22 வருஷம் ஆகியும் கன் மாதிரி நிக்குது... ஸ்கார்பியோவ அடிக்கலாம் ஒருத்தன் பொறந்துதான் வரணும்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). இதன் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதன்படி மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 14,438 ஸ்கார்பியோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 11,846 ஆக மட்டுமே இருந்தது. அதாவது 2,592 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் கடந்த 2002ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 22 வருடங்கள் கடந்து விட்டன. இத்தனை வருடங்களுக்கு பிறகும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனையில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.

Mahindra Scorpio Classic Side View

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ காரை தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொண்டிருப்பதுதான் இதற்கு காரணம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) என தற்போதைய நிலையில் 2 மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.62 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 17.42 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Mahindra Scorpio N

மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப விலை 13.85 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 24.54 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். இதில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார், 7 சீட்டர் மற்றும் 9 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் என ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை என்பதுடன், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் இல்லை. மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து கொண்டுள்ளது. ஆனால் இந்த காரில், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் கொடுக்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா ஹாரியர் (Tata Harrier), டாடா சஃபாரி (Tata Safari), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) ஆகிய கார்களுக்கு எல்லாம் மஹிந்திரா ஸ்கார்பியோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 1, 2024, 23:51 [IST]
English summary
Mahindra scorpio sales report september 2024 price features
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+