மினி லாரி அளவுக்கு மஹிந்திரா உருவாக்கும் புது வாகனம்!! டெஸ்ட்டிங் வேலைகள் மும்முரம்...

2025ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்அப் டிரக் (Mahindra Scorpio Pick-up Truck) வாகனம் பொது சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மஹிந்திரா காராக ஸ்கார்பியோ விளங்குகிறது. இந்த நிலையில், ஸ்கார்பியோ காரை பிக்-அப் டிரக் வெர்சனிலும் அறிமுகம் செய்ய மஹிந்திரா தயாராகி வருகிறது. இந்தியாவில் மஹிந்திரா பொலேரோ பிக்-அப் டிரக் வாகனம் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நிலையில், வெளிநாடுகளுக்காக ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் வாகனத்தை மஹிந்திரா அப்டேட் செய்கிறது.

mahindra scorpio pick-up truck spotted

ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்கின் முன்பக்கம் கிட்டத்தட்ட ஸ்கார்பியோ காரை போன்றே இருக்கும். பின்பக்கத்தில் மட்டும் ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் வாகனம் வேறுப்படும். ஏனெனில், பிக்-அப் டிரக் வாகனம் என்பதால், பின்பக்கத்தில் லோடு பெட் கொடுக்கப்படும். விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் வாகனம் ஒன்று இந்தியாவில் பொது சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் நாஷிக்கில் மஹிந்திராவின் தொழிற்சாலைக்கு அருகே இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் வாகனம் ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளில் 'எஸ்11' என்கிற பெயரில் விற்பனையில் உள்ளன. இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை. இதனால், வாகனத்தின் தோற்றம் மற்றவர்களுக்கு தெரிந்தாலும் பிரச்சனை இல்லை என எந்தவொரு மறைப்பும் இல்லாமல் ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் வாகனம் ஒன்று இந்தியாவில் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது.

mahindra scorpio pick-up truck spotted

இந்த சோதனை வாகனத்தில் 'எஸ்1100' என்கிற ஸ்டிக்கர் விண்ட்ஷீல்டில் ஒட்டப்பட்டு இருப்பதை காணலாம். இதில் இருந்து இது தென்னாப்பிரிக்க நாட்டிற்கான வாகனம் என்பதை அறிய முடிகிறது. மேலும், தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் வாகனம் ஆனது அதன் விலையுயர்ந்த டாப் வேரியண்ட் என்பதையும் அறிய முடிகிறது.

2025 மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்கை பொறுத்தவரையில், வாகனத்தின் முன்பக்கம் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் முன்பக்கத்தை அப்படியே இந்த வாகனத்திற்கு மஹிந்திரா வழங்கியுள்ளது. பழைய ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்கில் 7-ஸ்லாட்டில் கிரில் டிசைன் வழங்கப்பட்டது. ஆனால், இந்த புதிய மாடலில் 6-ஸ்லாட்ஸ் இருப்பதை காணலாம்.

mahindra scorpio pick-up truck spotted

ஹெட்லைட்கள் சில திருத்தங்களுக்கு உள்ளாகி உள்ளன. ஹெட்லைட் சிஸ்டத்தில் ஸ்மோக்டு எஃபெக்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிக்-அப் டிரக் வாகனத்தில் வீல் கவர் உடன் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனத்தின் அடிப்பகுதி சேதமடைய கூடாது என்பதற்காக ராக் ஸ்லைடர்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் பின்பக்க கதவிற்கு புல்-அப் டைப்பில் கைப்பிடி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை வாகனத்தின் 'டி140' ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதை காணலாம். இது வாகனத்தினுள் 2.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளதை குறிக்கிறது. அதிகப்பட்சமாக 140 பிஎஸ் மற்றும் 320 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் 4X2 மற்றும் 4X4 ஆப்ஷன்களில் ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் கிடைக்கிறது.

mahindra scorpio pick-up truck spotted

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 2025 மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை. இந்த வாகனம் முழுக்க முழுக்க வெளிநாட்டு மார்க்கெட்களுக்கானது ஆகும். குறிப்பாக, தென்னாப்பிரிக்க சந்தைக்காக 2025 ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் தயாராகி வருகிறது. இந்தியாவில் மஹிந்திரா பிக்-அப் டிரக்கை வாங்க விரும்புவோர் பொலேரோ பிக்-அப் டிரக்கை வாங்கலாம்.

Source: Rushlane

More from DriveSpark

Article Published On: Friday, May 24, 2024, 12:38 [IST]
English summary
Mahindra scorpio pick up truck spotted in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X