இடம் இல்லன்னு யாரயும் கஷ்டப்படுத்த வேண்டியதில்ல! 9 பேர் ஒரே கார்ல போகலாம்! மாடு மாதிரி ஆயுசுக்கும் உழைக்கும்!
இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). இந்த கார், மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) என மொத்தம் இரு மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில், மஹிந்திரா ஸ்கார்பியோ காரின், நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இது மஹிந்திரா ஸ்கார்பியோ என் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் ஆகிய 2 மாடல்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒட்டுமொத்தமாக 13,787 ஸ்கார்பியோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 9,898 ஆக மட்டுமே இருந்தது. இது 39 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப விலை 13.85 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 24.54 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து கொண்டுள்ளது.
செயல்திறனை பொறுத்தவரையில், மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களை (Engine Options) மஹிந்திரா ஸ்கார்பியோ என் கொண்டுள்ளது. இந்த காரில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் உள்ளன.

மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரானது, 13.62 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17.42 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்த கார் 7 சீட்டர் மற்றும் 9 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து கொண்டுள்ளது. இந்த காரில் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடையாது. 2.2 லிட்டர் டீசல் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரானது, டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை, கியா செல்டோஸ் (Kia Seltos), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) ஆகிய கார்களுக்கு போட்டியாக குறிப்பிடலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் இருக்க வேண்டும், அதே நேரத்தில் முரட்டுத்தனமான ஒரு எஸ்யூவி ரக காராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்கள், மஹிந்திரா ஸ்கார்பியோ காரை தேர்வு செய்யலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து.


Click it and Unblock the Notifications








