எர்டிகாவை எட்டி உதைத்து முதலிடத்தை பிடித்த மஹிந்திரா ஸ்கார்பியோ! இது மாஸ் சம்பவம் சார்!
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் 7 சீட்டர் கொண்ட கார்களில் மாருதி எர்டிகா காரை பின்னுக்கு தள்ளிவிட்டு மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் வகையிலான 7 சீட்டர் கொண்ட வாகனங்களின் விற்பனை கணிசமான அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்து இந்த செக்மெண்டில் வாகன விற்பனை அதிகரித்து வருவதால் கடந்த சில ஆண்டுகளாக பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த செக்மெண்டில் வாகனங்களை தயார் செய்ய முடிவு செய்துள்ளனர்.

குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற வாகனமாக இது இருப்பதால் இந்த செக்மெண்டில் உள்ள வாகனங்களுக்கு சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இதில் கடைசி இரண்டு மாதங்களாக மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் தான் இந்த 7 சீட்டர் செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது.
இதற்கு முன்னர் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் தான் இந்த செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருந்தது நீண்ட ஆண்டுகளாக இந்த காரின் விற்பனையை முந்தமுடியாமல் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தவிர்த்து வந்தன. ஆனால் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் தான் இந்த செக்மெண்டில் அதிகமாக விற்பனையாக உள்ளது. மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் குறைவாக தான் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பொறுத்தவரை மொத்தம் 14,807 கார்கள் விற்பனையாகி உள்ளன. மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரை பொருத்தவரை 13,544 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இதை ஒப்பிடும்போது மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் தான் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது.
இந்தியாவில் அதிக விற்பனையான டாப் 10 கார் பட்டியலில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ காருக்கு 6வது இடம் கிடைத்துள்ளது. அந்த அளவுக்கு சிறப்பான விற்பனையை இந்த கார் பெற்றுள்ளது. நீண்ட ஆண்டுகளாக மாருதி நிறுவனத்தின் பெரிய குடும்பத்திற்கு ஏற்ற கார் என்ற மனநிலை இந்தியர்கள் மத்தியில் இருந்தது. தற்போது அது தவிடுபொடியாகியுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் மீது மக்கள் கவனம் சென்றுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ காரை பொறுத்தவரை 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 132 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இதனால் இந்த கார் பவர்ஃபுல்லான காராக இருக்கிறது. சாலையில் செல்லும்போது நல்ல பிக்கப் மற்றும் பவர் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் உட்புறத்தை பொருத்தவரை 8 இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இதுபோக பாதுகாப்பு அம்சங்களாக மல்டிபிள் ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார், ஹில் அசிஸ்டென்ட் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் உள்ளன.
இந்த காரின் விலையைப் பொறுத்தவரை ரூபாய் 13.60 லட்சம் முதல் ரூபாய் 24.54 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. மார்க்கெட்டில் உள்ள டாடா ஹாரியர், டாடா சஃபாரி, ஹுண்டாய் கிரெக்டா ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 7 சீட்டர் செக்மென்ட் சமீப ஆண்டுகளாக இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதில் ஸ்கார்பியோ காருக்கு நல்ல மவுசு கிடைத்துள்ளது. குறிப்பாக ஸ்கார்பியோ என் என்ற அறிமுகப்படுத்தப்பட்டதுக்கு, பின்னர் மக்கள் பலர் அந்த காரை வாங்க ஆர்வமாக காத்திருக்கிறார்கள். தற்போது இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் 7 சீட்டர் காராக இந்த கார் மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications









