டெஸ்லா கார் மாதிரியே செம காரை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா! இந்த தேதியை காலண்டர்ல நோட் பண்ணி வச்சுக்கோங்க!

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் காரான பிஇ.05 என்ற எலெக்ட்ரிக் காரை வரும் நவம்பர் 26ம் தேதி இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தயாராகி வருகின்றன. மஹிந்திரா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரில் என்னென்ன புதிய விஷயங்களை எல்லாம் உட்புகுத்தியுள்ளது. இது மார்க்கெட்டில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் தற்போது தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதில் பல்வேறு விதமான தயாரிப்புகள் உள்ளன. முக்கியமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகமாக உள்ளன. தற்போது மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி.இ மற்றும் பிஇ சீரியஸில் எலெக்ட்ரிக் வாகனங்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகின்றன.

mahindra be 05

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தான் ஐந்து டோர் கொண்ட தார் ராக்ஸ் என்ற ஆப்-ரோடு எஸ்யூவி ஸ்டைல் காரை அறிமுகப்படுத்தியது. இதை தொடர்ந்து தற்போது எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி தான் பிஇ.05 என்ற எலெக்ட்ரிக் கார் தற்போது அறிமுகமாக உள்ளது. இதற்கு பிறகு எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகமாக உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ.05 என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வந்தது. இந்த புகைப்படங்கள் எல்லாம் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இந்த காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் மாதம் 26ம் தேதி புனேவில் உள்ள செக்கான் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு ஆலையில் வைத்து இந்த அறிமுக நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

mahindra be 05

மஹிந்திரா நிறுவனம் இந்த பிஇ.05 என்ற எலெக்ட்ரிக் காரை தனது புதுமையான டிசைன் மொழியில் பார்ப்பதற்கே வித்தியாசமாக தெரியும் வகையில் சாலையில் சென்றால் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் வடிவமைத்துள்ளது. இந்த காரின் முன் பக்கம் சி வடிவ லைட்டிங் செட்டப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் காற்றோட்டமான கேபின் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை செதுக்கப்பட்ட கட்டிங்ஸ் கொண்ட வடிவமைப்புகள் போன்ற ஒரு லாக்கை கொடுக்கிறது. ஸ்லீக்கான பாடி பேனல் ஸ்போர்ட்டியான ஏரோ ஸ்டைல் அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் உள்ளன. இந்த காரின் டிசைன் வடிவமைப்பு தனித்துவமாக இருக்கிறது. முக்கியமாக இதில் ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக பெரிய விண்டு ஸ்கிரீன், அகலமான ஏர்இன்லெட், பியானோ பிளாக் நிறத்தில் ரூப், பில்லர் மற்றும் கிளாடிங் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

mahindra be 05

மஸ்குலரான வீல் ஆர்ச்களும் இதில் வழங்கப்பட்டுள்ளதால் இந்த கார் போல்டான லுக்கில் இருக்கிறது. இந்த காரின் பம்பர் பகுதி இந்த காரின் போல்டான லுக்கிற்க்கு சிறப்பான தனித்துவ அம்சத்தை வழங்குகிறது. இது மட்டுமல்லாமல் இதில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களையும் உட்புகுத்தியுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இந்த பிஇ.05 என்ற எலெக்ட்ரிக் காரில் உட்பகுதியில் இரண்டு பிரதான ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமென்டாகாகவும் மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வடிவமைப்பில் பிஸிக்கல் பட்டன் குறைவாக இருக்கும் படி பார்த்துக் கொள்கிறது. பெரும்பாலான விஷயங்கள் டச் ஸ்கிரீனிலேயே வழங்கப்பட்டுள்ளன. க்ளியரான மாடல் லுக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏவியேசன் ஸ்டைலில் செய்யப்பட்ட உட்புற கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் ரக தொழில்நுட்பத்துடன் இந்த காரின் உட்புற கட்டமைப்பும் டிரைவர் மற்றும் பயணிகளுக்கான அனுபவமும் கிடைக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4370 மிமீ நீளமும், 1900 மிமீ அகலமும், 1635மிமீ உயரமும், 2775மிமீ வீல் பேஸூம் கொண்டதாக இருக்கிறது.

இந்த காரில் உள்ள மோட்டாரை பொருத்தவரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார் இதில் பொருத்தப்பட உள்ளது. ஆனால் ஆரம்ப கட்டத்தில் இந்த எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனம் விற்பனைக்கு வருமா என்பது தெரியவில்லை. ஆனால் பின்னர் இந்த எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனத்தை அந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

மாருதி நிறுவனத்தில் இந்த பிஇ.05 என்ற எலெக்ட்ரிக் கார் நேரடியாக மார்க்கெட்டில் உள்ள டாடா கர்வ் காருக்கு போட்டியாக களமிறங்குகிறது. முதலில் இந்த காரில் வேலியோ எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 231 எச்பி பவரையும் 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரியர் வீல் டிரைவ் மோட்டாராக பொருத்தப்பட வாய்ப்பு இருக்கிறது.

இந்த காரில் மொத்தம் 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 60 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் 79 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரை அந்நிறுவனம் முழுமையாக இன்குளோவ் என்ற ஸ்கேட்போர்டு பிளாட்பார்மில் உருவாக்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் விலை குறித்து விபரங்களை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் இந்த காரின் அளவுகளை பறித்து பார்க்கும்போது இது 4,000மிமீக்கு அதிகமான நிளத்தில் இருப்பதால் கண்டிப்பாக ப்ரீமியம் ரக காராக தான் விற்பனைக்கு வரும் .அதனால் அதிக விலைக்கு தான் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 24, 2024, 13:13 [IST]
English summary
Mahindra be05 launch november 26 india
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X