எர்டிகாவை தூர போடுங்க மஹிந்திராவின் இந்த காரை வாங்க தான் ஊரே போட்டி போடுது!
குடும்பத்துடன் பயணிக்கும் வகையிலான அதிக சீட்டர் எண்ணிக்கை கொண்ட வாகனங்களில் விற்பனை சமீபக ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனாவிற்கு பிறகு குடும்பத்துடன் பயணிக்கும் வாகனங்கள் மக்களை ஈர்க்கும் வாகனங்களாக மாறிய வருகின்றன. இந்நிலையில் இந்த செக்மெண்டில் எப்பொழுதும் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் தான் முன்னணியில் இருக்கும் நிலையில், கடந்த மாதம் இந்த நிலை மாறி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வாகனம் என்றாலே இன்று பலர் குடும்பத்துடன் பயணிக்கும் வகையிலான வாகனங்களை தான் தேர்வு செய்து வருகிறார்கள். இதனால் அவர்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறிய மற்றும் பெரிய ரக வாகனங்களை தேர்வு செய்து வாங்கி வருகிறார்கள். இன்று எஸ்யூவி ரக வாகனங்கள் தான் குடும்பங்களோடு பயணிக்கும் ரக வாகனங்களாக இருப்பதால் இந்த வாகனத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருக்கிறது.

இன்று எஸ்யூவி கார்களிலேயே டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார்தான் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. ஆனால் இந்த கார் வெறும் 5 சீட்டர் கார்தான். 7 சீட்டர் செக்மெண்டில் எப்பொழுதும் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் தான் முதலிடத்தில் இருக்கும். இந்த கார் குறைவான விலையாக இருப்பதாலும் அதே நேரம் அதிக நபர்கள் பயணிக்கும் சிறப்பான காராக இருப்பதாலும், மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாத விற்பனை நிலவரப்படி எஸ்யூவி கார்களில் நம்பர் 1 இடத்தில் டாடா பஞ்ச் கார் இருக்கிறது. அதே நேரம் பட்டியலில் 7வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இருக்கிறது. 7 சீட்டர் கொண்ட கார்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன.

கடந்த மார்ச் மாதம் மட்டும் மொத்தம் 15,151 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 8,788 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது விற்பனை என்பது 72% அதிகரித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மாருதி எர்டிகா கார் மற்றும் 14,888 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. அதையும் தாண்டி மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் விற்பனையாகி உள்ளது.
இதன் மூலம் நம் மக்கள் மத்தியில் மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கு மாருதி எர்டிகா காரை விட அதிகமான வரவேற்பு இருப்பது தெளிவாக தெரிகிறது. மாருதி நிறுவனத்தின் எர்டிகா கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 9,028 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. அதை ஒப்பிடும்போது 75 சதவீதம் வளர்ச்சி என்றாலும் விற்பனை எண்ணிக்கையில் ஸ்கார்பியோ கார் தான் அதிகமாக விற்பனையாகி உள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பொறுத்தவரை 9 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ப்ளூடூத் மற்றும் அக்ஸ் கனெக்டிவிட்டி ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 132 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த இஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.
மஹிந்திரா ஸ்கார்பியோ கார் பொருத்தவரை மார்க்கெட்டில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்.ஜி அஸ்ட்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலையை பொறுத்தவரை ரூபாய் 13.59 லட்சம் முதல் ரூபாய் 17.35 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரை மிஞ்சி மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் விற்பனையாகியுள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. மாருதி நிறுவனத்தின் விலை தான் குறைவாக இருந்தாலும் மக்கள் மத்தியில் ஸ்கார்பியோ போன்ற காரின் லுக் தேவைப்படுகிறது என்பதால் மக்கள் பலர் அந்த காரை தான் விரும்புகிறார்கள். மாருதி நிறுவனம் தனது எர்டிகா காரை தற்போது உள்ள டிரெண்டிற்கு ஏற்ப அப்டேட் செய்தால் அதன் விற்பனை அதிகரிக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்னதான் மாருதி எர்டிகா காரை மிஞ்சி மஹிந்திரா ஸ்கார்பியோ கார் அதிகமாக விற்பனையாகி இருந்தாலும் இந்த டிரெண்ட் தொடர்ந்து நீடிக்குமா என்பது சந்தேகமாக தான் உள்ளது. மக்கள் மத்தியில் வெட்டியா காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மாருதி நிறுவனம் இந்த காரை அப்டேட் செய்து விட்டால் இதன் விற்பனையை யாராலும் தடுக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









