மாருதிக்கு ஆப்பு வைக்க மஹிந்திரா ரெடியாகிடுச்சு! இன்னும் கொஞ்ச நாள்ல இந்த கார் வரப்போகுதா?
மஹிந்திரா நிறுவனம் தனது 5 டோர் கொண்ட தார் காரை இந்தியாவில் எப்பொழுது அறிமுகப்படுத்தப் போகிறது என்ற ஒரு உத்தேச தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. இந்த காருக்காக பலர் நீண்ட நாட்களாக காத்திருக்கும் நிலையில் இந்த தகவல் தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனத்திடம் இருக்கும் ஆஃப் ரோடு எஸ்யூவி காரான மஹிந்திரா தார் கார் மக்களிடம் பெயர் பெற்ற காராக இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக இந்த கார் சிறப்பான விற்பனையில் இருக்கிறது. பலர் இந்த காரை தன் வாழ்நாளில் ஒருமுறையாவது வாங்கி பயன்படுத்தி விட வேண்டும் என ஆவலில் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த காரின் அப்டேட்டட் வெர்ஷனாக மற்றொரு புதிய கார் வரப்போகிறது.

மாருதி சுஸூகி நிறுவனம் இதே ஆஃப் ரோடு எஸ்யூவி காராக தனது ஜிம்னி காரை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. மார்க்கெட்டில் மஹிந்திரா கார் மற்றும் ஜிம்னி ஆகிய இரண்டு கார்களுக்கும் தான் மிகப்பெரிய போட்டியாக இருக்கிறது. இந்நிலையில் ஜிம்னி காருக்கும் இதற்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால் ஜிம்னி கார் ஐந்து டோர் கொண்ட காராக இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் கார் 3 டோர் கொண்ட காராக தற்போது இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் ஜிம்னி காருக்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனமும் ஐந்து டோர் கொண்ட காரை விரைவில் அறிமுகப்படுத்தும் என நீண்ட நாட்களாக பேசிய எழுந்து வந்தது. இந்நிலையில் இது குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வருகிறது. இந்தகார் ஆங்காங்கே சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தனது 5 டோர் கொண்ட தார் காருக்கு தார் ஆர்மெடா என பெயர் வைக்கும் என்ற பேச்சும் தற்போது எழுந்து வருகிறது. இதற்கிடையில் மஹிந்திரா தார் காரின் 3 டோர் வெர்ஷன் காரில் எர்த் எடிஷனை சமீபத்தில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதை தொடர்ந்து மக்கள் மத்தியில் ஐந்து டோர் கொண்ட வெர்ஷன் காரை எப்பொழுது மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் தார் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் வரும் 2026-ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கான்செப்ட் வெர்ஷன் தென்ஆப்பிரிக்காவில் காட்சிப்படுத்தப்பட்டது. அதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. முக்கியமாக இதன் வெளிப்புறத்தில் உள்ள ஹெட்லைட் உள்ளிட்ட அனைத்து லைட்டுகள் எல்லாம் மாற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த மாற்றங்கள் எல்லாம் மஹிந்திராவின் 5 டோர் காரில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த கார் 2024-ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. அதன் படி இந்த கார் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த கார் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தும்.
இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 2.2லிட்டர் எம்ஹாக் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் மற்றும் 2.0லிட்டர் எம் ஸ்டாலின் 4சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இன்ஜின் ஆப்ஷன் தான் தற்போது மூன்று டோர் வெர்ஷன் காரிலும் உள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன. இது போக ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனும் இருக்கிறது.
இதே இன்ஜின் 5 டோர் காரிலும் பொருத்தப்படும் போது அதன் டார்க் மற்றும் பவரில் எந்தவிதமான வித்தியாசமும் இருக்காது. மூன்று வெர்ஷன் காரில் இன்ஜின் பவர் மற்றும் டார்க் எவ்வளவு இருக்கிறதோ அதே தான் 5 டோர் காரிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலையை பொறுத்த வரை ரூ15 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் லேடர் பிரேமில் உருவாக்கப்படுகிறது. இதே பிரேமில் தான் ஸ்கார்பியோ என் காரும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு ஏர்பேக்குகள், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக், எலக்ட்ரானிக் சன்ரூஃப், பின்பக்கம் ஏசி வெண்ட், இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications









