மக்கள் கார்களை வாங்குவத விட்டுட்டாங்களா! விற்பனையில் கார்களுக்கே டஃப் கொடுக்கும் மஹிந்திராவின் லோடு வாகனம்..

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (Mahindra & Mahindra Limited) நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமாக மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி (Mahindra Last Mile Mobility Limited) நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இதன்கீழ், அந்நிறுவனம் வர்த்தக பயன்பாட்டு வாகனங்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ட்ரியோ எலெக்ட்ரிக் ஆட்டோ மற்றும் மஹிந்திரா ஸியோ போன்ற வாகனங்களையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரேவற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் 2 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைச் செய்திருப்பதாக அறிவித்திருக்கின்றது. இதன் வாயிலாக மஹிந்திரா நிறுவனம், மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி-இன்கீழ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு பயணிகள் வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போல சிறப்பான வரவேற்புக் கொண்டிருப்பது உறுதியாகி உள்ளது.

Mahindra zeo ev interior pic

சிறிய வகை வர்த்தக பயன்பாட்டு வாகனங்களையே மஹிந்திரா நிறுவனம் மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி-இன்கீழ் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. குறிப்பாக நான்கு பிரிவுகளின்கீழ் வாகனங்கள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. 3 வீலர் பயணிகள் வாகனம், 3 வீலர் கார்கோ பயன்பாட்டு வாகனம், 4 வீலர் கார்கோ வாகனம் மற்றும் 4 வீலர் எலெக்ட்ரிக் லோடு வாகனம் ஆகியவையே அந்த பிரிவுகள் ஆகும்.

மின்சாரம், பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றில் இயங்கும் வாகனங்களையும் இதில் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால், தற்போது 2 லட்சம் யூனிட்டுகள் விற்பனையைப் பெற்றிருப்பது மின்சார வாகனங்கள் மட்டுமே ஆகும். இதன் வாயிலாக மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார வர்த்தக பயன்பாட்டு வாகனங்களுக்கு சந்தையில் அதிகரித்து உறுதியாகி இருக்கின்றது.

Mahindra achieves 200 000 ev sales milestone

இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமான முயற்சிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதன் விளைவாகவே மஹிந்திராவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை தற்போது புதிய உச்சத்தை எட்டியிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, மஹிந்திரா நிறுவனமும் அதன் சார்பில் வர்த்தக பயன்பாட்டு வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு சலுகை மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றது.

அந்தவகையில், சமீபத்தில் நிறுவனம் வாடிக்கையாளர் லாயல்டி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. உதய் நெக்ஸ்ட் (UDAY NXT), எனும் திட்டத்தையே அது இந்திய வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்திருந்தது. இதன் வாயிலாக வர்த்தக வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்துக்கான காப்பீட்டு திட்டத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதுதவிர, அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான வழிக்காட்டுதல் (கவுன்சிலிங்) உள்ளிட்ட பிற சப்போர்ட்டுகளை வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதுமாதிரியான சலுகைகளாலும், மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக தரம்மிக்கவை என்பதாலும் இந்தியர்கள் மத்தியில் அதன் வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

மஹிந்திரா நிறுவனத்தின் வர்த்தக பயன்பாட்டு மின்சார வாகனங்களுக்கு மட்டுமல்ல தனிநபர் பயன்பாட்டு பயணிகள் வாகனங்களுக்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் அந்நிறுவனம் இந்தியாவிற்காக மிகப் பெரிய திட்டத்தை வகுத்துள்ளது. அது எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6இ (BE 6e) ஆகிய எலக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களை இந்தியாவில் சீக்கிரமே விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 400 இவி எனும் ஒற்றை எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. விரைவிலேயே இதன் வரிசையில் இன்னும் சில மின்சார கார் மாடல்களையும் அது இணைக்க இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அது சமீபத்தில் எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6இ இ-கார்களின் டீசர் படத்தை வெளியிட்டது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 6, 2024, 11:27 [IST]
English summary
Mahindra last mile mobility reaches 2 lakh electric vehicle sales milestone in india
மேலும்... #mahindra #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+