சரக்குகளை ஏற்றி போகும் பிக்-அப் டிரக்கிற்கு இப்படி ஒரு ஆஃபரா.. புது காருக்கு பதிலா இதையே வாங்கிடலாம்போல!
இந்தியாவின் பிக்-அப் டிரக் (Pik-Up Truck) பிரிவை அலங்கரிக்கும் விதமாக மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான தயாரிப்பாக பொலிரோ பிக்-அப் டிரக் (Bolero Pik-Up Truck)-குகள் இருக்கின்றன. இதனை அந்நிறுவனம் இந்திய நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்து 25 ஆண்டுகள் வரை ஆகிவிட்டன. இதனைக் கொண்டாடும் விதமாகவே மஹிந்திரா நிறுவனம் சில சிறப்பு ஆஃபர்களை அறிமுகம் செய்திருக்கின்றது. 'மேக்ஸ் கா வாடா' (Maxx ka Vaada) எனும் பெயரிலேயே அது சலுகைளை அறிமுகம் செய்திருக்கின்றது.
இந்த சிறப்பு சலுகை திட்டத்தின்கீழ் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க இருக்கும் பலன்கள் என்ன? எவ்வளவு நாட்களுக்கு இந்த சிறப்பு சலுகை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது? மேலும், பொலிரோ பிக்-அப் டிரக் பற்றிய முக்கிய விபரங்கள் உள்ளிட்டவற்றையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக சில வாகன உற்பத்தியாளர்கள் வேக வேகமாக ஓர் வாகனத்தை தயார் செய்து, அதனை விற்பனைக்கும் கொண்டு வந்துவிடுகின்றனர். ஆனால், அது மக்கள் மனதை கவர்கின்றதா என கேட்டால், பெரும்பாலான வாகன மாடல்கள் அதை செய்வதில்லை என்பதே எங்களின் பதில் ஆகும்.
அவ்வாறு மக்கள் மனதைக் கவர தவறும் வாகனங்கள் வந்த வேகத்திலேயே சந்தையைவிட்டு வெளியேறும். அந்தவகையில் வெளியேறிய வாகன மாடல்கள் பல உள்ளன. அதேவேளையில், ஒரு சில வாகன மாடல்கள் இந்தியாவில் ஆணி அடித்ததைப் போல நீங்கா இடத்தைப் பிடித்துவிடுகின்றன. அந்தமாதிரியான ஓர் வாகன மாடலே மஹிந்திராவின் பொலிரோ பிக்-அப் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகன மாடல்கள்.
இந்த மாடலை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதாவது, இரண்டு தசாப்தங்களைக் கடந்து தற்போது மூன்றாவது தசாப்தத்தை நோக்கிய பயணத்தில் அது இருக்கின்றது. இத்தகைய தரமான வரலாற்று சாதனையையே தற்போது கொண்டாடும் மனநிலையில் இருக்கின்றது, மஹிந்திரா.
மேலும், இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அது அது மேக்ஸ் கா வாடா எனும் சலுகையை அறிவித்து இருக்கின்றது. இது ஓர் சூப்பரான பேக் ஆகும். இதன் வாயிலாக புதிய பொலிரோ பிக்-அப் கஸ்டமர்களுக்கு ஐந்தாண்டுகள் வாரண்டி, ஐந்தாண்டுகள் இலவச பராமரிப்பு, ஐந்தாண்டுகள் இலவச சாலையோர உதவி மற்றும் ஐந்தாண்டு பயன்பாட்டிற்கு பின்னர் 5 லட்ச ரூபாய்க்கு மறு விற்பனை உத்தரவாதம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களையே மஹிந்திரா வழங்க இருக்கின்றது.
இந்த சலுகை திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 1.3 லட்சம் ஆகும். மேலும், இந்த திட்டம் ஒப்பிடமுடியாத மதிப்பு மற்றும் ஆதரவை ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்கிறது. அதேவேளையில், இந்த ஆஃபர் பொலிரோ பிக்-அப் 4X4 (Bolero Pik-Up 4×4) மற்றும் பொலிரோ கேம்பர் (Bolero Camper) ஆகிய வேரியண்டுகளுக்கு பொருந்தாது என கூறப்பட்டு உள்ளது.
வர்த்தக வாகனங்கள் பிரிவில் கணிசமான அளவு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் வாகனமாக பொலிரோ பிக்-அப் உள்ளது. இந்த நிலையிலேயே மிக சிறப்பான திட்டத்தை இந்த வாகன மாடலுக்கு மஹிந்திரா அறிவித்து இருக்கின்றது. இதனால் வரும் நாட்களில் பொலிரோ பிக்-அப்பிற்கு கிடைக்கும் வரவேற்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பொலிரோ கார் மாடலுக்கும் நல்ல வரவேற்பேக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதைப் போலவே வர்த்தக வாகன பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும், பொலிரோ பிக்-அப் டிரக்குகளுக்கும் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது உறுதியாகி உள்ளது. இதன் விளைவாகவே அதனால் தற்போது 25 ஆண்டுகளை இந்தியாவில் தாக்கு பிடிக்க முடிந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








