டாடாவை அடித்து பின்னாடி தள்ளிய மஹிந்திரா! 2வது இடத்தை பிடித்தது இப்படி தான்!

இந்தியாவில் கார் தயாரிப்பு துறையில் மஹிந்திரா நிறுவனம் டாடா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாறி உள்ளது. இந்நிறுவனம் எஸ்யூவி கார்களின் விற்பனை அதிகரிப்பதன் காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்யும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எந்த நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்கிறது என்ற போட்டி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தொடர்ந்து மாதத்தில் நிறுவனம் தான் முதலிடத்தில் இருக்கிறது. மிக அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை அந்நிறுவனம் தான் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது இடத்தில் இடம் முதல் அடுத்தடுத்த இடங்களை பிடிப்பதற்கான போட்டி பலமாக நடந்து வருகிறது.

Mahindra Overtakes Tata Motors

பொதுவாக மாருதி நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் ஹுண்டாய் அல்லது டாடா நிறுவனங்கள் தான் போட்டி போட்டு வந்தன. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்து இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மாருதிக்கு அடுத்த இரண்டாவது இடத்தை அந்நிறுவனம் பிடித்துள்ளது. இது பலரை ஆச்சரிய படுத்தி உள்ளது.

டாடா நிறுவனம் பிடிக்க வேண்டிய இந்த இடத்தை மஹிந்திரா நிறுவனம் டாடா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி பிடித்துள்ளது என்பது ஒரு ஆச்சரியமான தகவல் தான். இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டின் மொத்தம் 1,35,962 வாகனங்கள் மஹிந்திரா நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,29,934 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை விட 6028 வாகனங்கள் கூடுதலாக மஹிந்திரா நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Mahindra Overtakes Tata Motors

இது செப்டம்பர் மாதமும் தொடர்ந்துள்ளது செப்டம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 51,062 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் வெறும் 41,065 வாகனங்களை தான் விற்பனை செய்ய முடிந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை விட மஹிந்திரா நிறுவனம் 9,997 வாகனங்களை கூடுதலாக விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா நிறுவனம் இந்த சாதனையை செய்வதற்கு அந்நிறுவனத்தின் வாகனங்களின் விற்பனை அதிகமானது முக்கியமான காரணமாக இருக்கிறது. குறிப்பாக ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி 700, தார், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகிய கார்களின் விற்பனை இந்த சாதனைக்கு வழி வகுத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் விற்பனை தான் ஒட்டுமொத்த காலாண்டின் விற்பனையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது நமக்கு தெரிய வந்துள்ளது.

Mahindra Overtakes Tata Motors

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்திருந்தது. கடந்த ஜூலை மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 44,727 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. மஹிந்திரா நிறுவனம் 41,623 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஆகஸ்ட் மாதம் இந்த விற்பனை வித்தியாசம் மிக குறைவாகவே இருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 44,142 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

மஹிந்திரா நிறுவனம் 43,277வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் 865வாகனங்கள் தான் இருந்தன. இந்நிலையில் தான் கடந்த செப்டம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் டாடா நிறுவனத்தை விட கூடுதலாக சுமார் 10,000வாகனங்கள் விற்பனை செய்து ஒட்டுமொத்த காலாண்டில் அதிகமாக வாகனங்களை விற்பனை செய்த இரண்டாவது பெரிய நிறுவனமாக மாறி உள்ளது. தொடர்ந்து இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள மஹிந்திரா நிறுவனம் அடுத்தடுத்த பயிற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

இரண்டாவது இடத்திற்கு டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் போட்டி போட்டு வந்த நிலையில் இந்த போட்டியில் தற்போது மயான நிறுவனமும் இணைந்துள்ளது. இனி இந்த இரண்டாம் இடத்திற்கான போட்டி மூன்று நபர்களுக்கு இடையேயான போட்டியாக மாறி உள்ளது. இதனால் இரண்டாவது இடத்தை எந்த நிறுவனம் தொடர்ந்து பிடிக்க போகிறது என்பதை ஒவ்வொரு மாதமும் பரபரப்புடன் பார்க்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா, ஹுண்டாய் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் சிறப்பாக வளர்ந்து வருவதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறது. மார்க்கெட்டில் நல்ல போட்டி ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியமான இந்த போட்டியை பயன்படுத்தி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களை வளர்த்துக் கொண்டால் நிச்சயம் இந்தியா வளரும்.

More from DriveSpark

Article Published On: Monday, October 7, 2024, 10:52 [IST]
English summary
Mahindra overtakes tata motors sep 2024 q3 sales
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X