முழுசா கண்ணுல காண்பிச்சுட்டாங்க.. ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தது வீண் போகல.. சிலையே இதோட அழகுல தோத்துபோகும்!
ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் 5 டோர் தார் ராக்ஸ் எஸ்யூவி (5 Door Thar Roxx SUV) காரின் பக்கம் ஈர்க்கின்ற பணிகளிலேயே சமீப சில காலமாக மஹிந்திரா (Mahindra) நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதற்கேற்ப இந்தியாவின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக அந்த கார் மாடல் இருக்கின்றது. அந்த கார் பற்றிய டீசர் படங்களை வெளியிட்டே இந்தியர்களின் கவனத்தை அதன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கின்றது, மஹிந்திரா. தற்போதும் தார் ராக்ஸ் காரின் டீசர் படங்களை நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது.
இம்முறை அந்த காரின் முழு உருவத்தையும் வெளிக்காட்டக் கூடிய படத்தையே அது வெளியிட்டு இருக்கின்றது. கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னரே இந்த காரின் முகப்பு பகுதியை வெளிக்காட்டக் கூடிய படங்களை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையிலேயே தற்போது ஒரு பக்கத்தை முழுமையாகக் காட்டக் கூடிய படத்தை மஹிந்திரா வெளியிட்டு உள்ளது.

இதன் வாயிலாக புதிய தார் ராக்ஸ்-இன் பக்கவாட்டு பகுதி எந்த அளவிற்கு அழகாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், புதிதாக வெளியிடப்பட்ட படங்கள் தார் ராக்ஸ் காரில் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ண தேர்வுகள் கிடைக்க இருப்பதை உறுதி செய்திருக்கின்றன.
தொடர்ந்து, முன் மற்றும் பின் டயர்களுக்கு இடையே சில்வர் நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட படி இடம்பெற இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுதவிர, டேபிள் ஃபேனின் இருக்கையைப் போன்ற தோற்றமுடைய அலாய் வீல்களும் இந்த காரை அலங்கரிக்க இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், கடைசி வரிசை இருக்கையாளர்கள் வெளிப்புறத்தை பார்க்க ஏதுவாக முக்கோண வடிவ கண்ணாடி இந்த காரில் இடம் பெற இருப்பதும் உறுதியாகி உள்ளது.

இந்த அம்சங்களே தற்போது விற்பனையில் இருக்கும் 3 டோர் தார் காரிடமிருந்து புதிய தார் ராக்ஸ் காரை வேறுபடுத்திக் காட்டக் கூடியவை ஆகும். இதுதவிர, புதிய கிரில், 'சி' வடிவ டிஆர்எல்-லால் அலங்கரிக்கப்பட்ட ஹெட்லைட், சிறிய பனி மின் விளக்கு மற்றும் முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட பம்பர் ஆகியவையும் 3 டோர் தாரிடம் இருந்து தார் ராக்ஸை வேறுபடுத்துக் காட்டும் வகையிலேயே உள்ளன.
எனவே சாலையில் தார் ராக்ஸ் பயணிக்கும்போது அதன் முன்னோடி (தார்) மாடலிலிருந்து தனித்து நிற்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. மேலும் பலரின் கவனத்தை இந்த கார் மாடல் ஈர்க்கும் என்றும் நம்பப்படுகின்றது. இதுதவிர, சில தனித்துவமான தொழில்நுட்ப வசதிகளையும் இந்த கார் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், தார் ராக்ஸ் கார் மாடலில் காற்றோட்டத்தை உறுதி செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள் (முன் பக்கத்தில்), பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) மற்றும் ஒரு பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை போன்ற அம்சங்களும் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் படங்களாலேயே இந்த அம்சங்கள் தார் ராக்ஸ்-இல் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது. தொடர்ந்து, இது 3 டோர் தார் கார் மாடலை போலவே மிக சிறன்த ஆஃப்-ரோடு திறன்களைக் கொண்ட காராக இருக்கும் என்றே கூறப்படுகின்றது. அதேவேளையில், இந்த கார் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதில் எத்தனை எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும், என்னென்ன எஞ்சின்கள் வழங்கப்படும் என்பது ஆகஸ்டு 15 ஆம் தேதி அன்றே தெரிய வரும்.
அன்றைய தினமே இந்த காரை அதிகாரப்பூர்வமாக மஹிந்திரா நிறுவனம் விற்பனை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இருப்பினும், இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் புதிய தார் ராக்ஸ் கார் மாடலில் எக்ஸ்யூவி 700 (XUV700) மற்றும் ஸ்கார்பியோ என் (Scorpio-N) ஆகிய கார் மாடல்களில் வழங்கப்படும் மோட்டார் தேர்வே வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போது 3 டோர் தார் எஸ்யூவிக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே 5 டோர் தார் ராக்ஸ் காரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதன் வருகை 3 டோர் தார் விற்பனையில் லேசாக பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பாக்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









