7பேர் போற மாதிரியான காரோட விலை இவ்ளோ கம்மியா! கிங் சைஸ் எஸ்யூவி கார் மாடலில் விலை குறைவான புது தேர்வு அறிமுகம்

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் பெரிய உருவம் கொண்ட கார் மாடல்களில் எக்ஸ்யூவி 700 (XUV700)-ம் ஒன்றாகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சூப்பரான எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலை மஹிந்திரா நிறுவனம் ஐந்து, ஆறு மற்றும் ஏழு ஆகிய இருக்கைகள் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே இதன் 7 சீட்டர் தேர்வில் புதிய விலை குறைவான ஆப்ஷன் ஒன்று விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த புதிய 7 சீட்டர் எக்ஸ்யூவி 700 எம்எக்ஸ் (MX) எனும் வேரியண்ட் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Mahindra xuv700 mx 7 seater launched

இதற்கு அறிமுக விலையாக ரூ. 15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஏஎக்ஸ்3 7 சீட்டர் கார் மாடலைக் காட்டிலும் 3 லட்ச ரூபாய் மலிவான விலையே இதுவாகும். இந்த புதிய எம்எக்ஸ் 7 சீட்டர் கார் மாடலை ஐந்து விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டேஸ்லிங் ரெட் (Dazzling red), எவரெஸ்ட் ஒயிட் (Everest white), மிட்நைட் பிளாக் (Midnight black), ரெட் ரேஜ் (Red Rage) மற்றும் நபோலி பிளாக் (Napoli Black) ஆகியவையே அவை ஆகும். மஹிந்திரா நிறுவனம் எம்எக்ஸ்5 சீட்டரை தழுவியே உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த தேர்வு விற்பனைக்கு வந்திருக்கும் எம்எக்ஸ் 7 சீட்டரை விட ரூ. 40 ஆயிரம் மட்டுமே குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் சிறப்பம்சங்களாக எல்இடி டிஆர்எல்கள், பெரிய கிரில், 8.0 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கார் இணைப்பு தொழில்நுட்பம் மற்றும் ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, செல்போன்களைச் சார்ஜ் செய்வதற்கான யுஎஸ்பி பாயிண்டுகள், அலாய் வீல்கள், பனி மின் விளக்கு ஆகியவை எக்ஸ்யூவி 700 எம்எக்ஸ் 7 சீட்டர் ஆப்ஷனில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமின்றி, 4 ஸ்பீக்கர்கள், டில்ட் அட்ஜஸ்டபிள் மற்றும் பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், சென்டர் ஆர்ம்ரெஸ்ட், முன் மற்றும் பின்னிருக்கைக்கானஏசி துளைகள், ஹெட்ரெஸ்ட்டுகள், பவர்டு ஓஆர்விஎம் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்களை இந்த தேர்வுக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எஞ்சினைப் பொருத்த வரை எக்ஸ்யூவி 700 எம்எக்ஸ் 7 சீட்டர் தேர்வில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 153 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பு குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை தன்னுடைய புதிய எக்ஸ்யூவி 700 எம்எக்ஸ் 7 சீட்டர் தேர்வில் மஹிந்திரா நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

வாடிக்கையாளர்களைத் தன் வசம் ஈர்க்கும் பொருட்டே மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 700 கார் மாடலில் இந்த புதிய மலிவு விலை 7 சீட்டர் தேர்வை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த காருக்கு குடும்பத்துடன் அதிகளவில் பயணங்களை மேற்கொள்வோர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக இருக்கைக் கொண்ட கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே மஹிந்திரா நிறுவனம் எம்எக்ஸ் 7 சீட்டர் எனும் புதிய தேர்வை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 5, 2024, 19:57 [IST]
English summary
Mahindra launches low cost xuv700 mx 7 seater
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+