எர்டிகாக்கு போட்டியாக வந்த இந்த காரை வெறும் 16 பேர் தான் வாங்கியிருக்காங்க! காரணம் இது தான்!

சமீப நாட்களாக எம்பிவி ரக கார்களின் விற்பனை அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் மக்கள் பலர் குடும்பத்துடன் பயணிக்கும் கார்களை அதிகம் விரும்ப துவங்கி விட்டார்கள். ஒரு கார் வாங்கினால் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. காரின் விலை அதிகமாக இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் பெரிய ரக கார்களை அதிகம் விரும்புகிறார்கள்.இதனால் எம்பிவி ரக கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் எம்பிவி ரக கார் ஒன்று மிக மோசமான விற்பனையை பெற்றுள்ளது. இதைப்பற்றிய விரிவான தகவல்களை தான் இங்கே காணப்படுகிறது.

எம்பிவி ரக கார் என்றாலே மக்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய நினைவில் இருப்பது மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் தான். குறைவான விலையிலும் அதே நேரம் அதிக நபர்களை கூட்டிச்செல்லும் காராக இந்த கார் இருக்கிறது. இந்த காரின் விற்பனையும் தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த மே மாதம் மட்டும் மாருதி நிறுவனத்தின் எர்டிக கார் 13,893 வாகனங்கள் மார்க்கெட்டில் விற்பனையாகி உள்ளன.

mahindra marazzo sales

இந்த காருக்கு போட்டியாக மார்க்கெட் விற்பனையாக வரும் காராக இருப்பது மஹிந்திரா நிறுவனத்தின் மராஸோ கார். நேரடியாக மாருதி நிறுவனத்தின் எர்டிகா காருடன் போட்டியிட்டாலும் இந்த காரின் விற்பனை மிக மோசமாக இருந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் வெறும் 16 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாத விற்பனை ஒப்பிடும்போது இதன் விற்பனை 52 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மஹிந்திரா நிறுவனத்தின் மராஸோ கார் 33 கார்கள் விற்பனையாகி இருந்தன. ஆனால் தற்போது அதில் பாதியாக குறைந்து 15 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் மஹிந்திரா நிறுவனம் இந்த மராஸோ காரை தற்போது உள்ள தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த காராக அப்டேட் செய்யவில்லை. மிக நீண்ட நாட்களாக அப்டேட் செய்யப்படாததால் இந்த காரின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.

mahindra marazzo sales

மஹிந்திரா மராஸோ காரை பொறுத்தவரை 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட காராக இருக்கிறது. இது 120.96 பிஎச்பி ப்வரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 18 முதல் 22 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் விற்பனையாகி வருகிறது.

இந்த காரின் விலையை பொருத்தவரை மார்க்கெட்டில் ரூபாய் 14.39 லட்சம் முதல் ரூபாய் 16.80 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. போட்டி நிறுவனங்களின் கார்களுக்கு கிட்டத்தட்ட போட்டியான விலையில் தான் இந்த கார் விற்பனையானாலும், இதில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே இருப்பதால் மக்கள் பலர் இந்த காரை பெரிய அளவில் விரும்பவில்லை. தற்போது பெட்ரோல் இன்ஜின் கார்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன.

mahindra marazzo sales

இந்த கார் மொத்தம் 7,8 சீட்டர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி, 10.6 இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், உயரம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், இரண்டு ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. இவ்வளவு அம்சங்கள் இருந்தும் தற்போது உள்ள புதிய அம்சங்கள் எதுவும் இந்த காரில் இல்லை.

லட்சக்கணக்கில் காசு கொடுத்து வாங்குபவர்கள் ஓரிரு லட்சம் அதிகமாக இருக்கும் போட்டி நிறுவனத்தின் காரில் அதிக அம்சங்கள் இருக்கும் காரை விட்டுவிட்டு இந்த காரை வாங்க விரும்ப மாட்டார்கள். அதன் காரணமாகவே இந்த காரின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. மஹிந்திரா நிறுவனமும் இந்த காரை கைவிட முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது. இதை அதிகாரப்பூர்வமாக மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கவில்லை.

மஹிந்திரா நிறுவனம் தற்போது ஸ்டாக்கில் இருக்கும் கார்களை மட்டும் விற்பனை செய்துவிட்டு இந்த காரை முழுவதுமாக தயாரிப்பில் இருந்து நீக்கி இந்த காரை முற்றிலுமாக விற்பனையில் இருந்து நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இருக்கும் ஸ்டாக்குகள் எல்லாம் ஓரளவு தீர்ந்த பின்பு இதன் விற்பனை நிறுத்தம் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் தனது மராஸோ காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது என்ற தகவலே பாதி பேருக்கு தெரியாமல் இருக்கிறது. இந்த காரை சாலைகளிலும் பெரிய அளவில் காண முடியவில்லை. இந்த காருக்கு மிகப்பெரிய வரவேற்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லாததால் இந்த காரை மக்கள் பெரிய அளவில் வரவேற்கவில்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, June 16, 2024, 7:00 [IST]
English summary
Mahindra marazzo sales may 2024 only 16 units sold
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X