குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
மஹிந்திரா நிறுவனம் தனது மராஸோ காருக்கான ஏப்ரல் மாத தள்ளுபடி விபரங்களை அறிவித்துள்ளன. அந்நிறுவனம் மற்ற மாடல் கார்களுக்கும் தள்ளுபடிகளை அறிவித்திருந்தாலும், இந்த மராஸோ காரின் தள்ளுபடி சற்று கவனிக்கத்தக்க வகையில் இருக்கிறது. இந்த காரின் விற்பனை மிக மந்தமாக இருப்பதால் இருக்கும் ஸ்டாக்கை கிளியர் செய்ய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்த கார் கடந்து சில ஆண்டுகளாக மஹிந்திரா நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வரும் கார் என்றாலும், கடந்த சில மாதங்களாக இந்த காரின் விற்பனை குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல இந்த காருக்கு தள்ளுபடிகளை மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாத தள்ளுபடி விபரங்கள் மஹிந்திரா மராஸோ காருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 2023-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மஹிந்திரா மராஸோ காருக்கு ஒரு வகையான தள்ளுபடி 2024-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மஹிந்திரா மராஸோ காருக்கு ஒரு வகையான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. மஹிந்திரா மராஸோ காரில் உள்ள எம்2, எம்4 பிளஸ், ஆகிய மூன்று வேரியன்ட்களுக்கும் இந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா மராஸோ காரின் எம்2 டீசல் மேனுவல் கியர் வேரியண்ட் காரை பொருத்தவரை ரூபாய் 40,020 ரூபாய் நேரடியாக கேஷ் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக எம்4 பிளஸ் டீசல் மேனுவல் மற்றும் எம்6 பிளஸ் டீசல் மேனுவல் ஆகிய இரண்டு வேரியன்ட் கார்களுக்கும் தலா ரூபாய் 36,250 நேரடியாக கேஷ் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் இந்த காரின் மார்க்கெட் பங்கு ஒரு சதவீதம் கூட கிடையாது. அந்த அளவிற்கு மிக குறைவான எண்ணிக்கையிலேயே இந்த கார் விற்பனையாகி வருகிறது. அதன் காரணமாகவே இவ்வளவு அதிகமான தள்ளுபடிகளை அறிவித்து இந்த காரின் விற்பனையை எப்படியாவது அதிகப்படுத்த அந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.
என்னதான் அதிக தள்ளுபடிகளை வழங்கினாலும், இந்த காரின் விற்பனை பெரிய அளவில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆறு மாதமாக இந்த காரின் விற்பனை மெல்ல சரிந்து கொண்டே தான் இருக்கிறது. 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 89 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. 2023 நவம்பர் மாதத்தில் 49 கார்கள் விற்பனையாகி இருந்தன. டிசம்பர் மாதத்தில் 62 கார்கள் விற்பனையாகி இருந்தன.

2024-ம் ஆண்டு பொருத்தவரை ஜனவரி மாதம் 32 கார்கள் விற்பனையாகி இருந்தன. பிப்ரவரி மாதம் 51 கார்கள் விற்பனையாகி இருந்தன. கடந்த மார்ச் மாதமும் மொத்தமே 51 கார்கள் தான் விற்பனையாகி உள்ளது. இந்த ஏப்ரல் மாதம் அதைவிட குறைவான எண்ணிக்கையிலான கார்கள் மட்டுமே விற்பனையாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது 121 எச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் இணைக்கப்படுகிறது. இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை அனைத்து வேரியன்ட் கார்களிலும் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார் ஆகிய அம்சங்கள் பொருத்தப்படுகிறது.
இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளேயுடன் விற்பனைக்கு வருகிறது. இது போக ரிமோட் கீ லெஸ் என்ட்ரி ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் 17 இன்ச் அலாய் வீல் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இடம் பெறுகின்றன. இது தற்போது விற்பனையாகும் கார்களில் உள்ள அம்சங்களை விட குறைவாக இருப்பதற்கு காரணம் நீண்ட ஆண்டுகளாக இந்த கார் அப்டேட் செய்யப்படாமல் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் விரைவில் இந்த காரை நிறுத்துவதற்கான அறிகுறிகள் தான் தென்படுகின்றன. இந்த காரை அப்டேட் செய்யவும் அல்லது இந்த காரில் உள்ள குறைகளை நீக்கி புதிதாக வெளியிடவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது ஷோரூமில் இருக்கும் கார்கள் தூசி அடைந்து வருகின்றன. இந்த கார்களை எப்படியாவது விற்க வேண்டும் என ஆஃபர்களை அள்ளி வீசுகின்றனர்.


Click it and Unblock the Notifications









