6 மாதங்களில் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை எங்கேயோ போய்டுச்சு! கிராமங்களில் வசிப்பவர்களும் அதிகம் வாங்கும் கார்

மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio), இந்தியாவில் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் கார்களுள் ஒன்று. 20 வருடங்களுக்கும் மேலாக விற்பனையில் இருப்பினும், இப்போதும் மக்கள் பலர் விரும்பி வாங்கக்கூடிய கார்களுள் ஒன்றாக ஸ்கார்பியோ விளங்குகிறது. குறிப்பாக, கடந்த சில வருடங்களாக, ஸ்கார்பியோ கார்களின் விற்பனை ஆனது பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதனை வெளிக்காட்டும் வகையில், இந்த 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கார்பியோ கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக மஹிந்திரா உள்ளது. கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் மஹிந்திரா இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருப்பதற்கு காரணமாக இருக்கும் கார்களுள் ஒன்று ஸ்கார்பியோ என்றால் அது மிகையில்லை. முதல்முறையாக 2002ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கிட்டத்தட்ட 22 வருடங்களாக மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளது.

mahindra scorpio cars sales report

இந்த 22 வருடங்களில் பலமுறை ஸ்கார்பியோ கார்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கடந்த 2022ஆம் ஆண்டிலும் இந்த மஹிந்திரா கார் அப்டேட் செய்யப்பட்டது. அதன் விளைவாகவே, ஸ்கார்பியோ-என் என்கிற கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மஹிந்திரா ஸ்கார்பியோவின் அடுத்த தலைமுறை காராக ஸ்கார்பியோ-என் அறிமுகம் செய்யப்பட்டது.

அதேநேரம், பழைய தலைமுறை ஸ்கார்பியோவும் ஸ்கார்பியோ கிளாசிக் என்கிற பெயரில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மாடர்னான ஸ்கார்பியோ காரை வாங்க நினைப்பவர்கள் ஸ்கார்பியோ-என் காரையும், பழமையான பெட்டகம் வடிவில் ஸ்கார்பியோ காரை நினைப்பவர்கள் ஸ்கார்பியோ கிளாசிக்கையும் வாங்கலாம். இந்த 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மொத்தம் 85,326 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

mahindra scorpio cars sales report

இந்த 85,326 ஸ்கார்பியோ கார்களில் ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என இரண்டின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கார்பியோ கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் 85,326 ஆனது சுமார் 33,290 அதிகமாகும். ஏனெனில், அந்த மாதங்களில் வெறும் 52,036 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

தற்சமயம், இந்தியாவில் மொத்தம் 15 எஸ்யூவி கார்கள் பல்வேறு கார் பிராண்ட்களில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. இவை மொத்தமாக, 2024 ஜனவரி - ஜூன் வரையில் 9 லட்சத்து 57,259 எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களின் பங்கு மட்டும் 8.91% ஆகும். அதாவது, இந்தியாவில் எஸ்யூவி கார்களை வாங்குபவர்களில் சராசரியாக 11 பேரில் ஒருவர் நிச்சயமாக ஸ்கார்பியோவை வாங்குகின்றனர்.

mahindra scorpio cars sales report

தற்சமயம், மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.85 லட்சத்தில் இருந்து ரூ.24.54 லட்சம் வரையில் உள்ளன. இசட்2, இசட்4, இசட்6 மற்றும் இசட்8 என 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஸ்கார்பியோ-என் இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அடங்குகின்றன.

மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.62 லட்சத்தில் இருந்து ரூ.17.42 லட்சம் வரையில் உள்ளன. எஸ் மற்றும் எஸ்11 என்கிற இரு விதமான வேரியண்ட்களில் ஸ்கார்பியோ கிளாசிக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 132 பிஎஸ் மற்றும் 300 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஸ்கார்பியோ கார்களின் முரட்டுத்தனமான தோற்றத்திற்காகவே இந்த கார்களை நிறைய பேர் விரும்பி வாங்குகின்றனர். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஸ்கார்பியோ கார்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்னவென்றால், இந்த காரை நகரப்புறத்தில் இருப்பவர்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களில் இருப்பவர்களும் அதிகமாக வாங்குவதாகும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 19, 2024, 21:46 [IST]
English summary
Mahindra scorpio cars sales report 2024 first half check all details here
மேலும்... #scorpio #mahindra #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X