சரியான நேரத்தில் மஹிந்திராவுக்கு செக் வைத்த இண்டிகோ! பல கோடி ரூபாய் முதலீட்டில் மண் அள்ளி போட பாக்குது!!

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் தீவிரமாக செயல்பட்டுவரும் மஹிந்திரா நிறுவனம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் பிஇ 6இ (BE 6e) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) என இரு எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்தது. தனது அசத்தலான தோற்றத்தினால் கவனத்தை ஈர்த்துவரும் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களில் ஒன்றிற்கு மிகப்பெரும் ஏர்லைன் நிறுவனத்தினால் பிரச்சனை உண்டாகி உள்ளது. அது என்ன என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் எந்தவொரு பொருளுக்கும் அடையாளமே அதன் பெயர் தான். அதே பெயரை வேறு நிறுவனம் தனது தயாரிப்புக்கு சூட்டும்போது, அது மக்களிடையே ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தி, விற்பனையை பாதிக்கிறது. ஒரு சில நிறுவனங்கள் மார்க்கெட்டில் பிரபலமாக இருக்கும் பெயரின் பாதியை மட்டும் பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கின்றன.

mahindra renamed its be 6e

இந்த குளறுபடிகளை தவிர்க்க, காப்புரிமை விஷயத்தில் கடந்த காலங்களில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இருப்பினும், சில நேரங்களில் தவறுதலாக காப்புரிமை நோட்டீஸ்களை எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது. தற்போது மஹிந்திரா நிறுவனம் எதிர்கொண்டிருப்பதை போல. மஹிந்திராவுடன் தற்போது மல்லுக்கு நின்றிருப்பது வேறெந்த நிறுவனமும் இல்லை, பிரபல ஏர்லைன் நிறுவனமான இண்டிகோ ஆகும்.

இண்டர்க்ளோப் எண்டர்பிரைசைஸ் என்கிற நிறுவனத்தின் கீழ் செயல்படும் இண்டிகோ ஹரியானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இண்டிகோ ஏர்லைன் சேவையில் உள்ள விமானங்களின் பெயர்கள் இறுதியாக 'E' என முடிவதாக உள்ளன. இந்த வகையில், '6E' என்கிற பெயரிலான விமானமும் இண்டிகோ ஏர்லைனில் உள்ளது. இந்த 6இ பெயரில் தான் மஹிந்திரா அதன் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.

mahindra renamed its be 6e

காரின் முழு பெயர் 'பிஇ 6இ' என்றாலும், அதில் '6இ' என்பது பயன்படுத்தப்பட்டுள்ளதால், மஹிந்திராவுக்கு இண்டிகோ நிறுவனம் காப்புரிமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இத்தனைக்கும், மஹிந்திரா எலக்ட்ரிக் காரின் பெயரில் இருப்பது '6e' ஆகும். அதாவது, சிறிய 'e'-ஐ தான் மஹிந்திரா பயன்படுத்தி உள்ளது. இதைதான், இண்டிகோவின் நோட்டீஸுக்கு மஹிந்திராவும் தனது பதிலாக சமீபத்தில் தெரிவித்து இருந்தது.

ஆனால் தற்போது வேறு வழியில்லாமல், பிஇ 6இ எலக்ட்ரிக் காரின் பெயரை, வெறும் 'பிஇ 6' என மஹிந்திரா மாற்றிக் கொண்டுள்ளது. இதுகுறித்து மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து என்னவென்றால், "எங்கள் தயாரிப்பை 'பிஇ 6' என்று முத்திரை குத்த முடிவு செய்கிறோம்.

mahindra renamed its be 6e

எவ்வாறாயினும், இண்டிகோவின் கூற்று ஆதாரமற்றது மற்றும் இதற்கு சவால் செய்யாவிட்டால், எங்களின் குறி தனித்துவமாகவும், வித்தியாசமாகவும் இருந்தாலும், ஆரோக்கியமற்ற முன்னுதாரணத்தை அமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது தொழில்கள் மற்றும் துறைகளில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பெரும் தடையாக இருக்கும். எனவே இதை நீதிமன்றத்தில் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து போராடுவோம் மற்றும் பிஇ 6இ என்ற பிராண்ட் பெயருக்கான எங்கள் உரிமையை கோருவோம்" என்றார்.

மஹிந்திரா நிறுவனம் அதன் பிஇ 6இ எலக்ட்ரிக் காரின் பெயரை பிரிவு 12 (வாகனங்கள்)-இன் கீழ் பதிவு செய்துள்ளது. இந்த காரின் பெயரில் உள்ள 'BE' ஆனது போர்ன் எலக்ட்ரிக் (Born Electric) என்பதை குறிக்கிறது. இந்த போர்ன் எலக்ட்ரிக் ஆனது பிஇ 6இ மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களை உருவாக்க பயன்படுத்தப்பட்ட பிளாட்ஃபாரத்தின் பெயர் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம், இந்தியாவின் முன்னணி ஏர்லைன் நிறுவனமாக இருக்கும் இண்டிகோ உடன் எந்த மோதலும் வேண்டாம் என விரும்புகிறது. இதனால்தான், பிஇ 6இ காரின் பெயரை பிஇ 6 என மாற்றிக் கொள்ள முன்வந்துள்ளது. இருப்பினும், இந்த பெயருக்கான உரிமையை அவ்வளவு எளிதாக மஹிந்திரா விட்டுவிடாது என்பது அதன் அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 8, 2024, 21:12 [IST]
English summary
Mahindra renamed its new be 6e electric car to be 6 after indigo infringement
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X