மார்க்கெட்டையே இரண்டாக்க இந்த மஹிந்திரா பிளான் போட்டிருக்கு! பொலிரோவை இப்படி மாற்ற போறாங்களா!
இந்தியாவில் புதுமுக வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் மஹிந்திரா (Mahindra) நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கி இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது புதுமுக எஸ்யூவி ரக கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இரண்டுக்கும் மேற்பட்ட வாகனஙக்ளை அது அடுத்தடுத்து என 5 அல்லது 6 ஆண்டுகளில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. குறிப்பாக, நிறுவனம் தற்போது விற்பனையில் உள்ளன கார் மாடல்கள் சிலவற்றின் புதிய தலைமுறை வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அவற்றை புதிய தலைமுறையாக மட்டுமின்றி எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனைக்குக் கொண்டு வர அது திட்டமிட்டு இருப்பதாக தெரிகின்றது. குறிப்பாக, மஹிந்திராவின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான பொலிரோவில் இந்த மாற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, மஹிந்திரா நிறுவனம் பொலிரோவின் அடுத்த தலைமுறை வெர்ஷன் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷனை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

பொலிரோவின் அடுத்த தலைமுறை மாடல் 2026 ஆம் ஆண்டிற்குள்ளாகவும், பொலிரோவின் எலெக்ட்ரிக் வெர்ஷன் 2030 ஆம் ஆண்டிற்குள்ளாகவும் விற்பனைக்கு வந்துவிடும் என கூறப்படுகின்றது. ஆனால், இவற்றின் வருகை பற்றிய துள்ளியமான விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதேசமயம் இந்த காலக்கெடுவிற்குள்ளாகக் கூட இந்த கார்கள் விற்பனைக்கு வந்துவிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய தலைமுறை பொலிரோவை யு171 (U171) என்கிற குறிப்பெயரை மஹிந்திரா சூட்டியிருப்பதாகக் கூறப்படுகின்றது. விற்பனைக்கு வரும்போது பொலிரோ என்கிற பெயரிலேயே விற்பனைக்கு வரும். அல்லது, எக்ஸ்யூவி 3எக்ஸ் என எக்ஸ்யூவி 300-இன் பெயர் மாற்றம் செய்யப்பட்டதைப் போல இதன் பெயரும் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய தலைமுறை மஹிந்திரா பொலிரோவின் வடிவமைப்பு புதுப்புகளுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், இதன் உட்புறங்களும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, புதிய டர்போ டீசல் எஞ்சின் ஆப்ஷனை இந்த கார் பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சினே இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.
அது 132 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க்கை வெளியேற்றும். கூடுதலாக, மராஸ்ஸோ எம்பிவி (Marazzo MPV)-யில் பயன்படுத்தப்படும் 1.5 லி டர்போ டீசல் மோட்டாரும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய எஞ்சினைத் தொடர்ந்து, அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் எதிர்பார்க்கலாம்.
அந்தவகையில், டூயல் ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஈபிடி உடன் கூடிய ஏபிஎஸ், வேக எச்சரிக்கைகள், சீட் பெல்ட் எச்சரிக்கை அம்சம் மற்றும் சென்ட்ரல் லாக்கிங்கிற்கான மேனுவல் ஓவர்ரைடு ஆகிய அம்சங்களும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதேபோல், சிறந்த தொழில்நுட்ப அம்சங்களாக இந்த காரில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர்டு ஜன்னல்கள், பின்புறத்திற்கான ஏசி வென்ட்கள் போன்றவையும் இந்த காரில் இடம் பெற இருப்பதாக கூறப்படுகின்றது.
இதேபோல், மஹிந்திரா பொலிரோ இவியும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கியதாக இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரையும் இங்க்ளோ ஸ்கேட்போர்டு (INGLO skateboard) இயங்குதளத்திலேயே மாஹிந்திரா உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காருக்கு மஹிந்திரா நிறுவனம் பி1 (P1) என்ற குறியீட்டுப் பெயரை சூட்டியிருக்கின்றது.
தார்.இ கான்செப்ட் (Thar.e Concept) தழுவியே இந்த காரை அது தயார் செய்ய இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அந்தவகையில், 109 பிஎச்பி மற்றும் 135 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின்சார மோட்டார் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், 286 பிஎச்பி மற்றும் 535 என்எம் டார்க்கை வெளியேற்றும் மோட்டார் ஆப்ஷனும் பொலிரோ எலெக்ட்ரிக் வெர்ஷனில் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.
இந்த காரில் பயன்படுத்தப்பட இருக்கும் பேட்டரி பேக் பற்றிய விவரக்குறிப்புகள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் 60 kWh முதல் 80 kWh வரையிலான திறன் கொண்ட பேட்டரி பேக்குகள் இந்த காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் முழு சார்ஜில் 325 கிமீ முதல் 450 கிமீ வரையில் ரேஞ்ஜை வழங்கும். இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய காராகவே மஹிந்திரா பொலிரோ இவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 400 இவி எனும் ஒற்றை எலெக்ட்ரிக் கார் மாடலையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாடலைத் தொடர்ந்து இன்னும் சில எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. அதில் ஒன்றாகவே விரைவில் பொலிரோ இவி விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








