எடம் இல்லன்னு யாரயும் தனியா வர சொல்ல வேணாம்! 9 பேர் ஒரே கார்ல தாராளமா ஒக்காந்து போலாம்! விலை எவ்ளோ தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). மஹிந்திரா பொலிரோ, மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo) மற்றும் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் (Mahindra Bolero Neo Plus) என மொத்தம் 3 மாடல்களில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒருங்கிணைந்த சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இது நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் ஆகும்.

இதன்படி மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6,494 பொலிரோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9,092 ஆக இருந்தது. இது 29 சதவீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Mahindra Bolero

மஹிந்திரா பொலிரோ கார் தற்போது வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, பண்டிகை காலம் வரவுள்ளதால், வரும் மாதங்களில் சரிவில் இருந்து மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா பொலிரோ காரின் ஆரம்ப விலை 9.79 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.91 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் மஹிந்திரா பொலிரோ நியோ காரின் ஆரம்ப விலை 9.95 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 12.15 லட்ச ரூபாய் ஆகவும் இருந்து வருகிறது.

Mahindra Bolero Neo Seat

அதே நேரத்தில் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் காரின் ஆரம்ப விலை 11.39 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 12.49 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதில், மஹிந்திரா பொலிரோ கார், 7 சீட்டர் ஆப்ஷனில் கிடைத்து கொண்டுள்ளது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. மஹிந்திரா பொலிரோ காரில் பெட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடையாது.

மறுபக்கம் மஹிந்திரா பொலிரோ நியோ காரும், 7 சீட்டர் ஆப்ஷனில்தான் கிடைத்து கொண்டுள்ளது. இந்த காரிலும், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்த காரிலும், பெட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதில்லை.

இறுதியாக மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் காரானது, 9 சீட்டர் ஆப்ஷனில் கிடைத்து வருகிறது. மஹிந்திரா பொலிரோ மற்றும் மஹிந்திரா பொலிரோ நியோ ஆகிய மாடல்களை போல் அல்லாது, மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் காரில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் காரிலும், பெட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இல்லை. இது மஹிந்திரா பொலிரோ வரிசை கார்களுக்கு ஒரு பின்னடைவாக இருந்தாலும் கூட, அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பது மிகப்பெரிய 'ப்ளஸ் பாயிண்ட்' ஆக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தோற்றத்தில் முரட்டுத்தனமாகவும், கம்பீரமாகவும் இருக்க வேண்டும் எனவும், அதே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்கள், மஹிந்திரா பொலிரோ காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 28, 2024, 12:38 [IST]
English summary
Mahindra bolero suv sales report august 2024 29 per cent down
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+