டாடாவுக்கு மஹிந்திரா ஷாக் கொடுக்கும் என்று சுத்தமா எதிர்பார்க்கல... இதுதான் முதல்முறை!!

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம். கார்கள் விற்பனையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் புதிய தரமான சாதனையை மஹிந்திரா செய்துள்ளது. அதாவது, கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸை முந்தி, 2வது இடத்தை தனதாக்கி உள்ளது. அப்படி எத்தனை கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது என்பதையும், கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் எண்ணிக்கையையும், அவை வழக்கத்தை காட்டிலும் எவ்வளவு அதிகம் என்பதையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்வதில் மாருதி சுஸுகி, ஹூண்டாய்க்கு அடுத்து 3வது இடத்தில் டாடா மோட்டார்ஸும், 4வது இடத்தில் மஹிந்திராவும் இருந்து வந்தன. இன்னும் சொல்லப்போனால், கடந்த 2023ஆம் ஆண்டில் சில மாதங்களில் ஹூண்டாயையும் முந்திக்கொண்டு டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை பிடித்தது.

mahindra cars sales crossed 50000

ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 3வது இடத்தை 51,062 கார்கள் விற்பனை உடன் மஹிந்திரா பிடித்துள்ளது. ஒரு மாதத்தில் கார்கள் விற்பனையில் 50 ஆயிரம் என்கிற இமாலய எண்ணிக்கையை மஹிந்திரா கடப்பது இதுவே முதல்முறை ஆகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 41,267 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்த்தால், மஹிந்திரா கார்களின் விற்பனை எண்ணிக்கை 23.7% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட்டிலும் 43,277 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்த்தால், மஹிந்திரா கார்கள் விற்பனை 18% அதிகரித்துள்ளது. கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா காராக முதலிடத்தில் ஸ்கார்பியோ உள்ளது.

mahindra cars sales crossed 50000

மார்க்கெட்டில் ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என 2 விதமான ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மொத்தமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் 14,438 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த ஆண்டு செப்டம்பரில் 11,846 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை எண்ணிக்கை 22% அதிகரித்துள்ளது.

இதற்கடுத்து 2வது இடத்தில் எக்ஸ்யூவி700 உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எக்ஸ்யூவி700 கார்களின் எண்ணிக்கை 9,646 ஆகும். 2023 செப்டம்பரில் 8,555 எக்ஸ்யூவி700 கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. 3வது இடத்தில் மஹிந்திராவின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ உள்ளது. கடந்த மாதத்தில் சரியாக 9 ஆயிரம் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

mahindra cars sales crossed 50000

2023 செப்டம்பரில் அப்போது இருந்த எக்ஸ்யூவி300 கார் 4,961 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த வரிசையில் 4வது இடத்தை 8,843 யூனிட்கள் விற்பனை உடன் மஹிந்திரா தார் பிடித்துள்ளது. மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான தாரின் விற்பனை 2023 செப்டம்பர் உடன் ஒப்பிடுகையில், 63% அதிகரித்துள்ளது. ஏனெனில், அந்த மாதத்தில் 5,417 தார் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தில் உள்ள மஹிந்திரா கார் பொலிரோ ஆகும். கடந்த மாதத்தில் 8,180 பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றாலும், 2023 செப்டம்பரில் இதனை காட்டிலும் அதிகமாக 9,519 பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 6வது இடத்தில் மஹிந்திராவின் எலக்ட்ரிக் காரான எக்ஸ்யூவி400 948 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. இவை இல்லாமல், 7 மராஸ்ஸோ கார்களையும் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவின் இந்த அதிரடி வளர்ச்சிக்கு ஸ்கார்பியோ கார்களுக்கு தொடர்ந்து கிடைத்துவரும் வரவேற்பு ஒரு காரணம் என்றாலும், மறுபக்கம் புத்தம் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் பங்களிப்பும் இருக்கிறது. அதேபோல், மஹிந்திரா தார் வாகனத்திற்கு தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான கஸ்டமர்கள் கிடைத்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்கப்பட்ட தார் வாகனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9 ஆயிரத்தை நெருங்கி இருப்பது எதிர்பார்க்காத ஒன்றாகும்.

More from DriveSpark

Article Published On: Monday, October 14, 2024, 8:00 [IST]
English summary
Mahindra cars sales number crossed 50k for first time in september 2024 check all details here
மேலும்... #mahindra #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X