ஸ்கார்பியோவ இன்னும் கெத்தானதா மாத்திட்டாங்க.. தீபாவளிக்காக பழைய விலையிலேயே விற்பனைக்கு வரலாம்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இந்த விழாக் காலத்தை முன்னிட்டு அதன் ஸ்கார்பியோ கிளாசிக் (Scorpio Classic) கார் மாடலில் சிறப்பு பதிப்பு ஒன்றை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதனையே தற்போது அந்நிறுவனம் வெளியீடு செய்து உள்ளது. விரைவில் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டே அந்த வாகனத்தை மஹிந்திரா வெளியீடு செய்திருக்கின்றது. ஸ்கார்பியோ கிளாசிக் பாஸ் எடிசன் (Scorpio Classic Boss Edition) எனும் பெயரிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இதன் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் விலைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதுமுக மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துக் கொண்டிருக்கின்றன. அதுதவிர, ஸ்பெஷல் எடிசன் வாகனங்களையும் வாகன உற்பத்தியாளர்கள் இந்தியாவில் களமிறக்கி வருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே மஹிந்திராவும் அதன் பங்காக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு ஸ்கார்பியோ கிளாசிக் கார் மாடலில் பாஸ் எடிசன் எனும் பதிப்பை அறிமுகம் செய்திருக்கின்றது.

Mahindra scorpio classic boss edition unveiled

இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் வழக்கமான ஸ்கார்பியோ கிளாசிக்கை-விட இது சற்று அதிகம் அழகு கூட்டப்பட்ட கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக வெளிப்புறம் மிகுந்த கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. கூடுதல் அலங்கரிப்பு வேலைகள் செய்யப்பட்டே ஸ்கார்பியோ கிளாசிக் பாஸ் எடிசனை மஹிந்திரா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

மிக முக்கியமாக காரின் சில முக்கிய இடங்களில் குரோம் பூச்சுக் கொண்ட அணிகலன்களை இந்த பாஸ் பதிப்பில் மஹிந்திரா சேர்த்திருக்கின்றது. கிரில், ஹெட்லைட், டெயில் லைட், பனி மின் விளக்கு மற்றும் டோர் ஹேண்டில் ஆகியவற்றிலேயே இதை அதிகம் பார்க்க முடிகின்றது.

Mahindra scorpio classic boss edition rear view

இத்துடன், காரின் முன் பக்கத்தில் சில்வர் ஸ்கிட் பிளேட்டுடன் கூடிய பம்பர் எக்ஸ்டென்டர், கார்பன் ஃபைரால் ஆன ஓஆர்விஎம், கருப்பு நிற ரியர் பம்பர், டோர் விஷர்கள் உள்ளிட்டவை ஸ்கார்பியோ கிளாசிக் பாஸ் எடிசனில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பதிப்பின் வெளிப்பக்கம் மட்டுமல்ல உட்பக்கமும் லேசாக கூடுதல் அழாகக்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில், கருப்பு மற்றும் பீஜ் ஆகிய இரட்டை நிறங்களால் இதன் உள்பக்கம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இருக்கை உள்ளிட்டவற்றில் கருப்பு நிறத்தையும், டேஷ்போர்டு போன்றவற்றில் பீஜ் நிறத்தையும் காண முடிகின்றது. மேலும், 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏர் கன்டிஷனிங் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் இந்த பதிப்பில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Mahindra scorpio classic boss edition front features

இதுபோன்று அழகுப்படுத்தக் கூடிய மாற்றங்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ கிளாசிக் பாஸ் எடிசனில் மேற்கொண்டிருக்கின்றது. எஞ்சின் மற்றும் பிற மெக்கானிக்கல் அம்சங்களில் அது எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வே இதிலும் வழங்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 132 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி வழக்கமான மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார் மாடல் ரூ. 13.62 லட்சம் தொடங்கி ரூ. 17.42 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதைவிட சற்று அதிக விலை அல்லது வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு இதே விலையில் இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த விழாக்காலத்தில் கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு சில முன்னணி நிறுவனங்கள் கேஷ்பேக் மற்றும் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. இதன் அடிப்படையிலேயே மஹிந்திரா நிறுவனம் இந்த சிறப்பு பதிப்பு காரை இப்போது உள்ள விலைகளிலேயே விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 18, 2024, 20:45 [IST]
English summary
Mahindra scorpio classic boss edition unveiled with enhanced features for festive season
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X