ஐயா எங்க கம்பெனிய வாங்கிங்கோங்கன்னு இந்திய நிறுவனத்திடம் மன்றாடும் ஐரோப்பிய நிறுவனம்! என்ன ஆச்சு தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வாகன் இந்தியா குழுமத்தின் பங்குகளை வாங்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து மஹிந்திரா நிறுவனம் தெளிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இதன்படி இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாக நமக்கு தெரிய வந்துள்ளது. விரைவில் மஹிந்திரா நிறுவனம் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட நிறுவனமாகவும், இந்நிறுவனம் இந்தியாவிலேயே வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகளுக்கு இந்திய மக்கள் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்து கூட ஏராளமான வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளும் தரமாக இருப்பதால் மக்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை விரும்பி வாங்கி வருகின்றனர்.

Mahindra Skoda Merger

இந்நிலையில் ஐரோப்பாவை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா என்ற நிறுவனத்தை நிறுவி இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது .இந்நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் வாகனங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை மிக குறைவான எண்ணிக்கையிலேயே நிறுவனம் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் தங்கள் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கு திணறி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தை வாங்கப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. சில செய்தி ஊடகங்கள் கூட இதுகுறித்து செய்திகளை வெளியிட்டன. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்த நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தின்படி "இது குறித்து எந்த முடிவுகளும் வெட்டப்படவில்லை எனவும் விரைவில் முடிவுகள் எட்டப்படும் பட்சத்தில் சரியான நேரத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்" எனவும் தெரிவித்துள்ளது.

இதன்படி பார்த்தால் மஹிந்திரா மற்றும் ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வேகன் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களின் மெர்ஜர் குறித்த செய்திகள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் இதற்கு மஹிந்திரா நிறுவனம் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் இந்த இரு நிறுவனங்களையும் சேர்ப்பது குறித்த பேச்சு வார்த்தைகள் தற்போது நடந்து வருவதாக தெரிகிறது.

ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வேகன் குழுமத்தின் 50 சதவீத பங்குகளை மஹிந்திரா நிறுவனம் கோருவதாக நமக்கு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கும் குறைவான பங்குகள் இருந்தால் மஹிந்திரா நிறுவனம் வாங்குவதற்கு தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனால் 50% பங்குகளை மஹிந்திரா நிறுவனம் வாங்கி விட்டால் ஸ்கோடா இந்தியா போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் மஹிந்திரா நிறுவனத்திடம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான முயற்சியில் தான் தற்போது அந்நிறுவனம் இறங்கி உள்ளது. நமக்கு கிடைத்ததகவலின் படி 1 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ 8358 கோடிக்கு டீல் பேசப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த டீல் வெற்றிபெறும் பட்சத்தில் டாடா நிறுவனம் எப்படி பெரிய பெரிய வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கியதோ அதே போல மஹிந்திரா நிறுவனமும் சர்வதேச அளவில் முக்கிய நிறுவனமாக மாறும்.

மஹிந்திரா மற்றும் ஸ்கோடா இந்தியா ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுமத்திற்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கையெழுத்து போடப்பட்டது. அந்த கையெழுத்தின் படி மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்மில் மஹிந்திரா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது.

இந் நிலையில் அந்த பிளாட்பார்மை பயன்படுத்தி ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகிய பிராண்டுகளுக்கும் வாகனங்களை தயாரித்து வழங்க வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து விதமான எலெக்ட்ரிக் வாகனங்களை இந்த தளத்தில் உருவாக்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் ,இதற்கான பணிகளும் ஒரு பக்கம் நடந்து வருகின்றன.

மஹிந்திராவின் இந்த இக்ளூ பிளாட்பார்ம் மூலம் அந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது. ஏற்கனவே ஐந்து கான்செப்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை இந்த பிளாட்பார்மை தயாரித்து காட்சிப்படுத்தியுள்ளது. விரைவில் இந்த கார்கள் எல்லாம் விற்பனைக்கு படிப்படியாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹந்திரா நிறுவனம் 60 முதல் 80 கிலோ வாட் ஹவர் பேட்டரி கொள்ளளவு கொண்ட வாகனங்களை இந்த பிளாட்ஃபார்மில் தயாரித்து வருகிறது.

இந்த வாகனங்கள் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது. 30 நிமிடத்தில் 0-80 சதவீதமான பேட்டரியை சார்ஜ் செய்து விடும் தொழில்நுட்பத்தில் இந்த வாகனம் எல்லாம் தயாரிக்கப்படுகிறது. இந்த வாகனம் விற்பனைக்கு வரும் பட்சத்தில் இது எலெக்ட்ரிக் வாகன உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகிய பிராண்டுகளிலும் இந்த வாகனங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் ஆகிய பிராண்டுகள் எல்லாம் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற பிராண்டுகளாக உள்ளன இந்த பிராண்டுகளில் உள்ள தயாரிப்புகளை மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள். இதற்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கும் நிலையில், இந்த நிறுவனத்தை ஒரு இந்திய நிறுவனம் வாங்குவது நிச்சயம் மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம் தான் மஹிந்திரா நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 25, 2024, 12:13 [IST]
English summary
Mahadira skoda merger speculation media report clarification
மேலும்... #mahindra #skoda #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+