குடும்பத்துடன் 7 பேர் போகும் காரை வெறும் 8 பேர் தான் வாங்கியிருக்காங்க! ஏன் தெரியுமா?
இந்தியாவில் வாகன தயாரித்து நிறுவனங்கள் எஸ்யூவி கார்கள் அதிகமாக தயாரித்து வருகிறார்கள். இதனால் எஸ்யூவி கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. ஆனால் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து வரும் ஒரு எஸ்யூவி கார் குறைவான விற்பனையை பெற்றுள்ளது. என்ன கார் இது? மக்கள் ஏன் இந்த காரை வெறுக்கிறார்கள்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் 7 இருக்கை கார்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. மாரூதி எர்டிகா, மாருதி ஈக்கோ, கியா கேரன்ஸ், டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா பொலிரோ மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ போன்ற மாடல்களின் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால், மஹிந்திரா மராஸோ கார் இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்ளவில்லை.

மஹிந்திராவின் புதுப்பிப்பு மற்றும் புதிய மாடல் வெளியீட்டிற்கும் பிறகு, மஹிந்திரா மராஸோ ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 8 கார்கள் மட்டுமே ஈர்த்தது. ஜூலை மாதத்தில் வெறும் 14 கார்கள் மட்டுமே விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா மராஸோவின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எம்2 7 சீட்டர் வேரியன்ட்டின் விலை ரூ. 14,39,400- லிருந்து ரூ. 14,59,400 ஆக உயர்ந்துள்ளது, இது ரூ. 20,000 தான் அதிகரித்துள்ளது. அதேபோல், எம்2 8 சீட்டர் வேரியண்ட் இப்போது ரூ. 14,39,400 இலிருந்து ரூ. 14,59,400 ஆக அதிகரித்துள்ளது. இதுவும் ரூ20 ஆயிரம் விலை அதிகரித்துள்ளது.

எம்4 பிளஸ் 7 சீட்டர் வேரியன்ட்டின் விலை அதன் முந்தைய விலையான ரூ. 15,66,001 இலிருந்து ரூ. 19,999 அதிகரித்து ரூ. 15,86,000 ஆக உயர்ந்துள்ளது.. எம்4 பிளஸ் 8 சீட்டர் வேரியன்ட் இப்போது அதன் பழைய விலையான ரூ. 15,74,200 இலிருந்து ரூ. 15,94,200 ஆக அதிகரித்துள்ளது.
எம்6 பிளஸ் வேரியன்ட்களின் விலையும் அதிகரித்துள்ளது. எம்6 பிளஸ் 7 சீட்டர் வேரியன்ட்டின் விலை ரூ. 16,72,001 இலிருந்து ரூ. 16,92,000 ஆக உயர்ந்தது, அதேசமயம் எம்6 பிளஸ் 8 சீட்டர் வேரியன்ட் இப்போது ரூ. 16,80,200 இலிருந்து ரூ. 17,00,200 ஆக அதிகரித்துள்ளது.

மஹிந்திரா மராஸோ காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 121 எச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்கிறது, இது 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் பவர் ஃபுல்லான இன்ஜினாக இருக்கிறது.
அனைத்து வேரியன்ட்களும் ஏர்பேக்குகள் , ABS (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்), EBD (எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன்) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வருகின்றன. இதனால் இந்த கார் பாதுகாப்பான காராகவும் இருக்கிறது. பெரிய கார்களில் இந்த அம்சங்கள் எல்லாம் கட்டாயம் தேவையானதாகவும் உள்ளது.
மேலும் இந்த காரில் கூடுதல் அம்சங்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே அம்சங்களுடன் இணக்கமான 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது கீ லெஸ் என்ட்ரி மற்றும் ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோலுடன் ஸ்டைலான 17-இன்ச் அலாய் வீல்களையும் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அம்சங்கள் மற்றும் மாடல் வரிசை மற்றும் விலை நிர்ணய அமைப்புக்கு புதுப்பிப்புகள் இருந்தபோதிலும், இந்தியாவின் போட்டித்தன்மை வாய்ந்த 7-சீட்டர் ஆட்டோமொபைல் சந்தை பிரிவில் மஹிந்திரா மராஸோ கார்கள் மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இருந்தாலும், சவால்கள் இருக்கிறது.


Click it and Unblock the Notifications









