அதிரடியாக காரின் விலையை உயர்த்திய மஹிந்திரா! திடீர்ன்னு இவ்வளவு ஏத்திட்டா எப்படி சமாளிக்கிறது?

மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான கார்களுக்கான விலையை அதிகரித்துள்ளது. அதன்படி மஹிந்திரா தார் எக்ஸ்யூவி 700 மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய கார்களின் விலை இந்தியாவில் ரூபாய் 57,000 வரை அதிகமாகியுள்ளது. இப்படியாக ஒவ்வொரு காரும் எவ்வளவு விலை ஏற்ற செய்யப்பட்டுள்ளது. இது எப்பொழுது முதல் நமக்கு வருகிறது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா தார்: மஹிந்திரா நிறுவனத்தின் கார் ரூபாய் 10.98 லட்சத்திலிருந்து தற்போது 11.25 லட்சம் விலை உயர்ந்துள்ளது. பொருத்தவரை 19.93 லட்சமாக இருந்த விலை தற்போது 17.20 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. அனைத்து வேரியன்டுகளும் ரூபாய் 23 ஆயிரம் முதல் ரூ35 ஆயிரம் வரையில விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ளது படி ஒரு காருக்கு குறைந்தபட்சம் ரூபாய் 23,000 விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.

Mahindra Price Hike

இது எல்எக்ஸ் பெட்ரோல் எச்டி ஏடி ரியர் வீல் டிரைவ் கார் இருப்பதிலேயே குறைவாக ரூ23 ஆயிரம் விலை உயர்வாகும். இருப்பதிலேயே அதிகபட்சமாக ஏஎக்ஸ்(ஓ) எச்டி எம்டி எம்எல்டி டீசல் வேரியன்ட் காருக்கு ரூபாய் 35 ஆயிரம் வரை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் காரின் விலை அதிகமாகி உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700: மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை பொருத்தவரை விலை உயர்வு என்பது ஒரு சில வேரியன்ட்களில் இருக்கிறது. சில வேரியன்ட்களில் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் பேஸ் வேரியன்ட் பெட்ரோல் மேனுவல் வேரியன்டின் விலை தற்போது 13.99 லட்சம் ஆக விற்பனையாகி வருகிறது. இதற்கு முன்னர் ரூ14.03 லட்சமாக இருந்தது. தற்போது ரூபாய் 4000 விலை குறைக்கப்பட்டுள்ளது.

Mahindra Price Hike

அடுத்ததாக ஏஎஸ்3 மற்றும் ஏஎக்ஸ் 5 ஆகிய வேரியன்ட்களுக்கு முறையே ரூ8000 மற்றும் ரூ16ஆயிரம் விலை குறைக்கப்பட்டுள்ளது. டாப் வேரியன்டான ஏஎக்ஸ் 7எல் 7 சீட்டர் ஆல்வீல் டிரைவ் டீசல் ஆட்டோமெட்டிக் வேரியன்டின் விலை ரூ42 ஆயிரம் அதிகமாகி உள்ளது. தற்போது இந்த கார் ரூ26.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இருப்பதிலேயே அதிகபட்சமாக ஏஎக்ஸ் 7எல் 7சீட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியன்டிற்கு ரூ57ஆயிரம் வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு எல்லாம் 2024 எக்ஸ்யூவி 700 வெர்ஷன் காருக்கான விலை உயர்வு மட்டும் தான் இதில் முக்கியமாக கேப்டன் சீட்டுகள் மத்திய கோவில் இடம்பெற்றுள்ளன. முன்பக்க சீட்டுகள் வென்டிலேட்டர் சீட்டுகளாகவும் மெமரி பங்க்ஷன் உடன் கூடிய ஓஆர்விஎம் பொருத்தப்பட்ட காருடனும் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. புதிதாக இந்த காரில் நேப்போலி பிளாக் என்ற நிறம் புதிய கலர் ஆப்ஷனாக சேர்க்கப்பட்டுள்ளது.

Mahindra Price Hike

மஹிந்திரா ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக்: காரை பொறுத்தவரை நல்ல விஷயம் என்னவென்றால் இசட் 87 4 வீல் டிரைவ் டீசல் மேனுவல், இசட் 8 4 வீல் டிரைவ், இசட் 8எல் 4 வீல் டிரைவ் டீசல் ஆட்டோமேட்டிக் ஆகிய கார்களில் எந்தவிதமான விலை மாற்றமும் இல்லை.

விலையேற்றம் இந்த வேரியன்டில் மட்டும் தான். ஆனால் மற்ற வேரியன்ட்களில் விலை மாற்றம் இருக்கிறது. ஸ்கார்பியோ என் பெட்ரோல் மேனுவல் வேரியன்டை பொறுத்தவரை ரூபாய் 34 ஆயிரம் முதல் ரூபாய் 39 ஆயிரம் விலை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோமெட்டிக் வேரியன்டிலும் விலை உயர்வு இருக்கிறது.

ஸ்கார்பியோ என் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியன்டை பொறுத்த வரை ரூ 17,000 முதல் ரூ 20,000 வரை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. டீசல் மெஷின்களை பொறுத்தவரை மேனுவல் வேரியன்ட்கள் ரூபாய் ஆயிரம் முதல் ரூ 39,000 வரை விளைவு உயர்வு செய்யப்பட்டுள்ளது. டீசல் ஆட்டோமேட்டிக் வேரியன்டை பொருத்தவரை ரூபாய் 11,000 முதல் ரூ26,000 வரை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஸ்கார்பியோ என் கார் ரூபாய் 13.60 லட்சம் முதல் ரூ 24.54 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அதே நேரம் ஸ்கார்பியோ கிளாசிக் காரை பொறுத்தவரை தற்போது 13.59 லட்சம் முதல் ரூபாய் 17.35 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மற்றும் நான்கு விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரும் ரூபாய் 29,000 முதல் ரூ34,000 வரை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா காருக்கு மார்க்கெட்டில் விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தாலும் கார்கள் மீதான மவுசு காரணமாக இந்த விளைவுகள் எல்லாம் மக்கள் பெரிதாக பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதன் விற்பனையை சரி விடாமல் வாங்கிக் கொண்டே இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு என்பது தற்போதைய அமலுக்கு வந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 25, 2024, 15:13 [IST]
English summary
Mahindra price hike thar xuv700 scorpio up to 57k
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X