புது காரு வாங்க போறவங்க கவனத்துக்கு! சந்தையில மஹிந்திரா களமிறக்க இருக்கும் காருக்கு புக்கிங் தொடங்கி இருக்கு!
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா (Mahindra), வருகின்ற 29 ஆம் தேதி இந்தியாவில் அதன் புதுமுக கார் மாடல் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்ய இருக்கின்றது. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahnidra XUV 3XO) எனும் பெயரிலேயே அது அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
இந்த கார் மாடலுக்கு மஹிந்திரா கார் விற்பனையாளர்கள் அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் பணிகளைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ. 21 ஆயிரம் முன்தொகையில் காருக்கான முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் பணிகள் ஆகும்.

குறிப்பிட்ட சில டீலர்களே இந்த காருக்கான புக்கிங்களை ஏற்று வருகின்றனர். டாடா நெக்ஸான் எஸ்யூவிக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்படும் கார் மாடலே எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகும். இது மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற எக்ஸ்யூவி300-இன் ஃபேஸ்லிஃப்ட் (Mahindra XUV300 Facelift) மாடல் ஆகும்.
சந்தையில் எஸ்யூவி ரக கார் பிரிவில் மிகப் பெரிய அளவில் போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த போட்டிக்கு ஏற்ப தன்னுடைய தயாரிப்பை டஃப்னாதாக மாற்றும் பொருட்டே மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 மாடலை அப்டேட் செய்திருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் போட்டி கார் மாடல்களுக்கு வழங்கி வரும் போட்டியை மேலும் சவாலானதாக மாற்றும் பொருட்டே இதனை தயார் செய்திருக்கின்றது.

இதன் வருகை டாடா நெக்ஸான்-க்கு மட்டுமல்ல, கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) உள்ளிட்டவற்றிற்கும் மிகப் பெரிய அளவில் தலைவலியை ஏற்படுத்த இருக்கின்றது. அப்டேட்டின் கீழ் இந்த கார் மாடலில் புதிய தொழில்நுட்ப கருவிகளையும், அலங்கார அம்சங்களையும் சேர்த்திருக்கின்றது.
அந்தவகையில், புதிய கிரில், சி வடிவ எல்இடி டிஆர்எல்கள், டூயல் பாரல்லல் எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் கவர்ச்சியான பம்பர் ஆகியவை இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, காரின் பின் பக்கமும் மாற்றப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், இணைக்கப்பட்ட வால் பக்க லைட்டுகள், புதிய அலாய் வீல்கள் ஆகியவற்றால் இந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், புதிதாக பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஏழு ஏர் பேக்குகள் ஆகியவை புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எஸ்யூவி காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இத்துடன் அதி நவீன அம்சமான அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டம் (ADAS), வெண்டிலேட் (ventilat) வசதிக் கொண்ட இருக்கைகள், இரட்டை மண்டல க்ளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட் ஆகியவையும் இந்த காரில் இடம் பெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் விரைவில் வரவிருக்கும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய வசதிக் கொண்ட கார் மாடலுக்கே தற்போது புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது. இதற்கும் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போல மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா நிறுழவனத்தின் எக்ஸ்யூவி700 மற்றும் தார் உள்ளிட்ட எஸ்யூவி ரக கார் மாடல்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மாதக் கணக்கில், ஆண்டு கணக்கில் காத்திருக்கும் அளவிற்கு இந்த கார் மாடலுக்கு டிமாண்ட் இந்திய சந்தையில் நிலவிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழலிலேயே எக்ஸ்யூவி300-இன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது மஹிந்திரா நிறுவனம்.


Click it and Unblock the Notifications









