தீபாவளிக்கு பட்டாசு மாதிரி கார்கள் விற்பனையாகி இருக்கு!! மஹிந்திரா இதை எதிர்பார்த்திருக்காது!

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. கார்கள் விற்பனையில் மட்டுமின்றி, கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் மஹிந்திராவின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், மஹிந்திரா ஆரம்பத்தில் கமர்ஷியல் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்யும் நிறுவனமாக இருந்த நிலையில், இப்போது கார்கள் விற்பனையிலும் தவிர்க்க முடியாத இந்தியாவின் முன்னணி நிறுவனமாக மஹிந்திரா விளங்குகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்த வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

விவசாயத்திற்கான டிராக்டர்களை உற்பத்தி செய்வதில் இருந்து தனது பயணத்தை துவங்கிய மஹிந்திரா இன்று இந்தியாவில் மட்டுமின்றி சில வெளிநாடுகளிலும் தனது உற்பத்தி வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த அளவிற்கு கடந்த காலங்களில் இருந்து வளர்ச்சி கண்டிருக்கும் மஹிந்திரா நடந்து முடிந்த கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 54,504 கார்களை விற்பனை செய்துள்ளது.

mahindra cars sales posting growth

இது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் 25% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 43,708 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. அதுவே, கடந்த 7 மாதங்களில் (2024 ஏப்ரல்- அக்டோபர்) 3 லட்சத்து 14 ஆயிரத்து 714 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டில் இதே 7 மாதங்களில் 2 லட்சத்து 58,622 கார்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.

இந்த வகையில் பார்த்தால், கடந்த 7 மாதங்களில் மஹிந்திரா கார்கள் விற்பனை 22% அதிகரித்துள்ளது. மஹிந்திராவின் கமர்ஷியல் வாகனங்களை பொறுத்தவரையில், கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 9,826 3-சக்கர வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 9,402 மஹிந்திரா 3-வீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கடந்த 7 மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மஹிந்திரா 3-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டில் இதே 7 மாதங்களில் 48 ஆயிரத்து 628 மஹிந்திரா 3-வீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கனரக வாகனங்களை பொறுத்தவரையில், 2 டன்களுக்கு குறைவாக, 2 டன்களில் இருந்து 3.5 டன்கள் வரையில் மற்றும் 3.5 டன்களுக்கும் அதிகமான என 3 விதமான பிரிவுகளில் மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் 2 டன்களுக்கும் குறைவான எடை கொண்ட மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 3935 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் இவை 4335 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், 2 டன்களுக்கு குறைவான மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை 9% குறைந்துள்ளது. மொத்தமாக கடந்த 7 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையும் 2023ஐ விட 7% குறைந்துள்ளது.

mahindra cars sales posting growth

அதேபோல், 3.5 டன்களுக்கும் அதிகமான எடை கொண்ட வாகனங்களின் விற்பனையும் 5% கடந்த மாதத்தில் குறைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மஹிந்திராவின் 3.5 டன்களுக்கும் அதிக எடை கொண்ட வாகனங்கள் 984 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் 1031 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. மேலும், கடந்த 7 மாத விற்பனையிலும் 3.5 டன்களுக்கும் அதிகமான எடை கொண்ட மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்களின் விற்பனையும் குறைந்துள்ளது.

ஆனால், இவற்றிற்கு மத்தியில் உள்ள 2 டன்களுக்கும் அதிகமாக மற்றும் 3.5 டன்களுக்கும் குறைவான எடை கொண்ட மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த அக்டோபர் மாதத்தில் 17% அதிகரித்துள்ளது. இந்த வகை மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் கடந்த மாதத்தில் 23 ஆயிரத்து 893 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. ஆனால், 2023 அக்டோபரில் 20 ஆயிரத்து 349 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். இவை இல்லாமல் கடந்த மாதத்தில் 3,506 வாகனங்களை வெளிநாடுகளுக்கு மஹிந்திரா ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், 2023 அக்டோபரில் இதில் பாதி எண்ணிக்கையிலான வாகனங்களை மட்டுமே மஹிந்திரா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. இவ்வாறு, மஹிந்திராவின் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, வெளிநாட்டு ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 2, 2024, 23:31 [IST]
English summary
Mahindra suv cars sales posting highest ever growth of 25 percent in october 2024
மேலும்... #mahindra #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+