குடும்பத்துடன் பயணிக்ககூடிய காரை வாங்க 10,000 பேர் லைன்ல நிக்குறாங்க! அப்படி என்ன காருப்பா இது!
குடும்பத்துடன் பயணிக்கும் வசதி கொண்ட 7 சீட்டர் மஹிந்திரா நிறுவனத்தின் கார் ஒன்றை வாங்க 10,000பேர் வரிசையில் காத்திருக்கிறார்கள் என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் மஹிந்திரா நிறுவனத்தின் இந்த காருக்கு மக்கள் மத்தியில் சமீப காலமாக ஏகப்பட்ட டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த காரின் புக்கிங் குவிந்து கொண்டே வருகிறது. பலர் இந்த காரை வாங்க வரிசையில் காத்திருக்கிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
கொரோனாவிற்கு பிறகு குடும்பத்துடன் பயணிக்கும் பெரிய ரக கார்கள் மீதான மவுசு மக்கள் மத்தியில் அதிகமாகி விட்டது. இதனால் 7 சீட்டர் 8 சீட்டர் கொண்ட கார்கள் எல்லாம் மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்த செக்மெண்டில் உள்ள கார்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் இந்த காரை வாங்க நினைக்கிறார்கள்.

வாழ்வில் ஒரு முறை தான் காரை வாங்குகிறோம் அந்தக் காரில் குடும்பத்துடன் அனைவரும் பயணிக்கும் வகையில் இந்த கார் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். அதன் காரணமாக அதிக விலை இருந்தாலும் பலர் விரும்பி குடும்பத்துடன் பயணிக்கும் காரை தான் தேர்வு செய்து வருகிறார்கள். இப்படியாக சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகிய கார்களுக்கு மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட் இருந்து வருகிறது.
தற்போது மஹிந்திரா நிறுவனம் இந்த காரை வாங்க 10,000வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள். அவர்களுக்கு கார்கள் தயாரிக்கப்பட்டு விரைவில் டெலிவரி செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ காருக்கு மாதம் சராசரியாக 9,500 புக்கிங் வந்து குவிகிறது. ஒவ்வொரு புக்கிங் வர வர அவர்களுக்கு அடுத்த மாதமே கார் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. இப்படியாக இந்த காரை வாங்க சுமார் 10,000 பேர் வரிசையில் காத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனால் மஹிந்திராவின் பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகிய கார்களை வாங்க நினைக்கும் மக்கள் ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த காருக்கு இவ்வளவு பெரிய டிமாண்ட் இருப்பது பலரும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. நீண்ட ஆண்டுகளாக இந்த கார் விற்பனையாகி வரும் நிலையில், இன்னும் குறையாத அளவிற்கு இந்த காருக்கு டிமாண்ட் இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ காரை பொறுத்தவரை 76 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் விலை பொருத்தவரை ரூ9.98 முதல் ரூ 10. 91 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகிறது. பி4,பி6, பி6ஒபிடி ஆகிய மூன்று விதமான வேரியன்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.

மஹிந்திரா பொலிரோ நியோ காரை பொறுத்தவரை தனித்துவமான லேடர் பிரேமில் உருவாக்கப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி காராகும். இது ஒரு 7 சீட்டர் காராகும் இந்த கார் தற்போது என் 4, என்8, என்10 ஆகிய மூன்று விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த காரின் இஞ்சினை பொருத்தவரை 100 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது காரின் விலையைப் பொறுத்தவரை ரூ 9.95 லட்சம் முதல் ரூ 12.15 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.
இதுபோக மஹிந்திரா நிறுவனம் பொலிரோ நியோ பிளஸ் என்ற காரை 9 சீட்டர் கொண்ட வெர்ஷனாக ரூபாய் 11.39 லட்சம் முதல் 12.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் இந்த கார்களின் புக்கிங் குவிந்து வருகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ கார் நீண்ட ஆண்டுகளாக விற்பனையிலிருந்தும், மக்கள் மத்தியில் குறையாத வரவேற்பில் இருப்பது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
குடும்பத்துடன் பயணிக்கும் கார்களுக்கு தற்போது மார்க்கெட்டில் டிமாண்ட் ஏற்பட்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், பொலிரோ போன்ற கார்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பது நிச்சயம் ஆச்சரியமான விஷயம் தான். பெரும்பாலும் பொலிரோ கார்கள் அரசாங்க பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த கார்களாக இருந்தன. குடும்பத்துடன் பயணிக்க மற்ற பல கார்கள் பொலிரோ கார்களை விட சிறப்பாக இருப்பதாக மக்கள் கருதினார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொலிரோ கார் அப்டேட் செய்யப்பட்ட பிறகு இது குடும்பங்கள் விரும்பும் காராக மாறி உள்ளது. குறிப்பாக பொலிரோ நியோவின் வருகைக்குப் பிறகு மக்கள் பலர் இந்த காரை வாங்க விரும்பி வருகிறார்கள். இதில் ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கிறது. இதன் லுக்கும் முந்தைய கார்களை விட சிறப்பாக இருப்பதால் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications









