என்னப்பா மஹிந்திரா இப்படி பண்ணிட்டீங்க!.. குடும்பத்துடன் போற மாதிரியான காரின் விலையை உயர்த்திட்டாங்க!

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கின்ற மாதிரியான அதிக இருக்கைகள் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo)-வும் ஒன்றாகும். இந்த கார் மாடலின் விலையையே மஹிந்திரா நிறுவனம் தற்போது உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரூ. 14 ஆயிரம் வரை இந்த காரின் விலையை மஹிந்திரா நிறுவனம் உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாக பொலிரோ நியோவின் ஆரம்ப விலை ரூ. 9.94 லட்சமாக மாறி இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

Mahindra bolero neo

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. என்4 (N4), என்8 (N8), என்10 (N10) மற்றும் என்10 ஓ (N10 O) ஆகியவையே அவை ஆகும். இவற்றில் முதல் இரண்டு தேர்வுகளின் விலையே உயர்த்தப்பட்டு இருக்கின்றது. கடைசி இரண்டு தேர்வுகளின் விலையில் எந்த மாற்றத்தையும் மஹிந்திரா செய்யவில்லை.

பொலிரோ நியோ என்4 வேரியண்டின் விலையில் ரூ. 5 ஆயிரமும், பொலிரோ நியோ என்8 தேர்வின் விலையில் ரூ. 14 ஆயிரம் வரையிலும் விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. பொலிரோ நியோ என்4 தேர்வின் விலையே ரூ. 9.94 லட்சம் ஆகும். என்8 ரூ. 10.63 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது.

இதேபோல், என்10 ரூ. 11.47 லட்சத்திற்கும், என்10 ஓ தேர்வு ரூ. 12.15 லட்சத்திற்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் சற்று அதிகமாக இருக்கும். பொலிரோ நியோ ஓர் 3 வரிசைகள் இருக்கை அமைப்பைக் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடலாகும்.

இந்த அமைப்பே குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார் மாடலாக பொலிரோ நியோவை மாற்றி இருக்கின்றது. ஓட்டுநருடன் சேர்த்து ஏழு பேர் வரை இந்த காரில் பயணிக்க முடியும். சிறிய குடும்பமாக இருப்பின் இரண்டு குடும்பம்கூடா தாராளமாக அமர்ந்து இந்த காரில் பயணிக்க முடியும்.

இதனால்தான் குடும்பத்தினர்கள் மத்தியில் இந்த கார் மாடலுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.இந்த மாதிரியான சூழலிலேயே திடீர் விலை உயர்வை மஹிந்திரா நிறுவனம் பொலிரோ நியோவில் செய்திருக்கின்றது. மஹிந்திராவின் இந்த செயல் பொலிரோ நியோ பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த கார் மாடலில் பெட்ரோல் தேர்வு வழங்கப்படவில்லை. டீசல் எஞ்சின் மட்டுமே வழங்கப்படுகின்றது. அந்த எஞ்சின் 73.5 kW பவர் மற்றும் 260 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இதில் வழங்கப்படுகின்றது.

மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இந்த கார் மாடலில் முன்பக்க வீலில் டிஸ்க்கும், பின் வீலில் டிரம் பிரேக்கும் வழங்கப்படுகின்றது. இதேபோல் நவீன கால தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பிரீமியம் தர அம்சங்களும் இந்த கார் மாடலில் அதிகளவில் வழங்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில், காரின் பின் பக்கத்தில் பனியை நீக்கும் மற்றும் வாஷ் செய்யும் வதிக் கொண்ட வைப்பர், சில்வர் அணிகலன்கள் கொண்ட பிரீமியம் சென்டர் கன்சோல், ஆர்ம் ரெஸ்ட் (முன் மற்றும் நடு வரிசை இருக்கையில் இருக்கும்), கன்ட்ரோல்கள் மற்றும் டில்ட் செய்யும் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகியவை பொலிரோ நியோவில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, பிரீமியம் தர இருக்கை, ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், முன் மற்றும் பின் பக்கத்தில் பவர் விண்டோ, ரிமோட் லாக் மற்றும் சாவியே இல்லாமல் நுழையும் வசதி, குரல் மெசேஜ் சிஸ்டம், ப்ளூ சென்ஸ் செல்போன் செயலி, ஃபாலோ மீ ஹெட்லைட், ஈகோ மோட் வசதிக் கொண்ட பவர்ஃபுல் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் அசிஸ்ட் மற்றும் 17.8செமீ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும் பொலிரோ நியோவில் வழங்கப்பட்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா பொலிரோ ஒட்டுமொத்தமாக மூன்று விதமான மாடல்களாக விற்பனைக்கு கிடைக்கின்றது. பொலிரோ, பொலிரோ நியோ மற்றும் பொலிரோ நியோ பிளஸ் ஆகியவையே அவை ஆகும். இந்த மூன்றிற்கும் இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பொலிரோ காரை 10 ஆயிரம் பேர் வரை புக் செய்துவிட்டு அதைப் பெறுவதற்காக க்யூவில் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 18, 2024, 21:11 [IST]
English summary
Mahindra bolero neo suv price increased 5k to 14k
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+