ரூ1.5 லட்சம் குறைந்த விலையில் இந்த காரா? இதை விட்டா இவ்வளவு கம்மி விலைக்கு இந்த காரை வாங்கவே முடியாது!

மஹிந்திரா நிறுவனம் ஸ்டாகில் உள்ள தனது கார்களை விற்பனை செய்ய தற்போது ரூபாய் 4.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதனால் கார் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறைந்த விலையில் கார்களை வாங்கிக் கொள்ள முடியும். மக்கள் மத்தியில் பிரபலமான எக்ஸ்யூவி 400 இவி, எக்ஸ்யூவி 700, ஸ்கார்பியோ என் உள்ளிட்ட கார்களுக்கு இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த குறைந்த விலையில் இந்த கார்களை வாங்க வாய்ப்புள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

2024ம் ஆண்டு துவங்கி ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் 2023ம் ஆண்டில் மஹிந்திரா நிறுவனம் தயாரித்த சில கார்களை விற்காமல் வைத்துள்ளது. இந்த கார்கள் எல்லாம் விற்று ஸ்டாக்குகளை தீர்க்க அந்நிறுவனம் பல்வேறு விதமான தள்ளுபடிகளையும் பலன்களையும் வழங்கி உள்ளது. அதன்படி மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி, எக்ஸ்யூவி 700 மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய கார்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

mahindra discount june 2024

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரைப் பொறுத்தவரை ரூபாய் 1.5 லட்சம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து விதமான வேரியன்ட்களுக்கும் இங்கு தள்ளுபடிகள் ஃபிளாட் கேஷ் தள்ளுபடிகளகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தள்ளுபடி ஏஎக்ஸ்5 7-சீட்டர் டீசல் மேனுவல், டீசல் ஆட்டோமேட்டிக் மற்றும் பெட்ரோல் மேனுவல் ஆகிய கார்களுக்கு மட்டும் கிடையாது. இந்த கார்களுக்கு ரூபாய் 1.3 லட்சம் மட்டுமே தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை பொறுத்தவரை மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்னான் அல்லது 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆகிய ஆப்சன் உள்ளன. இந்த கார் ரூபாய் 13.99 லட்சம் முதல் ரூபாய் 27.14 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

mahindra discount june 2024

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி: மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 400 இவி காருக்கு ரூபாய் 4.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. அதன்படி இதன் டாப் வேரியன்டான இஎல் வேரியண்ட் கார் 39.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன் மற்றும் 7.2 கிலோ வாட் ஃபாஸ்ட் சார்ஜருடன் விற்பனையாகி வருகிறது.

இந்த காருக்கு ரூபாய் 3.4 லட்சம் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட் தவிர மற்ற பெரும்பாலான வேரியன்ட்களுக்கு ரூபாய் 4.4 லட்சம் வரை நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கார் மார்க்கெட்டில் ரூ 15.49 லட்சம் முதல் ரூபாய் 17.49 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

mahindra discount june 2024

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு ரூபாய் 1 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த காரின் டாப் வேரியன்டான இசட் 8 மற்றும் இசட்8எல் வேரியன்ட்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. 4 வீல் டிரைவ் டீசல் வேரியன்ட்களுக்கு நேரடி கேஷ் தள்ளுபடியாக ரூபாய் 1 லட்சமும், டூ வீல் டிரைவ் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களுக்கு ரூபாய் 60,000 தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

இந்த கார் மார்கெட்டில் ரூ13.60 லட்சம் என்ற விலையிலும் ரூ24.54 லட்சம் என்ற விலையிலும் மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ஏற்கனவே மார்க்கெட்டில் விற்பனையாகும் டாடா சஃபாரி, மஹிந்திரா எக்ஸ்யூவி 700, எம்ஜி ஹெக்டர் பிளஸ் மற்றும் ஹூண்டாய் ஆல்கஸார் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.

நீங்கள் குறைந்த விலைக்கு புதிய காரை வாங்க விரும்பினால், இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு தான். 2023ம் தயாரிக்கப்பட்ட பல கா்கள் விற்பனை செய்யப்படாமல் இன்னும் மஹிந்திரா நிறுவனத்தில் ஸ்டாக்கில் இருக்கிறது. இந்த கார்கள் புதிய கார்கள் தான் நீங்கள் வாங்கும் போது நீங்கள் தான் முதலில் இந்த காரை பயன்படுத்திய நபராக இருப்பீர்கள்.

இந்த ஸ்டாக்குகளை விற்பதற்காக மஹிந்திரா நிறுவனம் ரூ1லட்சம் வரை ஸ்கார்பியோ கார்களுக்கு தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. ரூ1.5லட்சம் வரை எக்ஸ்யூவி700 கார்களுக்கு தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. புதிய காரை குறைந்த விலையில் வாங்க நினைக்கும் மக்களுக்கு இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. அடுத்த சந்தர்ப்பதற்கு இன்னும் ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டிய தேவை இருக்கும். அதுவும் ஸ்டாக் காலியாகிவிட்டால் இவ்வளவு தள்ளுபடிகள் கிடைக்குமா என்ற உறுதியும் கிடையாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் இந்த ஸ்கார்பியோ எண் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய கார்களை வாங்க மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில் தற்போது இவ்வளவு அதிக ஆஃபருடன் இந்த கார் விற்பனைக்கு வருவது இந்த காரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் தான். இந்த ஆஃபரை பயன்படுத்தி பல இந்த காரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 4, 2024, 19:18 [IST]
English summary
Mahindra discount june 2024 xuv700 up to 1 5 lakh off
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X