அந்த டாடா காரு நல்லா விற்பனையாகிட்டு இருக்கே.. கூடாதே.. மஹிந்திரா நிறுவனம் சூழ்ச்சி பண்ண தொடங்கிருச்சு..

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலாக நெக்ஸான் இவி (Nexon EV) காட்சியளிக்கின்றது. டாடா மோட்டார்ஸின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் மட்டுமல்ல இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாகவும் நெக்ஸான் இவி-யே உள்ளது. இந்த கார் மாடலுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை கெடுக்கும் முயற்சியிலேயே இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் பல களமிறங்கி இருக்கின்றன. அவர்களில் ஒருவராகவே மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (Mahindra and Mahindra) நிறுவனம் மாறி உள்ளது.

இது டாடா நெக்ஸான் இவி-யை தேடி செல்லும் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கின்ற விதமான முயற்சியில் களமிறங்கி இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தெரிவிக்கின்றன. அதாவது, டாடா நெக்ஸான் இவி-க்கான போட்டி கார் மடால் ஒன்றையே மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது.

Mahindra set to launch of tata nexon ev rival

மஹிந்திராவின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO) இருக்கின்றது. இதை தழுவியே மஹிந்திரா நிறுவனம் ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலை தயார் செய்து இருப்பதாகவும், அதையே விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கு என ஓர் மிகப் பெரிய பிளானையே போட்டு இருக்கின்றது. இந்த திட்டத்தின் அடிப்படையில் அது பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை நாட்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் தொடக்கம் வருகின்ற டிசம்பர் மாதமே அரங்கேற இருக்கின்றது.

இந்த நிலையிலேயே எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மாடலை தழுவி தயார் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடல் இன்னும் ஒரு சில நாட்கள் அல்லது வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவல் எலெக்ட்ரிக் கார் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது.

இது சிறப்பம்சங்கள் விஷயத்திலும், பிரீமியம் விஷயத்திலும் தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஐசிஇ (ICE) வெர்ஷனை ஓரங்கட்டும் வகையில் எலெக்ட்ரிக் வெர்ஷன் இருக்குமாம். குறிப்பாக, இது எலெக்ட்ரிக் கார் என்பதால் பிரத்யேக வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. மிக முக்கியமாக அதன் வெளிப்பக்கம் மனம் மயக்கக் கூடியதாக இருக்கும் என தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழுமையாக மூடப்பட்ட அமைப்பில் கிரில், கன்னெக்டட் எல்இடி லைட்டுகள், செம்பால் ஆன லைன்கள் மற்றும் பேட்ஜ்கள் ஆகியவை இந்த காரின் அழகை மேலும் அழகுப்படுத்தும் விதமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது. மேலும், இதுபோன்று இன்னும் பல்வேறு தனித்துவமான கவர்ச்சிக்கான வேலைகளை இந்த கார் பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

தொடர்ந்து ரேஞ்ச் தரும் விஷயத்திலும் இந்த கார் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கும் என கூறப்படுகின்றது. அந்தவகையில், ஓர் முழு சார்ஜில் 450 கி.,மீட்டருக்கும் அதிகமான ரேஞ்சையே இந்த கார் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த தகவல்கள் எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த தகவல் மட்டுமல்ல புதிய கார் குறித்த எந்தவொரு முக்கிய தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், 34.5 kWh மற்றும் 39.4 kWh ஆகிய பேட்டரி பேக் ஆப்ஷன்கள், ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன் இந்த காரில் வழங்கப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் இந்த எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ அடிப்படையிலான எலெக்ட்ரிக் கார் மாடல் டாடா நெக்ஸான் இவி-க்கு மிகப் பெரிய போட்டியாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் மாடலுக்கு மட்டுமில்லைங்க இன்னும் பல கார் மாடல்களுக்கு இதன் வருகை போட்டியாக அமைய இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 26, 2024, 15:00 [IST]
English summary
Mahindra set to launch of tata nexon ev rival based on xuv 3x0
மேலும்... #mahindra #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+