காஞ்சிபுரத்தில் 2 புதிய மையங்களை திறந்த பிரமாண்ட கார் உற்பத்தி நிறுவனம்.. முதலீடு எவ்வளவு? என்ன செய்ய போறாங்க?

எஸ்யூவி கார் (SUV Car) தயாரிப்பிற்கு பெயர்போன நிறுவனமாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம் விளங்கிக் கொண்டிக்கின்றது. இந்தியாவில் இந்த ரக கார்களுக்கு மிக அமோகமான வரவற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஹேட்ச்பேக் (Hatchback), செடான் (Sedan) மற்றும் எம்பிவி (MPV) என அனைத்து ரக கார்களையும் இந்த எஸ்யூவி ரக கார்கள் விற்பனையில் ஒவ்வொரு மாதமும் வீழ்த்திக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான காரணங்களாலேயே வாகன உற்பத்தியாளர்கள் எஸ்யூவி ரக கார்களுக்கு மிக அதிகம் முக்கியத்துவத்தை வழங்கத் தொடங்கி இருக்கின்றனர்.

மிக முக்கியமாக மஹிந்திரா நிறுவனம் முழுக்க முழுக்க எஸ்யூவி ரக கார்களை மட்டுமே உற்பத்தி செய்து வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அந்நிறுவனம் தமிழ்நாட்டில் இரண்டு புதிய சோதனை மையங்களை திறந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் ஒன்று எஸ்யூவி கார்களின் பாதுகாப்பு திறனை சோதிக்கக் கூடிய மையம் என்பது கவனிக்கத்தகுந்தது.

Mahindra inaugurates 2 new testing facilities in kanchipuram

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. இரண்டும் தமிழகத்தின் காஞ்சிபுரத்திலேயே திறக்கப்பட்டு இருக்கின்றன. புதன் கிழமை அன்றே இந்த இரண்டு மையங்களும் திறக்கப்பட்டிருக்கின்றன. மற்றொன்று பேட்டரி மற்றும் செல் ஆராய்ச்சி மையம் ஆகும். இங்கு வைத்து எதிர்கால மின்சார வாகனங்களுக்கான பேட்டரி செல் தொழில்நுட்பங்கள் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

மஹிந்திரா நிறுவனம் இப்போதைய நிலவரப்படி ஒரே ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எக்ஸ்யூவி 400இவி (XUV 400 EV) எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. விரைவில் இதுபோன்று இன்னும் பல இ-கார் மாடல்களை மஹிந்திரா நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

இந்த ஆண்டு இறுதிக்குள் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3X0) மாடலை தழுவி உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடலை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே பேட்டரி மற்றும் செல் சார்ந்த ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கான மையத்தை மஹிந்திரா நிறுவனம் காஞ்சிபுரத்தில் தொடங்கி இருக்கின்றது.

இதற்காக நிறுவனம் சுமார் 300 கோடி ரூபாய் முதலீட்டை செய்திருக்கின்றது. மேலும், இந்த இரண்டு புதிய மையங்களும் மஹிந்திரா ரிசர்ச் வேலி (Mahindra Research Valley) அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 50 கிமீட்டர் தூரமே தள்ளி அமைந்திருக்கின்றது. இங்கு வைத்தே நிறுவனத்தின் பெரும்பாலான எஸ்யூவி கார்கள் வடிவமைக்கப்படுகின்றன.

இதற்கு சற்றே அருகில் இன்னும் இரண்டு மிக முக்கியமான புதிய மையங்கள் திறக்கப்பட்டு இருப்பது நிறுவனத்தின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்கு மிகப் பெரிய அளவில் அது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் பாதுகாப்பிற்கு பெயர்போனவையாக உள்ளன. இதற்கு சான்றாக தார், ஸ்கார்பியோ என் மற்றும் மராஸ்ஸோ உள்ளிட்ட கார் மாடல்கள் உள்ளன.

இவையே நிறுவனத்தின் அதிக பாதுகாப்பு திறன்மிக்க மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கிய வாகனங்கள் ஆகும். இதேபோல், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மாடலின் முந்தைய வெர்ஷனான எக்ஸ்யூவி 300 கூட பாதுகாப்பு திறனில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களையே பெற்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய பாதுகாப்பான கார்களையே மஹிந்திரா நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கின்றது.

இவற்றின் பாதுகாப்பு தரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கிலேயே புதிய எஸ்யூவி கார்களின் பாதுகாப்பு தரத்தை சோதனை செய்யும் மையம் திறக்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், புதிய பேட்டரி மற்றும் செல் ஆராய்ச்சி மையங்கள் வாயிலாக புதிய மற்றும் அட்வான்ஸ்டு பேட்டரி பேக்குகளைக் கண்டுபிடிக்கும் பணிகளையே மஹிந்திரா நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்றது. இது எதிர்கால மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்களை இன்னும் அட்வான்ஸ்டானதாக மாற்ற பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் இரண்டிற்கும் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. எனவேதான் இதனை தன்னுடைய காயை நகரத்த தொடங்கி இருக்கின்றது இந்த மஹிந்திரா நிறுவனம். எனவே வரும் நாட்களில் நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளர்களுக்கு இன்னும் கூடுதல் தலைவலியை இந்த நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 25, 2024, 5:00 [IST]
English summary
Mahindra mahindra inaugurates a passive safety lab and a battery research facility in tamil nadu
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+