22 வருஷம் இல்ல, இன்னும் 20 வருஷம் ஆகினாலும் இந்த காருக்கு மவுசு இருக்கும்! எல்லா ஊரிலும் கஸ்டமர்ஸ் இருக்காங்க!

மஹிந்திரா (Mahidra) நிறுவனத்தில் இருந்து நீண்ட வருடங்களாக விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று ஸ்கார்பியோ (Scorpio) ஆகும். இந்த காரின் பெயர் பலத்தரப்பட்ட மக்களை கவர்ந்தது மட்டுமின்றி, அதற்கேற்ப மஹிந்திரா நிறுவனம் கடந்த காலங்களில் இருந்து ஸ்கார்பியோ கார்களை நன்கு உடலமைப்புடன், பவர்ஃபுல்லான என்ஜின் ஆப்ஷன்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இதனால், ஸ்கார்பியோ கார்களின் விற்பனை பெரும்பாலும் அதிகமாகவே இருந்து வருகிறது. இது கடந்த நவம்பர் மாத விற்பனையிலும் தொடர்ந்துள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் மக்களால் வாங்கப்படும் டாப்-10 கார்களை எடுத்து பார்த்தால், அதில் மஹிந்திரா ஸ்கார்பியோவின் பெயரும் இருக்கும். அந்த அளவிற்கு மார்க்கெட்டில் பிரபலமாக விளங்கும் ஸ்கார்பியோ கார் நடந்து முடிந்த 2024 நவம்பர் மாத விற்பனையிலும் 10வது இடத்தை பிடித்துள்ளது.

mahindra scorpio car sales increased

கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கார்பியோ கார்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 704 ஆகும். 2023 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை ஆனது 4% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 12 ஆயிரத்து 185 ஸ்கார்பியோ கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.

கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 46 ஆயிரத்து 222 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. அதுவே, 2023 நவம்பரில் 39 ஆயிரத்து 981 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, மஹிந்திரா கார்கள் விற்பனை இந்த ஆண்டு நவம்பரில் 15.6% அதிகரித்துள்ளது. இதன் மூலமாக, கடந்த நவம்பரில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனமாக 4வது இடத்தை மஹிந்திரா பிடித்துள்ளது.

mahindra scorpio car sales increased

நவம்பரில் மஹிந்திரா விற்பனை செய்த 46 ஆயிரத்து 222 கார்களில் ஸ்கார்பியோ கார்களின் எண்ணிக்கை மட்டும் 12 ஆயிரத்து 704 ஆகும். அதாவது, மஹிந்திராவில் இருந்து வாங்கப்படும் கார்களில் 4இல் ஒன்று ஸ்கார்பியோ ஆக உள்ளது. ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் இரு விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில், ஸ்கார்பியோ கிளாசிக் ஆனது ஸ்கார்பியோ காருக்கே உண்டான பெட்டகம் வடிவத்தை கொண்டதாகவும், ஸ்கார்பியோ-என் ஆனது நெக்ஸ்ட்-ஜென்ரேஷன் ஸ்கார்பியோ காராக, இன்றைய கால இளம் தலைமுறையினரை கவரக்கூடியதாக உள்ளது. 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ-என் கார் வழக்கமான ஸ்கார்பியோ காரின் பெட்டகம் வடிவத்தில் இருந்து மாறுப்பட்டதாக செவ்வகம் வடிவில் உருவாக்கப்படுகிறது.

mahindra scorpio car sales increased

சமீப காலமாக ஸ்கார்பியோ கார்களுக்கு அதிகரித்துவரும் வரவேற்பிற்கு ஸ்கார்பியோ-என் ஓர் முக்கியமான காரணமாகும். ஸ்கார்பியோ-என் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ. 13.85 லட்சத்தில் இருந்து ரூ.24.54 லட்சம் வரையில் உள்ளன. 6-சீட்டர் மற்றும் 7-சீட்டர் ஆப்ஷன்களில் ஸ்கார்பியோ-என் விற்பனை செய்யப்படுகிறது. தோற்றத்தில் மட்டுமின்றி, தொழிற்நுட்ப அம்சங்களிலும் மேம்பட்டதாக ஸ்கார்பியோ-என் விளங்குகிறது.

காருக்குள் டேஸ்போர்டில் வழங்கப்படும் 20.32 செ.மீ டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 17.7 செ.மீ வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை அவற்றுள் முக்கியமானவை ஆகும். மறுப்பக்கம், ஸ்கார்பியோ கிளாசிக் காருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பழைய தோற்றத்தில் ஸ்கார்பியோ காரை வாங்க நினைப்பவர்களுக்கு ஸ்கார்பியோ கிளாசிக் சரியான தேர்வாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் நிறைய பேர் இந்த காரை வாங்குகின்றனர். ஸ்கார்பியோவின் மார்க்கெட் ஆதிக்கத்தை எப்போதும் உயிர்பிப்புடன் வைத்திருக்க அவ்வப்போது மஹிந்திரா காரை அப்டேட் செய்துவிடுவதுதான் இதற்கு காரணம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 8, 2024, 23:44 [IST]
English summary
Mahindra scorpio car sales increased 4 percent in november 2024 check all details here
மேலும்... #mahindra #scorpio #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X