மஹிந்திராவின் புது ஸ்கார்பியோ... குறைனு எதையும் சொல்ல முடியாது!! விலையை பார்த்துட்டு காரை புக் பண்ணுங்க!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் பிரபலமான ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காரில் 'இசட்8 செலக்ட்' (Z8 Select) என்ற பெயரில் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்கார்பியோ-என் காரின் மற்ற வேரியண்ட்களுடன் ஒப்பிடுகையில், இந்த புதிய வேரியண்ட்டின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த சில வருடங்களில் எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. அதாவது, நன்கு உயரமான, கம்பீரமான தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களை வாங்கவே இன்றைய கால கஸ்டமர்கள் விளங்குகின்றன. மற்ற ரக கார்களை காட்டிலும், எஸ்யூவி கார்களின் உள்ளே நிறைய இடவசதி கிடைப்பதினால் எஸ்யூவி கார்களின் பக்கம் மக்கள் செல்கின்றனர்.

இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டை இந்த அளவிற்கு மாற்றியதற்கு மஹிந்திரா நிறுவனத்துக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஏனெனில், மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து தற்சமயம் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுபவை அனைத்தும் எஸ்யூவி ரக கார்கள் ஆகும். அவற்றுள் ஒன்று, ஸ்கார்பியோ-என் ஆகும். இந்தியாவில் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் மஹிந்திரா கார்களுள் ஒன்று ஸ்கார்பியோ ஆகும்.
இதன், நெக்ஸ்ட்-ஜென்ரேஷன் மாடலாக ஸ்கார்பியோ-என் கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது, ஸ்கார்பியோ-என் காரில் புதிய இசட்8 செலக்ட் வேரியண்ட்டை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்கார்பியோ-என் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ரூ.16.99 லட்சம் என்பது பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் ஸ்கார்பியோ-என் இசட்8 செலக்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அதுவே, பெட்ரோல் என்ஜின் & ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டீசல் என்ஜின் உடன் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் ரூ.17.99 லட்சமும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் ரூ.18.99 லட்சமும் எக்ஸ்-ஷோரூம் விலைகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஆம், புதிய ஸ்கார்பியோ-என் இசட்8 செலக்ட் வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கும். மேலே குறிப்பிடப்பட்டவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்சங்கள் அதிகமாக இருக்கலாம். வருகிற மார்ச் 1ஆம் தேதியில் இருந்து ஸ்கார்பியோ-என் காரின் இந்த புதிய வேரியண்ட் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர ஆரம்பித்துவிடும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.
இந்த புதிய வேரியண்ட்டில், அட்ரெனாக்ஸ் கனெக்ட், பில்ட்-இன் அலெக்ஸா, சிக்னெச்சர் ட்யூயல் பேரல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி புரோஜெக்டர் ஃபாக் விளக்குகள் & ஸ்டிங்-போன்றதான எல்இடி டிஆர்எல்-கள், ஆர்17 டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய காரின் உட்பக்க கேபின் உயர் தரத்திலான காஃபி & கருப்பு நிறங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்பியோ-என் இசட்8 செலக்ட் வேரியண்ட்டை பிரத்யேகமான மிட்நைட் கருப்பு நிறத்தில் வாங்கலாம். அதாவது, இந்த நிறத்தில் வேறெந்த ஸ்கார்பியோ-என் வேரியண்ட்டையும் பெற முடியாது. இதுமட்டுமின்றி, சவுகரியமான பயணத்திற்காக, தொடர்ச்சியாக தன்னிச்சையாக டேம்பிங் டெக்னாலஜி என ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்களும் புதிய இசட்8 செலக்ட் வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் ஏற்கனவே இசட்8 மற்றும் இசட்8 எல் என்கிற இரு வேரியண்ட்கள் வழங்கப்படுகின்றன. இவை இரண்டும், ஸ்கார்பியோ-என் காரின் விலைமிக்க வேரியண்ட்களாக உள்ளன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.24.54 லட்சம் வரையில் உள்ளன. இவற்றுடன் ஒப்பிடுகையில், புதிய இசட்8 செலக்ட் வேரியண்ட் கொஞ்சம் குறைவான விலையிலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








