குடும்பத்துடன் 7 பேர் வரை பயணம் செய்யும் இந்த காரை யாருமே வாங்கல! சேல்ஸ்ல இருந்தும் தூக்கிட்டாங்களா?
சமீப நாட்களாக குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் வாகனம் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் எம்பிவி ரக கார்களை அதிகம் தயாரித்து விற்பனைக்காக அறிமுக அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதனால் எம்பிவி செக்மெண்டில் கடும் போட்டி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தனது எம்பிவி காரான மராஸோ என்ற காரை விற்பனையிலிருந்து நீக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனத்தின் மராஸோ கார் புதிதாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் எனவும், இந்த கார் அப்டேட் செய்யப்படும் எனவும் பல்வேறு விதமான பேச்சுக்கள் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த பேச்சுக்களை எல்லாம் மீறி மஹிந்திரா நிறுவனத்தின் மராஸோ கார் தனது ஆயுட்காலத்தை முடிக்க தயாராகி விட்டதாக தெரிகிறது. மஹிந்திரா நிறுவனம் தனது மராஸோ காரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கி உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இடம் தற்போது பெரும்பாலும் மார்க்கெட்டில் வெற்றி பெற்ற கார்களையும் விற்பனையில் இருக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது கேயூவி100 என்ற கார் பெரிய அளவில் விற்பனையாகாமல் இருந்து வந்தது. அந்தக் காரையும் விற்பனையிலிருந்து மஹிந்திரா நிறுவனம் நீக்கியது. இந்நிலையில் தற்போது மராஸோ காருக்கு மஹிந்திரா நிறுவனம் ஆப்பு வைத்துள்ளது என்று சொல்லலாம்.
மஹிந்திரா நிறுவனத்தின் தரப்பில் இருந்து இதுவரை மராஸோ கார் நிரந்தரமாக நீக்கப்பட்டதால் அல்லது அப்டேட்டுக்காக நீக்கப்பட்டு பின்னர் அப்டேட் செய்யப்பட்டு சேர்க்கப்படுமா என்ற விவரம் எதுவும் தெளிவாக குறிப்பிடவில்லை. ஆனால் மஹிந்திரா கார் நீண்ட நாட்களாக குறைவான விற்பனையில் இருந்து வந்த காராக இருக்கிறது. இது இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் தனித்துவமான காராகவும் உள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் மராஸோ காரை பொறுத்தவரை லேடர் ஃபிரேம் கொண்டு உருவாக்கப்பட்ட காராக விற்பனையாகி வருகிறது. இந்த காரின் இன்ஜின் கிராஸாக பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கார் முன்பக்க வீல் டிரைவ் கொண்ட காராக விற்பனையாகி வருகிறது. மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் டாடா ஹெக்ஸா, இன்னோவா கிரைஸ்டா, மாருதி எக்ஸ் எல் 6, ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் விற்பனையாகி வந்தது.
இந்த மஹிந்திரா மராஸோ காரில் ஏகப்பட்ட சொகுசு அம்சங்கள் இருக்கின்றன. முக்கியமாக அலுமினியம் சஸ்பென்ஷன் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் காருக்குள் சிறந்த ரைடு குவாலிட்டி கிடைக்கிறது. இதுபோக பின்பக்க ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாவது வரிசை சீட்டில் கேப்டன் சீட்டுகள் அல்லது பெஞ்ச் சீட்டுகளும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் வடிவமைப்பு என்பது கடலில் உள்ள சுறா மீனின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது இந்திய வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பிடிக்கவில்லை என சொல்லலாம். டாடா நிறுவனமும் ஐரா என்ற காரை இதுபோன்ற வடிவமைப்பில் வடிவமைத்தது. ஆனால் அதுவும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் எடுபடவில்லை. இந்தியாவில் முன்பக்க பகுதி பிளாட்டாகவும் சற்று உயரமாகவும் இருக்கும் ரக காரர்கள் தான் அதிகமாக விற்பனையாகிறது.
இந்த காரின் விற்பனை நீண்ட நாட்களாக குறைவாகவே இருந்து வந்தது. மாதம் சராசரியாக 60 கார்கள் தான் விற்பனையாகி வந்தன. அதாவது ஒரு நாளைக்கு இரண்டு கார்கள் மட்டுமே இந்தியா முழுவதும் விற்பனையாகி வந்தது. கடந்த ஒரு ஆண்டாக இந்நிறுவனம் வெறும் 721 கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இதில் இருப்பதிலேயே மிக குறைவாக கடந்த மே மாதம் தான் வெறும் 16 கார்கள் மட்டுமே விற்பனையாகி வந்தன.
மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வந்த பழைய காரை முற்றிலுமாக உருமாற்றி புதிய காராக வடிவமைத்து அதை வெற்றி பெற வைப்பதில் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. ஏற்கனவே இப்படியாக பொலிரோ காரை பொலிரோ நியோ என்ற பெயரிலும், தார் காரை புதிய தார் காராகவும் அப்டேட் செய்து வெற்றி பெற்று வைத்துள்ளது. அதேபோல இந்த காரையும் அப்டேட் செய்து மீண்டும் கொண்டு வர ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் மராஸோ கார் வரும்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த காரின் லுக் காரணமாக மட்டுமே இந்த கார் பெரிய அளவில் விற்பனையில் இல்லை என கூறலாம். இந்த காரில் உள்ள வசதிகள் இன்ஜின் உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்கள் மக்களுக்கு பிடித்ததாக இருந்தது. இதனால் இந்த காரின் லூக்கை மாற்றி மஹிந்திரா நிறுவனம் ரியர் வீல் டிரைவ் காராக இதை அறிமுகப்படுத்தினால் வெற்றி பெறும்.


Click it and Unblock the Notifications









