இந்த காரை ஆரம்பத்திலேயே வாங்கியவர்களுக்கு செம்ம லக்கு!! இதுக்கு தான் பயந்துகிட்டு இருந்தோம்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் எக்ஸ்.யூ.வி 3எக்ஸ்.ஓ (XUV 3XO) காரின் அறிமுக விலையை நீண்ட மாதங்கள் கழித்து முதல்முறையாக அதிகரித்துள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த விலை அதிகரிப்பை மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் அறிமுகத்தின்போதே அறிவித்து இருந்தது. தற்போது அந்த விலை அதிகரிப்பு அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்தும், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை பற்றியும் விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மஹிந்திரா நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ எஸ்யூவி காரை கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. அப்போதே இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டு, அதன் பின் சில வாரங்களில் காரின் டெலிவிரிகள் துவங்கின.

மஹிந்திரா நிறுவனம் சமீப காலத்தில் அறிமுகம் செய்த மாடர்ன் கார்களுள் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ சற்று வித்தியாசமானது மற்றும் புதுமையானது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், ஏற்கனவே விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் நெக்ஸ்ட் ஜென்ரேஷன் மாடலாக கொண்டுவரப்பட்டு இருப்பினும், புத்தம் புதிய காராக எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கொண்டுவரப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், இந்த காரை பிரபல கார் டிசைனர் பிரதாப் போஸ் வடிவமைத்தார்.
அதற்கு முன்பு வரையில், டாடா மோட்டார்ஸில் பணியாற்றி வந்த பிரதாப் போஸ் மஹிந்திராவுக்கு மாறிய பின் வடிவமைத்த முதல் கார் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ ஆகும். இதே பிரதாப் போஸ் தான் டாடா மோட்டார்ஸில் பிரபலமான நெக்ஸான், பஞ்ச் கார்களை வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புமிக்க எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் டிசைன் எதிர்பார்த்ததை போன்று பலத்தரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், அறிவிக்கப்பட்டதை போன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த மஹிந்திரா எஸ்யூவி காரின் விலைகள் அறிமுகத்தின்போது ரூ.7.49 லட்சத்தில் இருந்து ரூ.15.49 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டன. தற்போது இந்த விலைகள் ரூ.30,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.79 லட்சமாக அதிகரித்துள்ளது.
எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் மொத்தம் 9 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. எம்.எக்ஸ்1, எம்.எக்ஸ்2, எம்.எக்ஸ்2 புரோ, எம்.எக்ஸ்3, எம்.எக்ஸ்3 புரோ, ஏ.எக்ஸ்5, ஏ.எக்ஸ்5 எல், ஏ.எக்ஸ்7 மற்றும் ஏ.எக்ஸ்7 எல் என்பன அந்த 9 வேரியண்ட்கள் ஆகும். இதில் எண்ட்ரீ-லெவல் எம்.எக்ஸ்1 மற்றும் டாப் ஏ.எக்ஸ்5 வேரியண்ட்கள் அதிகப்பட்ச ரூ.30,000 விலை அதிகரிப்பை சந்தித்துள்ளன.

டீசல் என்ஜின் உடன் கிடைக்கும் எம்.எக்ஸ்3 மற்றும் ஏ.எக்ஸ்5 வேரியண்ட்களின் விலைகள் ஒரே மாதிரியாக ரூ.10,000 அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், டீசல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் எம்.எக்ஸ்2 புரோ வேரியண்ட்டின் விலையும் ரூ.10,000 உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர்த்து எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் மற்ற வேரியண்ட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
| Variant | New Price (Lakh) | Old Price (Lakh) | Difference |
| MX1 111hp petrol MT | ₹7.79 | ₹7.49 | ₹30,000 |
| MX2 117hp diesel MT | ₹9.99 | ₹9.99 | - |
| MX2 Pro 111hp petrol MT | ₹9.24 | ₹8.99 | ₹25,000 |
| MX2 Pro 111hp petrol AT | ₹10.24 | ₹9.99 | ₹25,000 |
| MX2 Pro 117hp diesel MT | ₹10.49 | ₹10.39 | ₹10,000 |
| MX3 111hp petrol MT | ₹9.74 | ₹9.49 | ₹25,000 |
| MX3 111hp petrol AT | ₹11.24 | ₹10.99 | ₹25,000 |
| MX3 117hp diesel MT | ₹10.99 | ₹10.89 | ₹10,000 |
| MX3 117hp diesel AT | ₹11.79 | ₹11.69 | ₹10,000 |
| MX3 Pro 111hp petrol MT | ₹9.99 | ₹9.99 | - |
| MX3 Pro 111hp petrol AT | ₹11.49 | ₹11.49 | - |
| MX3 Pro 117hp diesel MT | ₹11.39 | ₹11.39 | - |
| AX5 111hp petrol MT | ₹10.99 | ₹10.69 | ₹30,000 |
| AX5 111hp petrol AT | ₹12.49 | ₹12.19 | ₹30,000 |
| AX5 117hp diesel MT | ₹12.19 | ₹12.09 | ₹10,000 |
| AX5 117hp diesel AT | ₹12.99 | ₹12.89 | ₹10,000 |
| AX5 L 131hp petrol MT | ₹12.24 | ₹11.99 | ₹25,000 |
| AX5 L 131hp petrol AT | ₹13.74 | ₹13.49 | ₹25,000 |
| AX7 131hp petrol MT | ₹12.49 | ₹12.49 | - |
| AX7 131hp petrol AT | ₹13.99 | ₹13.99 | - |
| AX7 117hp diesel MT | ₹13.69 | ₹13.69 | - |
| AX7 117hp diesel AT | ₹14.49 | ₹14.49 | - |
| AX7 L 131hp petrol MT | ₹13.99 | ₹ 13.99 | - |
| AX7 L 131hp petrol AT | ₹15.49 | ₹ 15.49 | - |
| AX7 L 117hp diesel MT | ₹14.99 | ₹14.99 | - |
மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் உடன் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் விற்பனை செய்யப்படுகிறது. 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ டைரக்ட் இன்ஜெக்ஷன் பெட்ரோல் என்ஜின் என்பன அந்த 3 என்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காருக்கு தொடர்ந்து வரவேற்புகள் அதிகரித்து வருகிறது. இவ்வாறான விலை அதிகரிப்புகள் எல்லாம் அதனை பெரிய அளவில் பாதிக்காது என்றே நினைக்கிறேன். இருப்பினும், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் ஆரம்ப விலையை அதிகப்பட்சமாக ரூ.30,000 வரையில் மஹிந்திரா அதிகரித்து இருப்பது கஸ்டமர்கள் வருகையில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









