காரை நேத்துதான் அறிமுகம் செஞ்சாங்க.. இன்னைக்கு மணிக்கு 64 கிமீ வேகத்துல கொண்டு வந்து மோதிட்டாங்க.. வீடியோ!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் எக்ஸ்யூவி 700 (XUV 700)-ம் ஒன்றாகும். இந்த கார் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனான எக்ஸ்இவி 9இ (XEV 9e) மாடலையே நேற்றைய (நவம்பர் 26) நிறுவனம் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது ஓர் கூபை ஸ்டைலிலான எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த காரையே மஹிந்திரா நிறுவனம் அனைவரின் முன்னிலையில் நேரடியாக கிராஷ் டெஸ்ட் (Crash Test)-க்கு உட்படுத்தி இருக்கின்றது. அந்த காரின் பாதுகாப்பு தரத்தை வெளிக்காட்டும் நோக்கிலேயே இந்த செயலை அது செய்திருக்கின்றது.

இந்தியாவில் இதுபோன்று வேறு எந்த நிறுவனம் காரை நேரடியாக கிராஷ் டெஸ்ட் செய்து காட்டியதில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. எக்ஸ்இவி 9இ காரின் முன் பக்கமே மோதலுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. மணிக்கு 64 கிமீ வேகத்திலேயே இந்த கார் மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Mahindra conducts live ev crash test

பொதுவாக வாகனங்களின் பாதுகாப்பு தரத்தை பாரத் என்சிஏபி-யே ஆய்வு செய்யும். இதுவே சமீப காலமாக இந்தியாவிற்கான கார்களை மோதல் ஆய்விற்கு உட்படுத்தி அதுகுறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மஹிந்திரா நிறுவனமே தாமாக முன் வந்து இந்த மோதல் ஆய்வை செய்திருக்கின்றது.

இந்த சோதனையானது மஹிந்திராவிற்கு சொந்தமான மஹிந்திரா பாசீவ் சேஃப்டி லேப் (Mahindra Passive Safety Lab)-பிலேயே செய்யப்பட்டது. இது தமிழகத்திலேயே அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோதல் ஆய்வின் வாயிலாக மஹிந்திராவின் புதிய எக்ஸ்இவி 9இ காரின் கட்டுமானம் மிகவும் ஸ்ட்ராங்கானது என்பது தெரிய வந்திருக்கின்றது.

இதுதவிர, இதன் பேட்டரி பேக்கின் பாதுகாப்பு தன்மையும் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் பேட்டரியின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் பல்வேறு விதமான ஆய்வுகளுக்கு உட்படுத்தி இருக்கின்றது. ஆணியை அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் மற்றும் நொறுக்கியும் அதை சோதித்து பார்த்திருக்கின்றது.

இதில் எதிலும் அது ஆபத்தான சூழலை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ அதிக பாதுகாப்பான காராக இருக்கும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிய வந்திருக்கின்றது. மிக முக்கியமாக இந்த மோதல் ஆய்வின்போது காரில் இடம் பெற்றிருந்த அனைத்து ஏர் பேக்குகளும் துள்ளியமாக விரிந்து பாதுகாப்பு வளையத்தை உருவாக்கும் விதமாக செயல்பட்டிருக்கின்றன.

இதன் அடிப்படையிலேயே பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதில் இந்த கார் தலை சிறந்ததாக இருக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் இந்த எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காருக்கு ரூ. 21.90 லட்சம் விலையை நிர்ணயம் செய்திருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ரூ. 24 லட்சத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஓர் முழு சார்ஜில் இந்த காரில் 656 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது 79 kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் தேர்விலேயே இத்தகைய அதிக ரேஞ்சைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதேவேளையில், இந்த காரில் 59 kWh பேட்டரி பேக்கும் வழங்கப்படுகின்றது. மேலும், இந்த பேட்டரி பேக்குகளை 20-80 சதவீதம் சார்ஜ் செய்ய வெறும் 20 நிமிடங்களே போதுமானது. ஆனால், 175 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் மட்டுமே இவ்வளவு அதிக வேகத்தில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தங்களுடைய கார் அதிக பாதுகாப்பானது என்பதைக் காண்பித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு மஹிந்திரா நிறுவனம் நேரடியாக எக்ஸ்இவி 9இ காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 27, 2024, 19:29 [IST]
English summary
Mahindra successfully completed india s first live electric vehicle crash test on the xuv 9e
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+