பெரும் பணக்காரர்களையும் தேடி வந்து வாங்க செய்ய போகும் மஹிந்திரா கார்கள் இவைதானா.. எம்ஜிக்கு பலமான அடி இருக்கு!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இந்தியாவில் வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி இரண்டு புத்தம் புதிய கார் மாடல்களை வெளியீடு செய்ய இருக்கின்றது. இரண்டுமே மின்சாரத்தில் இயங்கும் கார் (Electric Car) மாடல்கள் ஆகும். எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6இ (BE 6e), இந்த கார் மாடல்களையே நிறுவனம் வெளியீடு செய்ய உள்ளது. இவற்றின் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், தற்போது அக்கார்களை முழுமையாக காட்சிப்படுத்தக் கூடிய வீடியோவை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது.
கார் காதலர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இந்த வேலையை மஹிந்திரா பார்த்திருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் இந்தியாவிற்காக தயார் செய்திருக்கும் இந்த இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களும் சொகுசு கார்களுக்கு டஃப் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே அந்த கார்கள் குறித்து வெளியாகி இருக்கும் படங்கள் உள்ளன.

சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் கார் மாடலின் கேபின் படத்தை டீசராக வெளியிட்டிருந்தது. அந்த படத்தின் வாயிலாக லக்சூரி கார்களில் காணப்படக் கூடிய அம்சங்கள் சில எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரில் இடம் பெற்றிருப்பது தெரிய வந்தது. மூன்று பெரிய டிஜிட்டல் திரை மற்றும் சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கக் கூடிய இருக்கைகள் உள்ளிட்டவையே அதில் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
இதுபோன்று இன்னும் பல அம்சங்களை லக்சூரி கார்களுக்கு சவால் விடும் வகையில் இந்த எலெக்ட்ரிக் கார்கள் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவும் அமைந்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6இ இந்த இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் அந்த புதிய இங்க்ளோ (INGLO) பிளாட்பாரத்தில் வைத்தே தயார் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
மின்சார கார்களின் உற்பத்திக்காகவே நிறுவனத்தால் தயார் செய்யப்பட்ட ஓர் தரமான கட்டமைப்பு தளம் இதுவாகும். ஒரே பிளாட்பாரத்தைப் பயன்படுத்தி இந்த கார்கள் தயார் செய்யப்பட்டு இருந்தாலும் பார்ப்பதற்கு இரண்டும் தனித்துவமான லுக்கைக் கொண்டிருக்கின்றன. மிக முக்கியமாக இரண்டும் மிகவும் கவர்ச்சியான அழகைக் கொண்டிருக்கின்றன.
மேலும், எக்ஸ்இவி 9இ மஹிந்திராவின் தற்போதைய பட்டம்பூச்சி வடிவ லோகோவையே தாங்கி இருக்கின்றது. ஆனால், பிஇ 6இ கார் மாடலில் பிஇ எனும் எழுத்துக்களே லோகோவாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. எனவே இது இன்னும் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என தெரிகின்றது. பெரும் செல்வந்தர்களையும் தன் வசம் வளைத்துப் போடும் நோக்கில் அந்த காரை அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்ததாக அது தயாரித்திருக்கும் என்றும் யூகிக்கப்படுகின்றது.
ஆனால், இரண்டு கார்களிலும் என்ன மாதிரியான அம்சங்கள் எல்லாம் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது தெரியவில்லை. விரைவிலேயே இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், ஓர் முழு சார்ஜில் 500 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்சை வழங்கக் கூடிய கார்களாகவும் இவை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6இ இந்த இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இதன் விலை மற்றும் ரேஞ்ச் திறன் போன்ற முக்கிய விபரங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம். இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடாவின் கர்வ் இவி மற்றும் எம்ஜி-யின் விண்ட்ஸர் இவி உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications








