22 வருசமானாலும் வாங்குவதற்கு இப்பவும் ஆள் இருக்கு!! மஹிந்திரா கார்களில் மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து கூறி வருகிறோம். எஸ்யூவி கார்கள் பல்வேறு விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ஆகும். அதாவது, இவற்றின் நீளம் 4.4 மீட்டரில் இருந்து 4.7 மீட்டர் வரையில் இருக்கும். இத்தகைய மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் தற்போதைக்கு இந்தியாவில் 10 மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் கடந்த செப்டம்பர் மாத விற்பனை எப்படி இருந்தது? எந்த கார் முதலிடத்தை பிடித்துள்ளது என்பதை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 10 விதமான மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுள் மிகவும் குறைவாக விற்பனையாகுவது எதுவென்றால், சிட்ரோன் நிறுவனத்தின் சி5 ஏர்கிராஸ் ஆகும். நடந்து முடிந்த கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் 10வது இடத்தில் உள்ள சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் கார் கடந்த மாதத்தில் வெறும் 1 யூனிட் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது, வெறும் ஒரேயொரு சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் கார் மட்டுமே கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலாவது பரவாயில்லை, 3 சி5 ஏர்கிராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதனை விட அதிகமாக விற்பனை செய்யப்பட்டவைகளாக 9வது மற்றும் 8வது இடங்களில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மற்றும் ஹூண்டாய் டக்ஸன் கார்கள் உள்ளன. இவை இரண்டும் கடந்த மாதத்தில் முறையே 86 மற்றும் 98 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 செப்டம்பரில் இவற்றின் விற்பனை எண்ணிக்கைகள் 200 என்கிற அளவில் பதிவாகின.
7வது இடத்தில் ஜீப் காம்பஸ் 310 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. காம்பஸ் கார்களின் விற்பனையில் பெரியதாக மாற்றமில்லை. 6வது இடத்தை எம்ஜி ஹெக்டர் கார்கள் பிடித்துள்ளன. சரியாக சொல்ல வேண்டுமென்றால், 6வது இடத்திற்கு சரிந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், 2023 செப்டம்பரில் 2,653 எம்ஜி ஹெக்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பரில் 1,380 ஹெக்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதில், எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கைகள் அடங்குகின்றன. இதில் எம்ஜி ஹெக்டர் காருக்கு விற்பனையில் போட்டியாக உள்ள டாடா ஹெரியர் இந்த லிஸ்ட்டில் 1,600 கார்கள் விற்பனை உடன் 5வது இடத்திலும், ஹெக்டர் பிளஸ் காருக்கு போட்டியாக உள்ள டாடா சஃபாரி 1,644 கார்கள் விற்பனை உடன் 4வது இடத்திலும் உள்ளன. இந்த 2 டாடா கார்களின் விற்பனை எண்ணிக்கைகள் 2023 செப்டம்பரில் வெறும் 926 மற்றும் 516 ஆக பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
இந்த லிஸ்ட்டின் டாப்-3 இடத்திற்குள் 3வது இடத்தில் ஹூண்டாய் அல்கஸார் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 2,712 அல்கஸார் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பிரபலமான கிரெட்டா காரின் 6/7-சீட்டர் வெர்சனாக விளங்கும் அல்கஸார் 2023 செப்டம்பரில் 1,977 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இன்னும் குறைவாக வெறும் 1,105 அல்கஸார் கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது.

இந்த லிஸ்ட்டின் முதல் 2 இடங்களில் மஹிந்திரா கார்கள் உள்ளன. 2வது இடத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் உள்ளது. இதன் கடந்த செப்டம்பர் மாத விற்பனை எண்ணிக்கை 9,646 ஆகும். அதுவே கடந்த ஆண்டு செப்டம்பரில் 8,555 எக்ஸ்யூவி700 கார்களும், 2024 ஆகஸ்ட்டில் 9,007 எக்ஸ்யூவி700 கார்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கும் மஹிந்திரா கார், ஸ்கார்பியோ/ என் ஆகும்.
கடந்த மாதத்தில் மொத்தம் 14,438 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 செப்டம்பரில் 11,846 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு ஆகஸ்ட்டிலும் 13,787 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. மார்க்கெட்டில் தற்சமயம் ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என 2 விதமான மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே மக்கள் அதிக பேர் வாங்கும் மிட்-சைஸ் எஸ்யூவி காராக மஹிந்திரா ஸ்கார்பியோ விளங்குகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எல்லா விதமான கார்களையும் சேர்த்து பார்த்தாலும், டாப்-10 இடத்திற்குள் மஹிந்திரா ஸ்கார்பியோ உள்ளது. அதேபோல், மஹிந்திராவின் எக்ஸ்யூவி700 காரின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications









