ஆடி-பென்ஸ் கார்களுக்கு இணையான கேபின் உடன் வருகிறது மஹிந்திரா கார்.. படத்த பாத்து எல்லாரும் மிரண்டு நிக்கிறாங்க

இந்தியாவில் மின்சார கார் (Electric Car)-களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த சூழலைத் தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ளும் முயற்சியில் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில களமிறங்கி இருக்கின்றன. அவர்களில் நம்முடைய மஹிந்திரா (Mahindra) நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் அடுத்தடுத்து என பல புதுமுக எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே நிறுவனத்தின் செயல்பாடும் அமைந்திருக்கின்றது. இப்போதுகூட அந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் வெளியீடு செய்ய இருக்கும் புதுமுக எலெக்ட்ரிக் காரின் டீசர் படத்தையே வெளியிட்டு இருக்கின்றது.

அந்த காரின் கேபினை வெளிக்காட்டக் கூடிய படத்தையே வெளியிட்டுள்ளது. ஆடி, பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்களுக்கே டஃப் கொடுக்கும் அம்சத்தைக் கொண்டதாக அந்த புதுமுக காரின் கேபின் இருப்பதையும் நம்மால் அறிய முடிகின்றது. ஆகையால், எதிர்காலத்தில் விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்கள் ஆடம்பர வகை கார்களுக்கே சவால் விடக் கூடியதாக இருக்கும் என்பது இதன் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது.

Mahindra xev 9e

நிறுவனம் தற்போது வெளியிட்டு இருப்பது எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலெக்ட்ரிக் கார் மாடலின் கேபின் படம் ஆகும். விசாலமான கேபின், இரண்டு பெரிய திரைகள் உள்ளிட்டவற்றை இந்த கார் கொண்டிருக்கப் போவது இதன் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது. மேலும், இந்த காரையே அது வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி அன்று வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

அன்றைய தினமே இந்த புத்தம் புதிய கார் பற்றிய பல்வேறு முக்கிய தகவல்களை மஹிந்திரா அறிவிக்க இருக்கின்றது. விலை, இந்த காரில் இடம் பெற்ற இருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் ரேஞ்ச் திறன் உள்ளிட்டவை பற்றிய தகவல்களை அது வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Mahindra xev 9e

இந்தியாவில் இப்போதை நிலவரப்படி மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு உதாரணமாக எம்ஜி (JSW MG Motor) நிறுவனத்தை கை காட்டலாம். இந்த நிறுவனம் தற்போது டாடாவிற்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற தொடங்கி இருக்கின்றது.

நிறுவனம் 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery as a service) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர் அதன் எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல டிமாண்ட் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டத்தின்கீழ் வாங்கப்படும் வாகனங்களில் இருக்கும் பேட்டரி பேக்கிற்கு நம்மால் உரிமம் கொண்டாட முடியாது.

ஆகையால், அதற்கு பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு கிமீட்டருக்கு ரூ. 2.5 முதல் ரூ. 3.5 வரை கட்டணமாக செலுத்த வேண்டும். இத்தகைய திட்டத்தையே கார்களில் முதல் முறையாக எம்ஜி அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக கடந்த மாதத்தில் அதன் மின்சார கார்களின் விற்பனை புதிய உச்சத்தை எட்டின.

இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் பிரிவை அதகளப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்றது மஹிந்திரா நிறுவனம். இந்த நிறுவனம் எக்ஸ்இவி 9இ கார் மாடலை மட்டுமல்ல, அடுத்தடுத்து என இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார் மாடல்களை நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. அந்தவகையில், பிஇ 6இ எனும் எலெக்ட்ரிக் கார் மாடலும் வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதன் விளைவாகவே மஹிந்திரா, எம்ஜி போன்ற நிறுவனங்கள் மிக தீவிரமாக புதிய மின்சார கார்களை களமிறக்கும் விதமாக செயல்பட தொடங்கி இருக்கின்றன. எனவே விரைவில் இந்தியாவில் அதிக அளவில் எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகம் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 14, 2024, 19:06 [IST]
English summary
Mahindra revealed upcoming xev 9e electric car cabin pic its get massive digital screens
மேலும்... #mahindra #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X