தார் ராக்ஸ் காரின் உள்பக்கத்தை இன்னும் அழகானதாக மாற்றிய மஹிந்திரா.. வேற லெவல் வேலையை பார்த்திருக்காங்க!

மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக, இந்த காருக்கு புக்கிங் பணிகள் தொடங்கிய வெறும் 1 மணி நேரத்தில் 1.76 லட்சம் பேர் அந்த காரை புக் செய்திருக்கின்றனர். தார் ராக்ஸ் கார் மாடலுக்கான புக்கிங் பணிகள் அக்டோபர் 3 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தொடங்கியது என்பது கவனிக்கத்தகுந்தது. இது தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 1.76 லட்சம் தார் ராக்ஸ் காருக்கான புக்கிங் கிடைத்திருக்கின்றது.

இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த வரவேற்பு வரும் நாட்களில் கூடுதலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சில வேலைகளை பார்க்கத் தொடங்கி இருக்கின்றது மஹிந்திரா நிறுவனம். அது புதிய ஓர் நிற ஆப்ஷனை உட்பக்கத்திற்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Mahindra introduces mocha brown interior

முன்னதாக ஐவோரி நிறத்தில் மட்டுமே தார் ராக்ஸ் காரின் உட்பக்கம் காணப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போது புதிதாக மோச்சா பிரவுண் நிறம் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. தார் ராக்ஸ் கார் மாடலின் 4x4 வசதிக் கொண்ட தேர்வில் மட்டுமே இந்த நிற தேர்வு கிடைக்கும் என கூறப்படுகின்றது.

மஹிந்திரா நிறுவனம் சமீபத்திலேயே இந்த 4x4 வசதிக் கொண்ட வேரியண்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையிலேயே அதை கூடுதலாக சிறப்பிக்கும் விதமாக தற்போது புதிய நிற தேர்வை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் 3 டோர் தார் கார் மாடலுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதை போலவே மிகவும் சிறப்பான வரவேற்பு 5 டோர் தார் ராக்ஸ் கார் மாடலுக்கு கிடைக்கத் தொடங்க இருக்கின்றது.

சிறப்பம்சங்கள் மற்றும் அதிக இட வசதியில் 3 டோர் தார் கார் மாடலுக்கே டஃப் கொடுக்கக் கூடியதாக 5 டோர் தார் ராக்ஸ் காட்சியளிக்கின்றது. இரண்டு 10.25 அங்குல திரைகள் இந்த தார் ராக்ஸ் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒன்று தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று டிரைவருக்கான டிஜிட்டல் திரையாகவும் செயல்படும்.

இதுதவிர ஆட்டோமோட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், ஹர்மேன் கர்டோன் சவுண்டு சிஸ்டம், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதேபோல், பாதுகாப்பு வசதிகளை தாங்கி இருப்பதிலும் இந்த கார் மிக சிறந்த ஒன்றாக விளங்குகின்றது. அந்தவகையில், லெவல் 2 வகை அடாஸ் அம்சம்கூட இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், முன் மற்றும் பின் பக்கங்களில் பார்க்கிங் சென்சார், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்டவற்றையே தார் ராக்ஸ் தாங்கி இருக்கின்றன.

எஞ்சினைப் பொருத்த வரை இரண்டு விதமான ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகியவையே அவை ஆகும். தார் ராக்ஸ் இந்தியாவில் ரூ. 12.99 லட்சம் தொடங்கி ரூ. 22.49 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இவ்வளவு அதிக விலையைக் கொண்டிருக்கின்ற போதிலும் இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது வியப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்த கார் மாடலே தார் ஆகும். 3 கதவுகளுடன் மட்டுமே அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதால் இதன் 5 டோர் வெர்ஷனின் வருகைக்காக மீண்டும் இந்தியர்கள் காத்திருக்க தொடங்கினர். இந்த மாதிரியான சூழலிலேயே சமீபத்தில் தார் ராக்ஸ் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. இதற்கு எதிர்பார்த்ததைவிட மிக சிறப்பான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 4, 2024, 14:20 [IST]
English summary
Mahindra introduces mocha brown interior for 5 door thar roxx 4x4 variants
மேலும்... #mahindra #Mahindra Thar Roxx #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+