டாடா, ஹூண்டாய் எல்லாம் சைடு வாங்குங்க! மஹிந்திராவின் சேல்ஸ் எவ்வளவு பாத்தீங்களா?

மஹிந்திரா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. கடந்த ஒரே மாதத்தில் மொத்தம் 51,062 வாகனங்களை அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 24 சதவீத வளர்ச்சியை நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் எல்லாம் தற்போது மக்கள் மத்தியில் பெயர் பெற்ற வாகனங்களாக இருக்கின்றன. இந்த வாகனங்கள் எல்லாம் தரமான வாகனங்களாக இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். இதனால் இந்த நிறுவனத்தின் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் இந்த நிறுவனம் திறந்து வளர்ச்சி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

mahindra sales in september 2024

இந்நிலையில் தற்போது அக்டோபர் மாதம் பிறந்துள்ள நிலையில் மஹிந்திரா நிறுவனம் தங்கள் செப்டம்பர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி மஹிந்திரா நிறுவனம் கடன் செப்டம்பர் மாதம் மொத்தம் 51,062 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டு இதே செப்டம்பர் மாதம் நடந்த விற்பனையை ஒப்பிடும்போது 23.74% அதிகமாகும்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் வெறும் 41,2607 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும்போது தற்போது 9,795 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை ஒப்பிடும்போது தற்போது 17.99 சதவீதம் அளவுக்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

mahindra sales in september 2024

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 43,277 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதை ஒப்பிடும்போது இந்த மாதம் 7,785 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன. ஒட்டு மொத்தத்தில் மஹிந்திரா நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மஹிந்திரா நிறுவனம் 50,000 என்ற எண்ணிக்கையை ஒரே மாதத்தில் கடந்துள்ளத இதுதான் முதல்முறையாகும்.

மஹிந்திரா நிறுவனம் கமர்ஷியல் வாகன விற்பனையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இலகு ரக கமர்சியல் வாகன பிரிவில் 2 டன்னுக்கும் குறைவான எடை கொண்ட வாகனங்களில் கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 3444 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த ஆண்டு சட்டம் 3941 வாகனங்கள் விற்பனையாகின்றது. இது 13 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும்.

mahindra sales in september 2024

இலகு ரக கமர்சியல் வாகனம் 2 முதல் 3.5 டன் எடை கொண்ட பிரிவில் தர செப்டம்பர் மாதம் 16,988 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 17,438 வாகனங்கள் தான் விற்பனையாகி இருந்தன. இதிலும்3 சதவீத விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக 3.5 டன்னுக்கும் அதிகமான பிரிவில் 3274 வாகனங்கள் கடன் செப்டம்பர் மாதவும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2,618 வாகனங்கள் விற்பனையாக இருந்தன. இது 25% வளர்ச்சியாகும்.

இதுபோக மஹிந்திரா நிறுவனம் 3 வீலர்களையும் விற்பனை செய்து வருகிறது. அதன்படி கலந்து செப்டம்பர் மாதம் 10,044 3 வீலர்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 7,921 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. இது 27 சதவீதம் வளர்ச்சியாகும். இப்படியாக கமர்ஷியல் வாகனத்திலும் ஓரளவுக்கு வளர்ச்சியை அந்நிறுவனம் சந்தித்துள்ளது.

ஏற்றுமதி பொறுத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 3,027 வாகனங்களை நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 2,419 வாகனங்களை தான் ஏற்றுமதி செய்து செய்திருந்தது. தற்போது 25 சதவீதம் ஏற்றுமதி அதிகமாகியுள்ளது. ஏற்றுமதிலும் இந்நிறுவனம் நல்ல வளர்ச்சியை சந்தித்து வருவது சர்வதேச அளவில் நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மிகப்பெரிய ஜாக்பாட்டை அடித்துள்ளது என சொல்லலாம். இந்தியாவில் டாடா, ஹுண்டாய் ஆகிய நிறுவனங்கள் தான் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது மஹிந்திரா நிறுவனம் அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விற்பனையை வளர்ச்சி செய்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 1, 2024, 14:25 [IST]
English summary
Mahindra sales september 2024 crosses 51k new record
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X