தார் எர்த் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்.. மாருதி ஜிம்னியை தேடி போனவங்க எல்லாரும் புலம்ப போறாங்க!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் தார் எஸ்யூவி (Thar SUV)-யும் ஒன்றாகும். இந்த கார் மாடலிலேயே எர்த் எடிசன் (Thar Earth Edition) எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது மஹிந்திரா நிறுவனம். இந்தியாவின் தார் பாலைவனத்திற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக மஹிந்திரா நிறுவனம் இந்த எர்த் எடிசன் சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
இது இந்தியாவின் தார் பாலைவனத்தை குறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்யும் விதமாக, பின் பக்கத்தில் தார் பலைவனத்தின் கிராஃபிக் பேட்ஜ் எர்த் எனும் எழுத்துக்களுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை இந்த காரில் வழங்கி இருக்கின்றது, மஹிந்திரா நிறுவனம்.

அது ஓர் சிறப்பு பதிப்பு என்கிற ஃபீலை வழங்க வேண்டும் என்கிற நோக்கில் பலதரப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, வண்ண பூச்சு விஷயத்தில் மிகவும் தனித்துவமான யுக்தியை அது கையாண்டிருக்கின்றது. டெசர்ட் ஃப்யூரி சேடின் மேட் பெயிண்ட் (Desert Fury satin matte paint) பூச்சே இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர குன்றுகளை பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர்கள் காரின் முன் மற்றும் பின் பக்க ஃபெண்டர்களில் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இதைத்தொடர்ந்தே, பி பிள்ளர்களில் மேலே கூறப்பட்ட எர்த் எடிசன் பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, மேட் பிளாக் பேட்ஜ் மற்றும் சில்வர் அலாய் வீல்களும் இந்த காரை அலங்கரிக்கும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்துடன், பாலைவனத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த காரின் ஏசி வெண்ட், சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட பகுதிகளில் பாலைவனத்தின் நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளைத் தாங்கியதாகவே தார் எர்த் எடிசன் தற்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
மேலும், இதனை தார் கார் மாடலின் உயர்நிலை வேரியண்டான எல்எக்ஸ் ஹார்ட் டாப் 4X4 தேர்வை தழுவியே உருவாக்கப்பட்டது என்பதால் பிரீமியம் அம்சங்களுக்கும் குறைச்சலில்லாத கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 15.40 லட்சம் நிர்ணம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோல் ஆட்டோமேட்டிக், பெட்ரோல் மேனுவல், டீசல் ஆட்டோமேட்டிக் மற்றும் டீசல் மேனுவல் ஆகிய ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. இந்த காரின் உட்பக்கத்திலும் பல்வேறு சிறப்புகளை வழங்கி இருக்கின்றது, மஹிந்திரா நிறுவனம்.
குறிப்பாக கருப்பு மற்றும் பீஜ் நிறத்தால் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டு இருப்பது வேற லெவல் அழகான மற்றும் பிரீமியம் தோற்றம் அதற்கு கிடைக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுதவிர, ஹெட்ரெஸ்ட்களில் குன்றுகளின் டிசைன், தார் பிராண்ட் கதவுகள், அடர் குரோம் நிற அக்செண்டுகள் ஆகியவற்றாலும் இந்த சிறப்பு பதிப்பை சிறப்பாக அலங்கரித்து இருக்கின்றது, மஹிந்திரா நிறுவனம்.

இந்தியாவில் மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த கார் மாடலில் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, மஹிந்திரா நிறுவனம். இதற்கும் நல்ல வரவேற்பே இந்தியர்கள் மத்தியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தார் காருக்கு போட்டியாக மாருதி சுஸுகி ஜிம்னி, ஃபோர்ஸ் கூர்கா ஆகிய கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சொல்லப்போனால் இவற்றிற்கு மிக மிக பெரிய வில்லனாக விற்பனையில் தார் எஸ்யூவி இருக்கின்றது. இந்த போட்டியை மேலும் வலுவாக்கும் வகையிலேயே தார் தற்போது எர்த் எடிசனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதுவும் சவாலான விலையில் அந்த கார் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









