மஹிந்திராவின் அடுத்த சிக்ஸர்... ரூ.20 லட்சத்தில் இப்படியொரு எலக்ட்ரிக் காரை எதிர்பார்க்கவில்லை!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் புதியதாக அதன் 2 எலக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டுவருகிறது. பிஇ 6இ மற்றும் எக்ஸ்.இ.வி 9இ என்பன அந்த இரு எலக்ட்ரிக் கார்கள் ஆகும். மற்ற எந்தவொரு மஹிந்திரா காரிலும் இல்லாத வகையில், இந்த புதிய எலக்ட்ரிக் கார்களை மஹிந்திரா பிரத்யேகமாக உருவாக்கி உள்ளது. இதற்காக 'BE' என்கிற பிராண்டை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, இந்த இரு எலக்ட்ரிக் கார்களுக்காக மட்டுமில்லாமல், தனது எதிர்கால எலக்ட்ரிக் கார்களுக்காக மஹிந்திரா புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது.

எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் காருடன் ஒப்பிடுகையில், பிஇ 6இ ஆனது அளவில் சற்று சிறியதாகும். இதற்கேற்ப, பிஇ 6இ காரின் விலையும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மஹிந்திரா பிஇ 6இ எலக்ட்ரிக் காரை சென்னையில் நமது டிரைவ்ஸ்பார்க் குழு ஓட்டி பார்த்தது. அப்போது எங்களுக்கு கிடைக்க பெற்ற அனுபவங்களை ரிவியூவாக கீழேயுள்ள வீடியோவில் வழங்கியுள்ளோம்.

மஹிந்திரா அதன் புதிய எலக்ட்ரிக் கார் கான்செப்ட்களை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்தது. அவற்றின் அடிப்படையில்தான், எக்ஸ்.இ.வி 9இ மற்றும் பிஇ 6இ எலக்ட்ரிக் கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த எலக்ட்ரிக் கார்களின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே தற்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய பிஇ 6இ எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

mahindra be 6e review video

59kWh மற்றும் 79kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் பிஇ 6இ எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் 59kWh பேட்டரியின் உதவியுடன் அதிகப்பட்சமாக 535கிமீ தொலைவிற்கும், 79kWh பேட்டரியின் உதவியுடன் 682கிமீ தொலைவிற்கும் சிங்கிள்-சார்ஜில் காரை ஓட்டி செல்லலாம். பேட்டரிக்கு ஏற்ப அவற்றை சார்ஜ் செய்யும் நேரமும் வேறுப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, November 29, 2024, 18:06 [IST]
English summary
Mahindra be 6e electric car review video check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+