரும் அட்வான்ஸ்டு ஃபில்டர் சிஸ்டத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.

பிஇ 6இ மற்றும் எக்ஸ்.இ.வி 9இ என இரு எலக்ட்ரிக் கார்களிலும் 59kWh மற்றும் 79kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதவாது, இந்த இரு பேட்டரிகளில் ஒன்றுடன் இந்த எலக்ட்ரிக் கார்களை வாங்கலாம். இதில் 79kWh பேட்டரி மூலமாக 500கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம் என தெரிவித்துள்ள மஹிந்திரா, இந்த பேட்டரியை 175 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன் 20%-இல் இருந்து 80% சார்ஜை வெறும் 20 நிமிடத்தில் நிரப்பிவிடலாம் என தெரிவித்துள்ளது.

mahindra be 6e electric car

இந்த எலக்ட்ரிக் கார்களில் பொருத்தப்படும் பேட்டரிக்கு முழு ஆயுள் உத்தரவாதத்தை வழங்குவதாக மஹிந்திரா அதிரடியாக அறிவித்துள்ளது. ஆனால், காரை வாங்கும் முதல் ஓனர் மட்டுமே இந்த முழு ஆயுள் கால உத்தரவாதத்தை பெற முடியும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. செகண்ட்-ஹேண்டில் வாங்குவோர் காரின் வயதில் 10 வருடங்கள் அல்லது 2 லட்ச கிமீ வரையில் மட்டுமே உத்தரவாதத்தை பெற முடியுமாம்.

அதேபோல், முழு ஆயுள் பேட்டரி உத்தரவாதத்தை டாக்ஸி உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக வாங்குவோராலும் பெற முடியாதாம். பிஇ 6இ எலக்ட்ரிக் காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிடலாம். தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ள இரு எலக்ட்ரிக் கார்களிலும் மஹிந்திராவின் சோனிக் ஸ்டூடியோ உடன் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சவுண்ட் சிஸ்டத்துடன் டோல்பி அட்மஸ் டெக்னாலஜியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

mahindra be 6e electric car

காருக்குள் கேபின் மேற்கூரையை பல்வேறு விதமான கலர் ஆப்ஷன்களில் ஒளிரக்கூடியதாக பெறலாம். இது காரின் வேகத்திற்கு ஏற்ப மாற்றமடையும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. ரேஞ்ச், எவரிடே மற்றும் ரேஸ் என 3 விதமான டிரைவ் மோட்கள் இந்த எலக்ட்ரிக் கார்களில் வழங்கப்பட்டுள்ளன. தொழிற்நுட்ப வசதிகளை பொறுத்தவரையில், அடாஸ், 5 கேமராக்கள் உடன் 360-டிகிரி வியூ மற்றும் ஆட்டோபார்க் ஃபங்க்சன் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவின் எக்ஸ்.இ.வி 9இ மற்றும் பிஇ 6இ என 2 எலக்ட்ரிக் கார்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. எக்ஸ்.இ.வி 9இ லக்சரியான எலக்ட்ரிக் காராக ரூ.50 இலட்சம் என்கிற அளவிலான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்த்தோம். ஆனால், எக்ஸ்.இ.வி 9இ காரின் ஆரம்ப விலையும் பிஇ 6இ காரை காட்டிலும் வெறும் 3 லட்சம் மட்டுமே அதிகம். இதன் காரணமாகவே, இந்த இரு எலக்ட்ரிக் கார்களுக்கு இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 26, 2024, 21:29 [IST]
English summary
Mahindra be 6e electric car unveiled expected price design features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X