ஸ்கார்பியோவில் புதிய சிறப்பம்சங்கள் அறிமுகம்.. இதுக்காகவே அரசியல்வாதிகள் இந்த காரை வாங்கி குவிக்க போறாங்க!
இந்திய அரசியல்வாதிகளின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) இருக்கின்றது. அவர்களுக்கு மட்டுமல்ல இந்திய கார் காதலர்கள் பலரின் விருப்பமான கார் மாடலாகவும் மஹிந்திரா ஸ்கார்பியோ இருக்கின்றது. நகர்புற இயக்கம் மற்றும் ஆஃப்-ரோடு பயன்பாடு என அனைத்திற்கும் உகந்த வாகனமே ஸ்கார்பியோ ஆகும். இந்த கார் மாடல் தற்போது ஸ்கார்பியோ கிளாசிக் (Scorpio Classic) மற்றும் ஸ்கார்பியோ என் (Scorpio N) என இரண்டு விதமான அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது.
இந்த நிலையிலேயே ஸ்கார்பியோ என் மாடலின் பக்கம் கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு, சில சூப்பரான அம்சங்களை மஹிந்திரா நிறுவனம் அதில் கூடுதலாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் மாடலின் இசட்8 எஸ் (Z8 S) , இசட்8 (Z8) மற்றும் இசட்8 எல் (Z8 L) ஆகிய மூன்று வேரியண்டுகளிலேயே புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இதில் அதிகபட்ச புதிய சிறப்பம்சங்களை இசட்8 எல் வேரியண்டே பெற்றிருக்கின்றது. அதில், வெண்டிலேட் இருக்கைகள், தானாக டிம் ஆகும் வசதிக் கொண்ட ஐஆர்விஎம் (IRVM), ஆக்டீவ் கூலிங் வசதிக் கொண்ட ஒயர்லெஸ் சார்ஜர் மற்றும் உயர் பளபளப்பான சென்டர் கன்சோல் ஆகியவையே இந்த வேரியண்டில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
இதேபோல், இசட்8 எஸ் வேரியண்ட் மற்றும் இசட்8 ஆகிய வேரியண்டுகளில் ஒயர்லெஸ் சார்ஜர் மற்றும் உயர் பளபளப்பான சென்டர் கன்சோல் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன. இந்த அம்சங்களைப் புதிய வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்கும் பொருட்டே மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் வழங்கி இருக்கின்றது.
ஏற்கனவே இந்த மூன்று வேரியண்டுகளிலும் ஏகப்பட்ட சிறப்பு மற்றும் நவீன கால தொழில்நுட்ப அம்சங்களை மஹிந்திரா நிறுவனம் மிகவும் தாராளமாக மனதுடன் வழங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே அதன் சிறப்பம்சங்களின் எண்ணிக்கையை சற்றே அது அதிகரிக்கச் செய்திருக்கின்றது. இந்த புதிய அம்சங்களின் வாயிலாக கூடுதல் பிரீமியம் ரைடு அனுபவத்தை வாடிக்கையாளர்களால் பெற முடியும்.
ஸ்கார்பியோ கிளாசிக், பழைமை மனம் மாறாத ஓர் மடாலாகும். லேசான அப்டேட்டை மட்டும் பெற்று, ஸ்கார்பியோவிற்கே உரித்தான தோற்றத்தை அது அப்படியே கொண்டிருக்கும். ஆனால், ஸ்கார்பியோ என் அப்படி இருக்காது. இது புதிய தலைமுறை மாடல் ஆகும். உருவத்திலும், நவீன கால அம்சங்களிலும் வசதிகளிலும் பிரமாண்டமான ஒன்றாக இருக்கும்.
குறிப்பாக, தாராளமான இட வசதியை ஸ்கார்பியோ என் கொண்டிருக்கும். ஆகையால், சொகுசாக ரைடு செய்ய ஏற்ற காராக ஸ்கார்பியோ என் இருக்கின்றது. இந்த காரில் பாதுகாப்பு வசதிகளும் மிக தாராளமாக கொடுக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், மஹிந்திரா ஸ்கார்பியோ ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடலும்கூட.
இத்தகைய அதிக தரம்மிக்க காரின் தரத்தையே மேலும் அதிகப்படுத்தி இருக்கின்றது மஹிந்திரா நிறுவனம். மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் ரூ. 13.85 லட்சம் தொடங்கி ரூ. 24.54 லட்சம் வரையிலான விலையிலும், ஸ்கார்பியோ கிளாசிக் 13.61 லட்சம் தொடங்கி ரூ. 17.41 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இரண்டிற்கும் இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் இருந்து மராஸ்ஸோ காரை வெளியேற்றி இருக்கின்றது. ஆகையால், இந்த கார் விற்பனைக்குக் கிடைக்காத சூழல் தற்போது உருவாகி இருக்கின்றது. இந்த காரின் வெளியேற்றத்திற்கு பெரிய அளவில் விற்பனை வரவேற்பைப் பெறாததே காரணம் என கூறப்படுகின்றது. இதற்கேற்ப அதன் சேல்ஸ் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் சமீப காலமாக குறைந்து வந்தது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








