வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ கார் சமீபத்தில் குளோபல் என்கேப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய கார்கள் இந்த சோதனையில் 5 ஸ்டார் பெற்றுள்ள நிலையில், இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்தது. இந்த கார் இந்த சோதனையில் எத்தனை ஸ்டார்களை பெற்றுள்ளது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தனி மவுசு இருக்கிறது. குறிப்பாக மஹிந்திரா நிறுவனம் இந்திய நிறுவனம் என்பதால் பாதுகாப்பான கார்களை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இதனால் பலர்மஹிந்திராநிறுவனத்தின் கார்களை விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் நிறுவனத்தின் பொலிரோ நியோ கார் சமீபத்தில் குளோபல் என்கேப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த மஹிந்திரா பொலிரோ நியோ காரில் 2 ஏர் பேக்குகள், சீட்டு பெல்ட் ரிமைண்டர் ,சீல்டு பெல்ட் ப்ரீ டென்ஷன் மற்றும் லோடு லிமிட் உள்ளிட்ட ஏகப்பட்ட பாதுகாப்பு ஆப்ஷன்கள் உள்ளன. இந்த பாதுகாப்பு ஆப்ஷன்களுடன் தான் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவுகள் மஹிந்திரா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் மமஹிந்திரா நிறுவனத்தின் காரா இப்படி என்னை யோசிக்க துவங்கிவிட்டனர்.
இந்த சோதனையின் போது மஹிந்திரா பொலிரோ நியோ கார் பெரியவர்களுக்கான சோதனையில் மொத்தம் 34 புள்ளிகளுக்கு 20.26 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. அதுவே குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இந்த கார் மொத்தமுள்ள 49 புள்ளிகளில் 12.71 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் இந்த காருக்கு குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட் சோதனைகள் வெறும் ஒரு ஸ்டார் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்த கிராஸ் டெஸ்ட் சோதனையின் ரிப்போர்ட்டின் படி இந்த காரில் டிரைவருக்கு நெஞ்சு மற்றும் கால் பகுதியில் பாதுகாப்பு குறைவாக இருப்பதாக ரிப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் பாடி அமைப்பு ஸ்டேபிளாக இல்லை எனவும் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிரோ கார் பெரும்பாலும் அதிக விலை கொண்ட காராக இருப்பதால் பணக்காரர்களை வாங்குகிறார்கள். இந்த காரில் பாதுகாப்பு இல்லை என வந்திருக்கும் ரிப்போர்ட் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த பொலிரோ நியோ எஸ்யூவி காரில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருக்கிறது. முக்கியமாக 2 ஏர் பேக்குகள் தான் இருக்கிறது. பக்கவாட்டில் ஏர் பேக்குகள் இல்லை. மற்றும் அனைத்து பயணிகளுக்கும் மூன்று பாயிண்ட் கொண்ட சீட்டு பெல்ட் இல்லை. இதுதான் இந்த கார் குறைவான சேஃப்டி ரேட்டிங் வாங்குவதற்கான முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த காரின் மூன்றாவது வரிசை சீட்டுகள் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளதால் சைடு வாக்கில் தான் பயணிகள் அமர வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதுவும் பாதுகாப்பு ரேட்டிங் குறைவதற்கான மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பொலிரோ நியோ கார் குளோபல் என்கேப் சோதனையில் வெறும் ஒரு ஸ்டாரை மட்டுமே பெற்ற காராக மாறி உள்ளது. இது பலரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
குளோபல் என்கேப் சோதனையில் கார்கள் சோதனை செய்யப்படுவது வழக்கமான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்தியாவில் தற்போது பாரத் என்கேப் என்ற சோதனை துவங்கப்பட்டு விட்டாலும் , சர்வதேச அளவில் குளோபல் என்கேப் சோதனைக்கு என்று மக்கள் மத்தியில் தனி பெயர் இருப்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் குளோபல் என்கேப் சோதனையை கட்டாயம் செய்து வருகிறார்கள்.
மஹிந்திரா நிறுவனம் இந்த பொலிரோ நியோ காரை பாதுகாப்பான காராக தயாரிக்கவில்லை. இந்த காரின் விற்பனை குறிப்பிட்ட செக்மெண்டில் மட்டும் இருப்பதால் பெரிய எண்ணிக்கையில் இல்லை இதனால் அதிக அளவு இதில் முதலீடு செய்ய நிறுவனம் விரும்பவில்லை. இந்த காரின் விற்பனை அதிகரித்தால் இதை அப்டேட் செய்து பலமான காராக தயாரிக்கவும் மஹிந்திரா நிறுவனம் தயாராக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ கார் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த கார் பாதுகாப்பு சோதனையில் குறைவான ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் கார் இவ்வளவு மோசமான ரேட்டிங் பெரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் இதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை பார்க்கும் போது ஏற்றுக்கொள்ளும் படியாக உள்ளது.


Click it and Unblock the Notifications








