நிறுத்தப்போறாங்கனு நினைச்ச காரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்த மஹிந்திரா! இதுல அப்படி என்ன இருக்குது?
மஹிந்திரா நிறுவனம் தனது இணையதளத்திலிருந்து இருந்து நீக்கிய மராஸோ காரை மீண்டும் இணையதளத்தில் சேர்த்துள்ளது இதன் மூலம் மரசெகாரின் விற்பனை நிறுத்தப்படுவதாக வெளியான செய்திகள் தவறு என நிறுவனம் தெளிவாக காட்டியுள்ளது ஆனால் இந்த முறை அதிக விலையில் இந்த கார் விற்பனைக்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து விரிவான விபரங்களை தான் காண போகிறோம்.
இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிக சீட்டர் கொண்ட காராக இருந்தால் அந்தக் கார் மக்கள் விரும்பும் காராக இருக்கிறது. இதனால் இந்த காரின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து அந்த காரை தயாரிக்கும் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை ஈட்டி தருகிறது.

மஹிந்திரா நிறுவனம் அரசு என்ற காரை எம்பிவி செக்மெண்டில் அதிக சீட்டர் கொண்ட காராக விற்பனை செய்து வந்தாலும், இந்த காரின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை மிக குறைவான அளவிலேயே இந்த காரின் விற்பனை இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த காரின் விற்பனை சரிந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த காரை மஹிந்திரா நிறுவனம் தனது வெப்சைட்டில் இருந்து நீக்கியது.
மஹிந்திரா நிறுவனம் இந்த மராஸோ காரை நீண்ட ஆண்டுகளாக அப்டேட் செய்யாமல் தொடர்ந்து விற்பனை செய்து வந்ததால், மஹிந்திர நிறுவனம் இந்த காரின் விற்பனை நிறுத்த திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. அதற்கு ஏற்றார் போல் வெப்சைட்டில் இருந்து இந்த கார் நீக்கப்பட்டதால் பலர் இந்த கார் இனி விற்பனையிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்படும் என்ற செய்தி கூட வெளியானது.

இந்த காரின் விற்பனையும் அதற்கேற்றார் போல் மிக மோசமாக இருந்தது. கடந்த ஆறு மாதங்களில் வெறும் 182 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. இதனால் மஹிந்திரா நிறுவனம் தனது வெப்சைட்டில் இருந்து இந்த காரை நீக்கிவிட்டதாகவும் இந்த காரின் விற்பனை நிறுத்தப்படுவது குறித்து செய்திகள் வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மீண்டும் இந்த காரை அதிக விலையில் மஹிந்திரா நிறுவனம் தனது வெப்சைட்டில் லிஸ்ட் செய்துள்ளது.
தற்போது மஹிந்திரா நிறுவனம் தனது மராஸோ காரை ரூ20,000 அதிகமான விலையில் லிஸ்ட் செய்துள்ளது. 6 விதமான வேரியண்ட்களில் இந்த கார் விற்பனைக்கு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன்படி ரூ14.39லட்சம் என்ற ஆரம்ப விலை முதல் டாப் வேரியன்ட் ரூ17லட்சம் என்ற விலை வரை விற்பனையாகி வருகிறது. பெரிய அளவில் விற்பனை இல்லாமல் இருக்கும் நிலையில், இந்த காரின் விலையை ஏன் மஹிந்திரா நிறுவனம் உயர்த்தியது என பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

மஹிந்திரா நிறுவனம் தனது எம்2 என்ற 7சீட்டர் காரை இதற்கு முன்னர் ரூ14.39 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வந்தது. இதுதான் பேஸ்வேரியன்ட் காராகும். இது தற்போது ரூ20,000 விலை அதிகரித்து ரூ14.59லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எம்2 8சீட்டர் வேரியண்ட் காரை பொறுத்தவரை இதற்கு முன்னர் ரூ14.39லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்த கார் தற்போது ரூ14.59லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.
எம்4 பிளஸ் வேரியன்டை பொறுத்தவரை 7 சீட்டர் கார் இதற்கு முன்னர் ரூ15.66 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது. அது தற்போது ரூபாய் 15.86 லட்சம் என விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே எம்4 வேரியண்டின் 8 சீட்டர் காரை பொருத்தவரை ரூ15.74 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது. தற்போது இது ரூ 15.94 லட்சமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக எம்6 பிளஸ் வேரியன்டை பொறுத்தவரை 7 சீட்டர் கார் இதற்கு முன்னர் ரூ16.72 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது. தற்போது ரூ14.92 லட்சமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. எம் 6 பிளஸ் வேரியண்டில் 8 சிட்டரை பொருத்தவரை ரூ 14.80 லட்சம் விற்பனையாகி வந்தது. தற்போது ரூ17 லட்சமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா மராஸோ காரின் விற்பனை சரிவடைந்த போதிலும், அந்நிறுவனம் தொடர்ந்து அந்த காரின் விலையை உயர்த்தி விற்பனையை தொடர நினைப்பதால் இந்த காரை அப்டேட் செய்த நிறுவனம், புதிதாக விற்பனையை பெற முயற்சி செய்யலாம் என்ற கருத்து தற்போது பேசப்பட்டு வருகிறது. இதனால் மஹிந்திரா நிறுவனம் மராஸோ காரை தற்போது உள்ள தொழிற்நுட்பத்திற்கு ஏற்றார் போல் அப்டேட் செய்யப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications









