ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா இந்த கார் இவ்வளவு தூரம் ஓடுமா? பலருக்கும் தெரியாத ஆச்சரிய தகவல்!
மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ என் காரை அறிமுகப்படுத்தி சிறப்பாக விற்பனை செய்து வருகிறது. இன்று மார்க்கெட்டில் இந்த கார் அதிகமாக விற்பனையாகி வருகிறது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வரும் நிலையில், இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு தூரம் பயணம் செய்யும் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகிறார்கள். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ என் காரை பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களிலும் விற்பனை செய்து வருகிறது. நீங்கள் எந்த இன்ஜினை தேர்வு செய்ய வேண்டும் என்பதை அதன் மைலேஜ் வைத்து முடிவு செய்ய வேண்டும் அதன் மைலேஜை தெரிந்து கொள்வதற்காக, நீங்கள் அந்நிறுவனம் ஏஆர்ஏஐ மைலேஜ் தகவல்களை வெளியிட்டு இருக்கும் அதை சோதனை செய்ய வேண்டும்.

மஹிந்திரா நிறுவனம் தனது பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டு விதமான மைலேஜ் விபரங்களையும் வெளியிட்டுள்ளன. அதன்படி நிறுவனம் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் இன்ஜின் கொண்ட மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு 12.70 கிலோ மீட்டர் மைலேஜூம், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆட்டோமேட்டிக் இன்ஜின் ஆப்ஷன் இருக்கு 12.12 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக 2.2லிட்டர் டீசல் இன்ஜின் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் வரும் கார் 15.42 கிலோமீட்டர் மைலேஜ், 2.2 லிட்டர் டீசல் ஆட்டோமேட்டிக் இன்ஜின் உடன் வரும் கார் 15.42 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மைலேஜ் விபரங்களை வைத்துக்கொண்டு நீங்கள் உங்களுக்கு டீசல் கார் சிறந்ததா? பெட்ரோல் கார் சிறந்ததா? என்பதை முடிவு செய்து கொள்ள முடியும். இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ என் காரில் 2.0 டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதில் டீசல் இன்ஜின் மட்டும் இரண்டு விதமான டியூன்களுடன் விற்பனைக்கு வருகிறது.
இதில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 23 பிஎஸ் பவரையும், 370 என்எம் டார்க் திறனை மேனுவல் கியர் பாக்ஸிலும், 380 என்எம் டார்க்கை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக டீசல் இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை இரண்டு விதமான டியூன்களில் இந்த இன்ஜின் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

அதன்படி 2.2லிட்டர் டீசல் இன்ஜின் இசட்2 மற்றும் இசட்4 வேரியண்ட்களில் 132 பிஎஸ் பவரையும், மற்ற வேரியண்ட்கள் 175பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டார்க்கை பொருத்தவரை இசட் 2 மற்றும் இசட் 4வேரியன்ட்கள் 300என்எம் டார்க் திறனையும், மற்ற வேரியன்ட்களில் மேனுவல்கியர் பாக்ஸில் 370என்எம் டார்க்கையும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸில் 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ என் காரின் விலையைப் பொறுத்தவரை ரூபாய் 13.85 லட்சம் முதல் ரூபாய் 24.54 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆகிய இரண்டு விதமான சீட்டிங் அம்சத்துடனும் விற்பனையாகி வருகிறது. மார்க்கெட்டில் உள்ள டாடா ஹாரியர், சஃபாரி, எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட பல்வேறு கார்களுக்கு போட்டியாக இந்த கார் விற்பனையாகி வருகிறது.
சமீப காலமாக குடும்பத்துடன் பயணிக்கும் வகை கார்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில், இந்த ரக கார்களை மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள். குறிப்பாக மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் கார் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற காரணமாக இருப்பதால் இதன் விற்பனை அதிகரித்து வருகிறது .இதன் காரணமாக இதன் மைலேஜ் குறித்த விபரங்களை பலர் தேடி வருகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா ஸ்கார்பியோ என் போன்ற பெரிய கார்களில் அதிக நபர்கள் ஏற்றுச் செல்லும்போது மைலேஜ் குறைவாக தான் இருக்கும். இருந்தாலும் அதிக பவர்ஃபுல்லான காராக இது இருக்கிறது. இதன் காரணமாக இந்த காரை பலர் தேர்வு செய்து வருகிறார்கள். தொடர்ந்து இந்த காரின் விற்பனை அதிகரிப்பதற்கான அனைத்து விதமான அறிகுறிகளும் தென்படுகின்றன.


Click it and Unblock the Notifications









