மஹிந்திராவில் கார் வாங்க இனியும் வெயிட் பண்ண வேண்டாம்... விலையை குறைச்சிட்டாங்க!! பணத்தை மிச்சப்படுத்தலாம்

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று எக்ஸ்யூவி700 (XUV700) ஆகும். இதன் காரணமாகவே இந்த காரில் அவ்வப்போது புது, புது அப்டேட்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வரிசையில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலைகள் தற்போது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி இனி எவ்வளவு குறைவான விலையில் இந்த மஹிந்திரா காரை வாங்கலாம் என்பதை பற்றியும், எக்ஸ்யூவி700 காரை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மஹிந்திரா நிறுவனம் 2021ஆம் ஆண்டில் எக்ஸ்யூவி700 காரை அறிமுகம் செய்தது. அதற்கு முன்பு வரையில் விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500 காருக்கு மாற்றாக எக்ஸ்யூவி700 அறிமுகம் செய்யப்பட்டது. 2021இல் அறிமுகம் செய்யப்பட்டதற்கு பின் கடந்த 3 வருடங்களில் பலமுறை எக்ஸ்யூவி700 அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் புதியதாக வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன; அதேநேரம் சில வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளன.

mahindra slashed prices of xuv700

அதேபோல், இந்த காரின் விலைகளும் அவ்வப்போது குறைக்கப்பட்டும், அதிகரிக்கப்பட்டும் உள்ளன. அந்த வகையில், கடந்த ஜூலை மாதத்தில் எக்ஸ்யூவி700 காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களின் விலைகள் அதிரடியாக ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், எக்ஸ்யூவி700 காரின் விலை குறைவான மற்றும் மிட் வேரியண்ட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஏ.எக்ஸ்3 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை டீசல் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ரூ.20,000 குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் இந்த வேரியண்ட்டை 7-சீட்டர் ஆப்ஷனில் வாங்க வேண்டும். அதேபோல், எக்ஸ்யூவி700 காரின் ஏ.எக்ஸ்5 வேரியண்ட்டின் விலையும் டீசல் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ரூ.20,000 குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் இந்த வேரியண்ட்டை 5-சீட்டர் ஆப்ஷனில் வாங்க வேண்டும்.

mahindra slashed prices of xuv700

இதே ஏஎக்ஸ்5 டீசல் & ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் புதிய விலை 7-சீட்டர் ஆப்ஷனில் ரூ.20.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முன்பை விட ரூ.70,000 குறைவாகும். அதேநேரம், ஏ.எக்ஸ்5 டீசல் மேனுவல் 7-சீட்டர் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.50,000 குறைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நேரம் டீசல் என்ஜின் உடனான எக்ஸ்யூவி700 காரின் வேரியண்ட்களில் கொண்டுவரப்பட்டுள்ள விலை குறைப்புகளை மட்டுமே பார்த்துள்ளோம்.

அதேநேரம் பெட்ரோல் என்ஜின் உடனான எக்ஸ்யூவி700 ஏ.எக்ஸ்5 மேனுவல் 7-சீட்டர் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி உடன் கிடைக்கும் ஏ.எக்ஸ்5 மேனுவல் 7-சீட்டர் வேரியண்ட்களின் விலைகளும் தலா ரூ.50,000 குறைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி700 காரில் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 197 பிஎச்பி மற்றும் 380 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

mahindra slashed prices of xuv700

இந்த மஹிந்திரா காரில் வழங்கப்படும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 182 பிஎச்பி மற்றும் 450 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. பெட்ரோல், டீசல் என இரு என்ஜின் ஆப்ஷன்கள் உடனும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெறலாம். இந்த காரின் குறிப்பிட்ட சில வேரியண்ட்கள் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கின்றன.

எக்ஸ்யூவி700 காரில் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாக அடாஸ் வழங்கப்படுகிறது. அத்துடன், 7 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், எலக்ட்ரானிக் பார்க் பிரேக் மற்றும் ஆட்டோ பூஸ்டர் ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவையும் இந்த காரில் இடம்பெறுகின்றன. இவற்றின் மூலமாக, எக்ஸ்யூவி700 கார் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் 5-ஸ்டார் கார்களுள் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகும். அத்தகைய காரின் விலையை மஹிந்திரா குறைத்திருப்பதன் மூலம், எக்ஸ்யூவி700 காரை இன்னும் குறைவான விலையில் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக, வரும் மாதங்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை அதிகரிக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Sunday, August 18, 2024, 14:51 [IST]
English summary
Mahindra slashed prices of xuv700 entry level and mid variants all details here
மேலும்... #mahindra xuv700 #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X